நயன்தாரா – விக்னேஷ்சிவன் கூட்டணியில் இணையும் கவின்

நயன்தாரா – விக்னேஷ்சிவன் கூட்டணியில் இணையும் கவின்

ரெளடி பிக்சர்ஸ் என்ற பெயரில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து படங்களை தயாரித்து வருகின்றனர்.

இவர்கள் தயாரித்த நெற்றிக்கண் படம் அண்மையில் வெளியானது.

தற்போது இவர்களின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம், லலித்குமாருடன் இணைந்து தயாரித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமைகளையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் கவின் கதைநாயகனாக நடிக்கவுள்ள ஒரு படத்தை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Actor Kavin’s next project with Nayanthara and Vignesh Shivan

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *