தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்திக், கௌதம் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் வரலட்சுமி. இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும் விஜய்யுடன் சர்கார் படத்திலும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இத்துடன் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வெல்வெட் நகரம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் முதன்முறையாக பார்வையற்ற பெண்ணாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
முதல் முறையாக பார்வையற்ற பெண்ணாக நடிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், மிகவும் ஆவலுடன் இருப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஜே.கே இயக்கும் இந்த படத்தை சாய் சமரத் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
ஏற்கெனவே விக்ரம் வேதா மற்றும் மிஸ்டர் சந்திரமௌலி படங்களில் சாம். சிஎஸ். இசையில் வரலட்சுமி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Varalakshmi plays a blind girl in her next Tamil Movie