‘வாடிவாசல்’ & ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தொடர்ந்து ஷங்கர் – சூர்யா நாவல் கூட்டணி

‘வாடிவாசல்’ & ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தொடர்ந்து ஷங்கர் – சூர்யா நாவல் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோர் முயற்சி செய்தும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்க முடியவில்லை என்பது நாம் அறிந்த செய்திதான்.

தற்போது பொன்னியின் செல்வன் நாவலை பிரம்மாண்டமாக திரைப்படமாகியுள்ளார் மணிரத்னம்.

இந்த திரைப்படம் இந்த மாதம் செப்டம்பர் 30ல் வெளியாகிறது.

இந்த நிலையில் இதே போன்று மற்றொரு நாவலை படமாக்க உள்ளார் இயக்குனர் ஷங்கர்.

இதில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளாராம்.

மதுரையில் நடைபெற்ற ‘விருமன்’ பட விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் ஒரு சுவாரஸ்ய பயணம் ஆரம்பித்து விட்டதாக பேசி இருந்தார். எனவே அந்த பயணம் இதுதான் என்பதாக கூறப்படுகிறது.

கூடுதல் தகவல்..

இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் தனுஷ் – வெற்றிமாறன் ஈடுபட்டதாக முன்னதாக கூறப்பட்டது.

தற்போது வெற்றி மாறன் இயக்கி வரும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதுவும் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

சிவாவுடன் சூர்யா இணையும் படமும் 3டி-யில் சரித்திரப் படமாக உருவாகி வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை.; நடந்தது என்ன.? முதல்வர் ஆறுதல்

பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை.; நடந்தது என்ன.? முதல்வர் ஆறுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடலாசிரியரான கபிலன் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள திருப்பூர் குமரன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது மூத்த மகள் தூரிகை (28) MBA படிப்பு முடித்துவிட்டு ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இவர் மேலும், பியூட்டீஷியன், பேஷன் டிசைனிங் உள்ளிட்ட துறைகளிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

பேஷன் ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பெண்களுக்கான மேகசின் ஒன்றையும் இவர் தொடங்கி நடத்தி வந்தார்.

பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை தற்கொலை செய்துள்ளார்.

தூரிகை கபிலன் தனது அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக அவர் வீட்டிலேயே இருந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தூரிகையின் போனை பறிமுதல் செய்துள்ள அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கவிஞர் கபிலனிடம் இது குறித்து விசாரித்தார். அவருக்கு ஆறுதல் கூறினார்.

கவிஞர் கபிலன் அவர்களுடைய மகள் செல்வி தூரிகை நேற்று மரணித்தார்.

நல்லடக்கம் இன்று மாலை 3 மணியிலிருந்து 4மணிக்குள் நடைபெற்றது.

கீழுள்ள முகவரியில் தூரிகையின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

H-92,M M D A Colony
Arumbakkam,Chennai-106.
Near Vallavan Hotel Back Side,

EXCLUSIVE ‘ஹரா’ படத்தில் ரஜினி – விஜய் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர்

EXCLUSIVE ‘ஹரா’ படத்தில் ரஜினி – விஜய் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தாதா 87’ & ‘பவுடர்’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

‘பவுடர்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹரா’.

இந்த படத்தில் மோகன் மற்றும் குஷ்பு ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவை மற்றும் ஊட்டியில் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தையை இயக்குனர் விஜய்ஸ்ரீ தொடங்கி விட்டதாகவும் தகவல் வந்துள்ளன.

எனவே விரைவில் இது பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ஜாக்கி ஷராப் ஏற்கனவே ‘கோச்சடையான்’ ‘பிகில்’ ‘ஆரண்ய காண்டம்’, ‘மாயவன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jackie Shroff

பாரதிராஜா டிஸ்சார்ஜ்.; வீட்டில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் முக. ஸ்டாலின்

பாரதிராஜா டிஸ்சார்ஜ்.; வீட்டில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் முக. ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாரதிராஜா-விற்கு உடல்நிலை குறைவு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா.

அப்போது…

வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

எனத் தெரிவித்து இருந்தார் பாரதிராஜா.

இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அண்மையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தபோது தொலைபேசியில் நலம் விசாரித்து இருந்தார்.

70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி எலிசபெத் மரணம்.; ‘மருதநாயகம்’ கமல் இரங்கல்

70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி எலிசபெத் மரணம்.; ‘மருதநாயகம்’ கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரிட்டிஷ் அரசாட்சியில் 70 ஆண்டுகள் மேலாக ராணியாக அரியணையில் ஆட்சி செய்தவர் ராணி எலிசபெத்.

இவர் 96 வயதை நிறைவு செய்தவர். அவர் நேற்று காலமானார்.

உலகமே அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தன் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது..

“இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன்.

ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

‘மருதநாயகம்’ கதையை மாத்தனும் இல்லனா நடிகனை மாத்தனும்.. – கமல்

அநேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.

தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்…

இங்கிலாந்து ராணி எலிசபெத் 1997 ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது சென்னை தரமணி எம்ஜிஆர் திரைப்பட நகரில் நடந்த கமலஹாசன் கதாநாயகனாக நடிக்க “மருதநாயகம்” படத்தின் திரைப்பட தொடக்க விழாவில் கலந்துகொண்டு கமல்ஹாசனை வாழ்த்தினார்.

Marudhanayagam

மீண்டும் இணைந்தது ‘ராஜ வம்சம்’.; கதையின் நாயகன் ஆனார் யோகி பாபு

மீண்டும் இணைந்தது ‘ராஜ வம்சம்’.; கதையின் நாயகன் ஆனார் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்து பல்வேறு மக்களின் மனதில் இடம் பிடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஒரு கதாநாயகனாகவும், தன் திறமையை நிரூபித்துக் கொண்டு, தன் நடிப்பாற்றலினால் மக்களின் உள்ளத்தை தன் வசமாக்கியுள்ளார்.

தற்பொழுது அவரது நடிப்பில் கே வி கதிர்வேலுவின் எழுத்து மற்றும் இயக்கத்தில், பிரபல நடன பள்ளியான ராக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத ப்ரொடக்ஷன் நம்பர் ஒன் என்னும் திரைப்படத்தின் பூஜை, சென்னையில் நடைபெற்றது.

யோகி பாபு

இயக்குனர் கே வி கதிர்வேலு இதற்கு முன்பாக சசிகுமார் நிக்கி கல்ராணி யோகிபாபு நடிப்பில் வெளிவந்த ‘ராஜ வம்சம்’ என்னும் திரைப்படத்தை இயக்கியவர்.

இந்த விழாவில் நடிகர் சென்ராயன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் சாம்ஸ், நடிகை நிரோஷா, மற்றும் இயக்குனர் சுராஜ் போன்ற திரை பிரபலங்களும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்தினை படக்குழுவினருக்கு வெளிப்படுத்தினர்.

Yogi Babus next directed by K V Kathirvelu
commences shoot with pooja

யோகி பாபு

The star cast will soon be officially announced.

*Technical Crew*

Writer- Director- K V Kathirvelu
DOP- Prasanna Kumar
Editor- Lawrence kishor
Music- Sam CS
Art Director- Gururaj
Dance Choreography- Sandy
Stunts- Dhilip Subbarayan
PRO- Riaz K Ahmed

More Articles
Follows