Exclusive: காலா படத்தில் ரஜினிக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன உறவு.?

Exclusive: காலா படத்தில் ரஜினிக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன உறவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini samuthirakaniதனுஷ் தயாரிப்பில் உருவாகும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

ரஞ்சித் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சுகன்யா, சம்பத், ரவி கேளா, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இதில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் சமுத்திரக்கனியின் கேரக்டர் குறித்த தகவல் வந்துள்ளது.

இவர் ஈஸ்வரிராவின் சகோதரனாக நடிக்கிறாராம்.

எனவே ரஜினிக்கு சமுத்திரக்கனி மச்சான் என தெரியவந்துள்ளது.

The relationship between Rajini and Samuthirakani in Kaala

இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு டபுள் மெர்சல் ட்ரீட்

இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு டபுள் மெர்சல் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal vijay artஅட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல்.

இப்படத்தில் விஜய் ஏற்றுள்ள இரண்டு கேரக்டர்களின் ஸ்டில்கள் வெளியாகிவிட்டன.

ஆனால் 3வது ஸ்டில் பற்றிய பல செய்திகள் வந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவில்லை.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி 5 மணிக்கு இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிடவிருக்கிறார்களாம்.

இத்துடன் சிங்கிள் ட்ராக் (சாங்) வெளியாகவுள்ள தேதியை வெளியிட இருக்கிறார்களாம்.

இது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆகஸ்ட் 20ஆம் தேதி மற்ற பாடல்கள் வெளியாகிறது.

Mersal single track announcement with 3rd look poster

மிஷ்கின்-விஷால் இணைந்துள்ள துப்பறிவாளன் ரிலீஸ் தேதி

மிஷ்கின்-விஷால் இணைந்துள்ள துப்பறிவாளன் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals Thupparivaalan release date is hereமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் துப்பறிவாளன்.

விஷாலுடன் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ் .ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.

கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்ய, அருண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று பாடிய கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் பெயரைத்தான் விஷாலுக்கு இப்படத்தில் வைத்துள்ளார் மிஷ்கின்.

இந்நிலையில் இப்படத்தை செப்டம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

Vishals Thupparivaalan release date is here

ரூ.3 கோடி வித்தியாசத்தில் விவேகத்தை வீழ்த்திய மெர்சல்

ரூ.3 கோடி வித்தியாசத்தில் விவேகத்தை வீழ்த்திய மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam and mersalஅண்மைக் காலமாக தமிழ் சினிமாவின் வியாபாரம் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சக்கை போடு போட்டு வருகிறது.

இதில் ஆந்திராவுக்கு விற்பனை செய்யும் போது தெலுங்கு மொழிக்கு டப்பிங் செய்ய வேண்டும்.

மேலும் சில காட்சிகளை தெலுங்குக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும்.

ஆனால் கேரளாவில் நேரடி தமிழ் படமாக ரிலீஸ் செய்யலாம் என்பதால், கேரளாவை குறிவைத்தே சில தமிழ் படங்கள் தயாராகி வருகிறது.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள மெர்சல் மற்றும் விவேகம் படத்தின் கேரள உரிமை அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது என்பதை பார்த்தோம்.

விவேகம் படத்தின் கேரள உரிமையை புலிமுருகன் தயாரிப்பாளர் ரூ. 4.6 கோடிக்கு பெற்றிருக்கிறார்.

மெர்சல் படத்தின் கேரள உரிமையை குளோபல் யுனைட்டட் மீடியா நிறுவனம் ரூ. 7.5 கோடிக்கு பெற்றுள்ளதாம்.

கிட்டதட்ட ரூ. 3 கோடி இடைவெளியில் விவேகத்தை முந்தியுள்ளது மெர்சல் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துடன் மகேஷ்பாபுவை இணைக்க ஏஆர் முருகதாஸ் திட்டம்

அஜித்துடன் மகேஷ்பாபுவை இணைக்க ஏஆர் முருகதாஸ் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A.R. Murugadossமகேஷ்பாபு நடித்துள்ள ஸ்டைபர் படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

நாளை மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இதை வெளியிட இப்பட இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

மேலும் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலர்களை வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

அதற்கு அடுத்த நாள் அஜித் நடித்துள்ள விவேகம் படம் ரிலீஸ் ஆகிறது.

எனவே விவேகம் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ஸ்பைடர் பட டிரைலரை திரையிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இது உறுதியானால் அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் அஜித்தை தல என அழைக்க காரணமானவரே ஏஆர் முருகதாஸ்தான் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

AR Murugadoss plans to Join Spyder with Vivegam

விவேகம் சாங்ஸ் கேட்டீங்களா? அஜித்தோட பேவரைட் எது தெரியுமா.?

விவேகம் சாங்ஸ் கேட்டீங்களா? அஜித்தோட பேவரைட் எது தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hip-hop-singer-yogi-b-croons-in vivegamஅனிருத் இசையமைப்பில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் அனைத்துப்பாடல்களும் நேற்று இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இந்தப்பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் பாப் பாடகரான யோகி.பி பாடிய ’சர்வைவா’ சிங்கிள் ட்ராக் முதலில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து பாடகர் யோகி.பி கூறியதாவது…

‘ சர்வைவா பாடலை ரெகார்ட் செய்து முடித்து இயக்குநர் சிவாவுக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தார் அனிருத்.
அதை அஜித்தும், சிவாவும் கேட்டுள்ளனர்.

பின்னர் அனிருத்துக்கு போன் செய்த அஜித், ‘இந்தப்பாடல் செம எனர்ஜிட்டிக்கா இருக்கு. இதான் என்னோட பேவரைட் சாங்” என்று பாராட்டியுள்ளார் என்று யோகி.பி தெரிவித்துள்ளார்.

Do you know in Vivegam songs which is Ajiths favorite

More Articles
Follows