வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Actor Sivakarthikeyanசிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘வேலைக்காரன்’ என்று தலைப்பிட பட்டிருக்கிறது வேலைக்காரன் படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற தொழிலாளர் தினம் அன்றும், திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்றும் உலகமெங்கும் வெளியாகின்றது

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தொழிலாளர்கள். அந்த வகையில் ஒவ்வொரு ரசிகர்கரையும் உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் பணியை தங்களின் கடின உழைப்பால் சிறப்பாக செய்து வருகின்றனர் கலைஞர்கள். அப்படி ஒரு கலைஞனாக உருவெடுத்து, தன்னுடைய அயராத உழைப்பால் கடந்த சில வருடங்களில் வெற்றி சிகரத்தை அடைந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படத்திற்கு ‘வேலைக்காரன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று இந்த தலைப்பை பற்றிய அறிவிப்பு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் – ஆர் டி ராஜா கூட்டணியில் உருவான ‘ரெமோ’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர்கள் மீண்டும் இந்த வேலைக்காரன் படத்திற்காக, அதுவும் மோகன் ராஜா போன்ற தலைச் சிறந்த இயக்குநருடன் இணைந்து இருப்பது ரசிகர்களின் எதிரிபார்ப்பை வானளவு அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று அவர் கூறிய வாழ்த்து: “கடின உழைப்பை அழகு படுத்தும் ஒரு உன்னதமான வேலைக்காரனுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உழைப்பாளர்களின் மகிமையை பற்றி இந்த ‘வேலைக்காரன்’ எடுத்து சொல்லும்”

வேலைக்காரன் படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 25) ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டரை உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தரமான கதை, வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, சிறந்ததொரு பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் இந்த வேலைக்காரன் திரைப்படம், பாஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என பல முன்னணி நடிகர் நடிகைகளை உள்ளடக்கி இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இசையமைப்பாளர் அனிரூத், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த வேலைக்காரன் படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.

கீர்த்தி சுரேஷின் அம்மாவையும் கடத்த முயற்சித்த பாவனா கார் டிரைவர்

கீர்த்தி சுரேஷின் அம்மாவையும் கடத்த முயற்சித்த பாவனா கார் டிரைவர்

keerthy suresh and menaka sureshபிரபல நடிகையான பாவனா, ஒரு சில தினங்களுக்கு முன் அவரது கார் டிரைவரால் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லை செய்து, பின்னர் விடுவிக்கப்பட்டதையும் நாம் பார்த்தோம்.

இதுதொடர்பாக பாவனாவின் கார் டிரைவர் மற்றும் அவரது இரு நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாவனாவுக்கு ஏற்பட்ட இச்செயலை கண்டித்து மலையாள திரையுலகினர் மற்றும் தமிழ் திரையுலகினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா ஒரு தொடர்பான ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது…

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே டிரைவர் தன் மனைவி மேனகா சுரேஷையும் கடத்த முயற்சி செய்தாராம்.

ஆனால் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

அட்லி இயக்கும் விஜய் 61 படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள்

அட்லி இயக்கும் விஜய் 61 படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள்

actor vijayதெறி, பைரவா படங்களையடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிமாக விஜய் 61 என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக நித்யா மேனன் நடித்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அங்கு விஜய், நித்யா காட்சிகளை படமாக்கி வருகிறாராம் அட்லி.

பிப்ரவரி இறுதிவரை இந்த சூட்டிங் அங்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிடி-யா இது அம்மாடி…? ஆச்சரியத்தில் டைரக்டர் தனுஷ்

டிடி-யா இது அம்மாடி…? ஆச்சரியத்தில் டைரக்டர் தனுஷ்

Dhanush and Dhivya Dharshiniமுன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், முதன்முறையாக பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

இப்படம் 2017 ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் டிடி (என்ற) திவ்யதர்ஷினியை புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

Dhanush ‏@dhanushkraja
Filmed @DhivyaDharshini cameo in #powerpaandi. She performed with so much ease and confidence. Very happy and surprised. Superb DD.

அஜித்துக்கு பெருமை சேர்க்கும் ரசிகர்கள்

அஜித்துக்கு பெருமை சேர்க்கும் ரசிகர்கள்

thala ajithநடிகர்களை உண்மையாக நேசிக்கும் ரசிகர்கள், அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவ்வப்போது ரத்ததானம், அன்னதானம், கல்வி உதவிக் தொகை ஆகியவற்றை செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நம் நாட்டின் வளத்தை அழிக்கும், சீமைக்கருவேல மரங்களை பல பகுதிகளில் இளைஞர்களை வேரோடு வெட்டி சாய்த்து வருகின்றனர்.

இதை தற்போது அஜித் ரசிகர்களும் செய்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள வேலம்மாள் கல்லூரி அருகில் உள்ள பனையூர் என்ற பகுதியில் இப்பணியை அஜித் ரசிகர்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

ரஜினி-அஜித்தை தொடர்ந்து விஜய்சேதுபதி-லாரன்ஸ்

ரஜினி-அஜித்தை தொடர்ந்து விஜய்சேதுபதி-லாரன்ஸ்

Rajinikanth Ajith Raghava Lawrence Vijaysethupathiரஜினிகாந்த் நடித்த மன்னன், சந்திரமுகி, அஜித் நடித்த அசல் உள்ளிட்ட படங்களை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபு தயாரித்திருந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களை தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விஜய்சேதுபதி நடிக்க, அப்படத்தை ‘சேதுபதி’ இயக்குனர் அருண்குமார் இயக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

More Articles
Follows