தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கணேஷ் பாபு இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘கட்டில்’.
நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க வைரமுத்து பாடல்கள் எழுத ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பேசியதாவது…
PRO சதீஷ் மூலம் தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கவேண்டும் என்றார்கள் முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. பப்ளி கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் போது இந்தக்கேரக்டரில் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். கணேஷ் சார் கதை சொன்ன போது இந்தக்கதாபாத்திரத்தின் கனம் புரிந்தது. தனலட்சுமி கேரக்டர் மிக வலுவானதாக இருந்தது.
எனக்கு மிகப்புதிய அனுபவமாக இருந்தது. லெனின் சார் உடன் பணிபுரிந்த அனுபவம் இன்னும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது. கேமரா மேன் ரவி சார் என்னை அழகாகக் காட்டியுள்ளார். ஶ்ரீகாந்த தேவாவ் சார் இவி கணேஷ்பாபு மூலம் தேசிய விருது வென்றிருக்கிறார் வாழ்த்துக்கள். வைரமுத்து சார், கார்கி சார் அருமையான பாடல்கள் தந்ததற்கு நன்றி. இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.
I got Kattil movie chance by pro says Shrusti Tangev