தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’.
இப்படத்தில் மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனா இதையடுத்து ‘ஜென்டில்மேன்-2’ படத்தை தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இப்படத்தை இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.
இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார்.
கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
‘ஜென்டில்மேன்-2’ திரைப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
‘Gentleman2’ movie title video released