மீண்டும் இணையும் பிரபுதேவா-நயன்தாரா; விக்னேஷ்சிவன் கோவிச்சிக்கமாட்டரா.?

மீண்டும் இணையும் பிரபுதேவா-நயன்தாரா; விக்னேஷ்சிவன் கோவிச்சிக்கமாட்டரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Vignesh Shivan accept Prabudeva Nayanthara new projectவில்லு படத்தில் பணி புரிந்த போது டைரக்டர் பிரபுதேவாவுக்கும் நாயகி நயன்தாராவுக்கும் லவ் ஆனது.

அதன்பின்னர் நயன்தாராவை திருமணம் செய்ய தன் காதல் மனைவியை விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா.

அதன்பின்னர் என்ன ஆனதோ? இவர்களின் காதல் பிரேக் அப் ஆனது.

தற்போது விக்னேஷ் சிவனுடன் நெருக்கம் காட்டி வருகிறார் நயன்தாரா.

அவரை தன் வருங்கால கணவர் என்ற முறையிலேயே ஒரு பொது மேடையில் பேசினார்.

இந்நிலையில் விசுவாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள ஒரு படத்தை பிரபுதேவா இயக்கவிருக்கிறாராம்.

இது தொடர்பாக அஜித்தை அடிக்கடி பிரபுதேவா சந்தித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.

ஒருவேளை இது உறுதியானால் இப்பட அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

சிம்பு உடன் காதல் முறிவுக்கு பின்னர் அவருடன் இணைந்து நடித்தார் நயன்தாரா.

எனவே பிரபுதேவா உடன் அவர் நிச்சயம் இணைந்து பணி புரிவார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அதெல்லாம் சரிதான். விக்னேஷ் சிவன் ஒத்துக் கொள்வாரா பாஸ்..?

Will Vignesh Shivan accept Prabudeva Nayanthara new project

nayan viki

ஒளிப்பதிவாளரை மணக்கிறார் ஜோக்கர் நாயகி காயத்ரி கிருஷ்ணன்

ஒளிப்பதிவாளரை மணக்கிறார் ஜோக்கர் நாயகி காயத்ரி கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Joker fame Gayathri Krishnan marriage news updatesராஜீமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் அனைத்து தரப்பினைரையும் கவர்ந்த படங்களில் ஒன்று.

இப்படத்தில் ரம்யா பாண்டியன் மற்றும் காயத்ரி கிருஷ்ணன் நாயகிகளாக நடித்திருந்தனர்.

தற்போது ஆண் தேவதை என்ற படத்தில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

மற்றொரு நாயகியான காயத்ரி கிருஷ்ணன் நிறைய மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கும் ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அடுத்தஆண்டு இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கவுள்ளதாம்.

Joker fame Gayathri Krishnan marriage news updates

2.0 டீசர் லீக்காச்சு; இப்போ டீ சர்ட்டும் வந்தாச்சு…

2.0 டீசர் லீக்காச்சு; இப்போ டீ சர்ட்டும் வந்தாச்சு…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca has started selling Rajini and Akshaykumars 2Point0 Official Merchandiseசிவாஜி, எந்திரன் படங்களுக்கு பிறகு ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 2.0.

ரூ. 400 கோடியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் கடந்த 2017ஆம் ஆண்டே துபாய் நாட்டில் வெளியானது.

இது முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளதால், இதன் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

இப்படத்தின் டீசர் அண்மையில் லீக்காகியது.

தற்போது இப்படம் தொடர்பான டீ சர்ட்டுகளை விற்பனையில் இறக்கியுள்ளது லைகா.

அதில் ரஜினிகாந்த் மற்றும் அக்சய்குமார் ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளது.

Lyca has started selling Rajini and Akshaykumars 2Point0 Official Merchandise

2point0 t shirt

சல்மான்கான் ஜெயிலுக்கு சென்றதால் ரூ. 1000 கோடி பிஸினஸ் பாதிப்பு

சல்மான்கான் ஜெயிலுக்கு சென்றதால் ரூ. 1000 கோடி பிஸினஸ் பாதிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Due to Salman khan arrest nearly Rs 1000 crores business affectedமான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் ஜாமீன் கேட்டுள்ளநிலையில் இந்த விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான 1000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் ரேஸ்-3 திரைப் படத்தில் நடித்து வருகிறார் சல்மான்கான்.
இதனையடுத்து தொடர்ந்து தபாங்-3, பாரத் மற்றும் கிக் – 2 ஆகிய படங்களிலும் அவர் நடிக்கவுள்ளார்.

இவையில்லாமல் சோனி டிவியில் சல்மான்கான் நடத்தும் Dus Ka Dum எனும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சில விளம்பர ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு இருக்கிறாராம் சல்மான்கான்.

Due to Salman khan arrest nearly Rs 1000 crores business affected

ரஜினி நட்பையும் காவிரியையும் ஒப்பிட்டால் நகைச்சுவையாகும்.: கமல்

ரஜினி நட்பையும் காவிரியையும் ஒப்பிட்டால் நகைச்சுவையாகும்.: கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comparing my friendship with Rajini in Cauvery issue will be humorous says Kamalசென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தமிழகமெங்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் கர்நாடகாக்காரர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு கமலும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

அவரின் ட்விட்டர் பக்கத்தில்…

கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா?

சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?” என கேள்வி கேட்டிருந்தார்.

இத்துடன் சில நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு ட்வீட்டில் கர்நாடகா மற்றும் ரஜினியுடன் தாம் கொண்டிருக்கும் நட்பை சேர்த்து ஒரு பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த நாகேஷ் எனது குரு, சரோஜா தேவி, ராஜ்குமார், ரஜினிகாந்த், அம்பரீஷ் ஆகியோர் எனது சொந்தம்.

இதையும், துணைவேந்தர் நியமனத்தையும் மத்திய, மாநில அரசுகள் ஒப்பிட கருதினால் அது நகைச்சுவையாகும்.

எப்படியிருந்தாலும், தமிழகத்திற்கு காவிரி நீர் தான் வேண்டும்” என கமல் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 11m11 minutes ago
Mr.Nagesh One of my Gurus. Mrs. S Mr. Rajkumar anna Mrs. Sarojadevi and my friends Mr. Rajnikanth and Mr. Ambresh are my own.That was a humorous quip at the central and state governments Not a swipe at the Chancellor . Nevertheless TN needs water.

Comparing my friendship with Rajini in Cauvery issue will be humorous says Kamal

சிம்பு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தாரா சிவகார்த்திகேயன்..?

சிம்பு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தாரா சிவகார்த்திகேயன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and sivakarthikeyanசிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான நெல்சன் என்பவர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கினார்.

இந்த படத்தில் தான் சிவகார்த்திகேயன் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தாராம்.

சில நாட்கள் இதன் சூட்டிங் நடைபெற்ற பின் திடீரென நின்றது.

அதன்பின் சிம்பு வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு பிறகு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்.

லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சினிமா ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்த படம் வெளியாகவுள்ளது.

More Articles
Follows