சொடக்கு மேல சொடக்கு பாடல் வரிகளால் வந்த பிரச்சினை

சொடக்கு மேல சொடக்கு பாடல் வரிகளால் வந்த பிரச்சினை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sodakku songவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படம் பொங்கலுக்கு வெளியானது.

இதில் இடம்பெற்ற சொடக்கு மேல என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் இப்பாடலில் இடம்பெற்ற என்ற வரிகளான அதிகார திமிர விரட்டி விரட்டி வெளுக்க தோணுது என்ற வரியை நீக்கக்கோரி சதீஷ்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதுக்குறித்து விசாரித்த கோர்ட் சொடக்கு மேல சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.

லாரன்ஸின் காஞ்சனா-2 ரீமேக்கில் ரஜினி வில்லன் அக்ஷய்குமார்

லாரன்ஸின் காஞ்சனா-2 ரீமேக்கில் ரஜினி வில்லன் அக்ஷய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

akshay kumar in kanchana2பேய் படங்கள் என்றாலே அதற்கு சொந்தக்காரர் லாரன்ஸ் என்ற வகையில் முனி, காஞ்சனா, காஞ்சனா2 என்ற அதிரடி படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

தற்போது ஓவியா உடன் காஞ்சனா 3 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஞ்சனா 2 படத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறாராம்.

இதில் ரஜினியின் 2.0 பட வில்லன் அக்ஷய்குமார் நடிக்கவுள்ளாராம்,

இப்படத்தை ஆகஸ்ட் மாதம் முதல் லாரன்ஸ் இயக்கவிருக்கிறார்.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் காலா ரஜினிகாந்த்

சுதந்திர தினத்தை குறிவைக்கும் காலா ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala posterஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 3டி-யில் உருவாகியுள்ள படம் ‘2.0’.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இப்படத்தை ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி காத்திருக்கும் காலா படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

அண்மையில் இதன் டப்பிங் ரஜினி முடித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியுடன் இணையும் டம்ப்ஸ்மாஷ் மிருணாளினி

விஜய்சேதுபதியுடன் இணையும் டம்ப்ஸ்மாஷ் மிருணாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi and Mirunalini‘ஆரண்ய காண்டம்’ வெளியான 6 வருடத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

இதில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதில் விஜய் சேதுபதி போட்டிருக்கும் பெண் வேஷம் வைரல் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில், இதில்
டப்ஸ்மாஷ் மூலம் புகழடைந்த மிருணாளினி நடிக்கவிருக்கிறாராம்.

ஏற்கனவே ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப்படத்திலும் மிருணாளினி தோன்றியுள்ளார்.

மேலும் வரவிருக்கும் ‘நகல்’ என்ற திரைப்படத்திலும் இவர் நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டையே கலங்கடித்த கதையில் கதிர்; பூஜையுடன் தொடங்கியது!

நாட்டையே கலங்கடித்த கதையில் கதிர்; பூஜையுடன் தொடங்கியது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kathirs next project started with Poojaகதிர் நடிக்கும் புதிய படம் ! இன்று தொடங்கியது

கதிர் நடிக்கும் புதிய படம் இன்று பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார்.. இவர் ‘மன்னார் வளைகுடா’ இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர்.

ஒளிப்பதிவு பாண்டி அருணாச்சலம். இவர் ‘உறுதி கொள் ‘படத்தின் ஒளிப்பதிவாளர். இவருடன் இன்னொருவர் சரவணன் ஜெகதீனும் இணைந்துள்ளார்.

இசை நவீன் சங்கர் . இவர் ‘விசிறி’ படத்தின் இசையமைப்பாளர் .பாடல்கள் ‘சண்டிவீரன்’ புகழ் மணி அமுதன். கலை – தியாகராஜன்.நிர்வாகத் தயாரிப்பு – எம்.சேது பாண்டியன்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது…

” இது கிராமத்திலிருந்து நகரம் செல்கிற கதை.

கிராமத்திலிருக்கும் வாலிபனான நாயகன் ஒரு பெரிய பிரச்சினைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது.

நாயகன் அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டான் முடிவு என்ன என்பதே கதை. அது என்ன பிரச்சினை? சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்சினைதான் அது.

இப்படத்தின் கதையை உருவாக்கி அதற்கான சரியான நாயகன் தேடிய போது வெகு பொருத்தமாகக் கிடைத்தவர்தான் கதிர்.

அவர் கதை பிடித்து சம்மதித்தவுடன் எங்களுக்கு முழு திருப்தி.

கதிருக்கு ‘மதயானைக் கூட்டம்’ , ‘கிருமி ‘ படங்களுக்குப் பிறகு இப்படம் பெயர் சொல்லும் ஒன்றாக இருக்கும்.

தஞ்சைப் பகுதியில் தொடங்கும் படப்பிடிப்பு கடம்பூர் மலைப் பகுதி, சென்னை என்று நகர இருக்கிறது.

‘பென்ஹர்’ , ‘உழவன் மகன்’ படங்களுக்குப் பிறகு இப்படத்தில் வரும் ரேக்ளா வண்டி ரேஸ் பேசப்படும் ” என்றார் இயக்குநர் நம்பிக்கையுடன்.

Actor Kathirs next project started with Pooja

kathir next movie

எப்படியாவது வாருங்கள்; மாணவர்களை அரசியலுக்கு அழைக்கும் கமல்!

எப்படியாவது வாருங்கள்; மாணவர்களை அரசியலுக்கு அழைக்கும் கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan invites Students to Politicsசென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கமல் கலந்துக் கொண்டார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது…

மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்கள் கடமை.

நீங்கள் என்னுடன் வாருங்கள் என்று சொல்லவில்லை, எப்படியாவது வாருங்கள் என்று சொல்கிறேன்.

நான் தலைவனாக இங்கு வரவில்லை, தலைவர்களை சந்திக்கவே வந்திருக்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது அதற்காக தான் இங்கு வந்தேன்.

நீங்கள் தான் நான். தரமான கல்வி கிடைக்கிறதா என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும். வீட்டில் தண்ணீர் வராததற்கு என்ன காரணம் என்பதையும் மாணவர்கள் கவனிக்க வேண்டும்.

அமைதியாக இருந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய மகாத்மா காந்தி எனக்கு பிடித்த அரசியல் தலைவர். இவர் தவிர அம்பேத்கர், எம்ஜிஆர்., பெரியார், கருணாநிதி என பல அரசியல் தலைவர்களை பிடிக்கும்.

சும்மா இருங்கள், பேசாதீர்கள் என்பது ஜனநாயமா…? இன்றைக்கு தேவர் மகன், அன்பே சிவம் போன்ற படங்களை எடுக்க முடியாது.

பத்மாவத் படத்தின் பெயரால் மாணவர்கள் சென்ற பஸ் தாக்கப்படுகிறது. ஊழலற்ற அரசியல் என்பது சாத்தியமில்லை. சாத்தியம் என்பது சொல்ல அல்ல செயல். நாளை நமதே என்பது உங்களையும் சேர்த்து தான்.” என்று பேசினார்.

Kamalhassan invites Students to Politics

More Articles
Follows