நாலு நாட்களில் ரூ 50 கோடியை அசால்ட்டாக அள்ளிய சிலம்பரசன்

நாலு நாட்களில் ரூ 50 கோடியை அசால்ட்டாக அள்ளிய சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘வெந்து தணிந்தது காடு’.

உடல் எடையை குறைத்து வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நடித்திருந்த இந்த படத்தை கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கியிருந்தார்.

சித்தி இத்னானி நாயகியாக நடிக்க ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஐசரி கணேசன் தயாரித்து இருந்தார்.

செப்டம்பர் 15ல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

முதல் நாளில் ரூ.11 கோடி வசூலை ஈட்டியதாகவும் 2வது நாளில் ரூ.8 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நான்கு நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 50 கோடியை வசூலித்துள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

VTK collected  Rs 50 crore in four days

‘வாத்தி’ தனுஷ் SIR கம்மிங்.; ரிலீஸ் & ரைட்ஸ் அப்டேட்

‘வாத்தி’ தனுஷ் SIR கம்மிங்.; ரிலீஸ் & ரைட்ஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி என்பவர் இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் சித்தாரா எண்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

இது தனுஷ் நடிக்கும் நேரடி தெலுங்கு படமாகும்.

தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தரும், பைனான்சியருமான அன்புச் செழியன் கைப்பற்றியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு இப்பட டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

வாத்தி

Dhanush starring ‘Vaathi’ movie Release and Rights Update

எம்ஜிஆருடன் நடித்த ஜெயகுமாரிக்கு உதவும் தமிழக அரசு.; அமைச்சர் நேரில் சந்தித்தார்

எம்ஜிஆருடன் நடித்த ஜெயகுமாரிக்கு உதவும் தமிழக அரசு.; அமைச்சர் நேரில் சந்தித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆருடன் ‘ரிக்‌ஷாக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயகுமாரி.

இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அழகும் திறமையும் இருந்தாலும் இவருக்கு பெரும்பாலும் கவர்ச்சி மற்றும் வில்லி வேடங்களே வந்தன.

தற்போது இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மோசமான நிலையில் உள்ளார்.

எனவே சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது உறவினர்களும், பெற்ற பிள்ளைகளும் இவரை கைவிட்டு விட்டனர்.

இதனை அடுத்து தனக்கு திரையுலகமும் தமிழக அரசும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்

இந்த நிலையில் நடிகை ஜெய்குமாரிக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரடியாக மருத்துவமனைக்கே சென்று ஜெயகுமாரியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

மேலும் அவருக்கு உயர்சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இத்துடன் அவருக்கு பண உதவி செய்துள்ளார்.

இத்துடன் நடிகைக்கு முதியோர் உதவி தொகை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

ஜெயகுமாரி

Tamil Nadu Govt to help Jayakumari who acted with MGR

சினிமா விமர்சகர்கள் மீது கொலவெறி தாக்குதல் நடத்தும் துல்கர் & பால்கி

சினிமா விமர்சகர்கள் மீது கொலவெறி தாக்குதல் நடத்தும் துல்கர் & பால்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமிதாப்பச்சன் தனுஷ் நடித்த ஷமிதாப் என்ற படத்தை என்ற ஹிந்தி படத்தை இயக்கியவர் பால்கி.

பாலகிருஷ்ணன் என்ற முழு பெயரை கொண்ட தமிழரான இவர் ஹிந்தி படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘CHUP’.

இந்த படத்தில் துல்கர் சல்மான், சன்னி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் இந்த வாரம் செப்டம்பர் 23ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

அப்போது துல்கர் சல்மான் பேசியதாவது…

“அண்மைக்காலமாக சினிமா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

மோசமான விமர்சனங்களால் பெரிய பட்ஜெட் படங்கள் மோசமான தோல்வியை தழுவுகிறது.

எல்லோரையும் சகட்டுமேனிக்கு திட்டுகின்றனர். என் மீதும் பலர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

விமர்சனங்கள் தேவையானவை. அவை ஒன்றும் புதிதல்ல. ஆனால் வரம்பு மீறி செல்லும்போது கண்டிப்பது கடமை.

மேலும் ஒரு பிரபலத்தை தனிப்பட்ட முறையில் ட்ரோல் செய்வதையும் ஏற்க முடியாது.” என்றார் துல்கர்.

கூடுதல் தகவல்…

திரைப்படங்களை கேவலமாக விமர்சிக்கும் விமர்சகர்களை நாயகன் கொலை செய்வதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Dulquer Salmaan  & Balki’s  murderous attack on film critics

செம அப்டேட்: மீண்டும் இணையும் இயக்குனர் வசந்தபாலன் – நடிகர் பரத்

செம அப்டேட்: மீண்டும் இணையும் இயக்குனர் வசந்தபாலன் – நடிகர் பரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன்.

இவர் இயக்கிய ‘வெயில்’ படத்தில் பரத், பசுபதி, பிரியங்கா, பாவனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த 2006ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் மூலம் தான் இசை அமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ்.

இந்த நிலையில் தற்போது வசந்தபாலன் மற்றும் பரத் கூட்டணி மீண்டும் 17 வருடங்களுக்குப் பிறகு இணைய உள்ளது.

இவர்கள் இருவரும் இணைவது வெப் சீரிஸ் என கூறப்படுகிறது. எனவே விரைவில் இது பற்றிய அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

இவையில்லாமல் ‘அநீதி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார் வசந்தபாலன். இது விரைவில் வெளியாக உள்ளது.

வசந்தபாலன் - பரத்

Vasanthapalan & Bharat join new movie after 17 years

JUST IN நல்லா வச்சி செஞ்சிட்டாங்க.; VTK THANKS MEETல் சிம்பு பேச்சு (வீடியோ)

JUST IN நல்லா வச்சி செஞ்சிட்டாங்க.; VTK THANKS MEETல் சிம்பு பேச்சு (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘வெந்து தணிந்தது காடு’.

உடல் எடையை குறைத்து வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நடித்திருந்த இந்த படத்தை கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கியிருந்தார்.

சித்தி இத்னானி நாயகியாக நடிக்க ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஐசரி கணேசன் தயாரித்து இருந்தார்.

செப்டம்பர் 15ல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. .

இந்த நிலையில் VTK THANKS MEETல் சிலம்பரசன் பேசியதாவது…

நான் என்ன பேசுறதுன்னு தெரியல…

நல்லா வச்சி செஞ்சிட்டாங்க…

சிம்பு பேசிய பேச்சு முழு விவரம் இதோ…

Silambarasan speech at Vendhu Thanindhathu Kaadu thanks meet

நல்லா வச்சி செஞ்சிட்டாங்க.. – Simbu l Gautam Menon l STR l Vendhu Thanindhathu Kaadu Thanks meet ? filmistreet
https://youtu.be/lETonO1MRYM

More Articles
Follows