வடசென்னை ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்; விஷாலுடன் மோதலா.?

Dhanushs Vada Chennai set to release on 17th Octoberவிசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த படம் ‘வட சென்னை’.

சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின்

இப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

தனுஷ்- வெற்றிமாறன் இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக அக்டோபர் 17 ஆம் தேதி வெளியிட உள்ளது.

இதற்கு அடுத்த நாள் அக்டோபர் 18ஆம் தேதி தன் தயாரித்து நடித்துள்ள சண்டக்கோழி2 படத்தை வெளியிடுகிறார் விஷால்.

லிங்குசாமி இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ளனர்.

Dhanushs Vada Chennai set to release on 17th October

Overall Rating : Not available

Related News

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த…
...Read More
தன் தந்தை ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும்…
...Read More
தனுஷ் தயாரித்து நடித்திருந்த வடசென்னை படத்தை…
...Read More

Latest Post