‘தி கேரளா ஸ்டோரி’ மதமாற்றம் பற்றிய படமல்ல… – நடிகை அதா ஷர்மா

‘தி கேரளா ஸ்டோரி’ மதமாற்றம் பற்றிய படமல்ல… – நடிகை அதா ஷர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’.

இதில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, ‘வெந்து தணிந்தது காடு’ படப்புகழ் சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த ட்ரைலரில்…

ஒரு கல்லூரியில் படிக்கும் இந்து பெண்ணும் முஸ்லிம் பெண்ணும் தோழிகளாகின்றனர். இவர்கள் ஒரு நாள் பொது இடத்திற்கு செல்லும் போது இந்து பெண்ணின் மீது சில நபர்கள் கை வைக்கின்றனர்.

இதனையடுத்து அந்த இந்து பெண்ணுக்கு முஸ்லிம் தோழி ஒரு அட்வைஸ் சொல்கிறாள்.. ஹிஜாப் அணிந்து தன் உடலை முழுவதுமாக மூடி வந்தால் யாரும் நம்மேல் கை வைக்க மாட்டார்கள் என்கிறார்.

ஒரு கட்டத்தில் இந்து பெண்ணின் மனதை மாற்றி முஸ்லிமாக மாற்றி ஆப்கானிஸ்தான் சென்று சில தீவிரவாதி அமைப்புகளில் சேர்த்து விடுகிறார்.

இப்படியாக பல சர்ச்சைகளை பலவற்றை இந்த படம் உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்திற்கு தடை கோரிய வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.

இந்த நிலையில் இந்த படம் இன்று மே 5ம் தேதி ஹிந்தி தெலுங்கு மலையாளம் தமிழ் மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தைப்பற்றி நடிகை அடா ஷர்மா தன் சமீபத்திய பேட்டியில்..

‘கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் உள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம்.

‘தி கேரளா ஸ்டோரி’ 2 நிமிட டிரெய்லரைப் பார்த்துவிட்டு சிலர் குறை சொல்கிறார்கள். அவர்கள் நேரம் ஒதுக்கி 2 மணி நேரம் படம் பார்ப்பார்கள் என நம்புகிறேன்.

இதில் கேரளாவை மோசமாக காட்டவில்லை என்பதை புரிந்துகொள்வார்கள்.

இந்த படம் மதமாற்றம் பற்றியது அல்ல… இது பயங்கரவாதம் மற்றும் மனிதநேயம் பற்றியது. ஒவ்வொரு பெண்ணும் இந்த படத்தை பார்க்க வேண்டும்” என அடா ஷர்மா தெரிவித்துள்ளார்.

‘The Kerala Story’ is not a film about conversion – Actress Adah Sharma

நடிகை த்ரிஷா போடும் ‘தி ரோடு’.; பங்கேற்க தயாராகும் திரை பிரபலங்கள்

நடிகை த்ரிஷா போடும் ‘தி ரோடு’.; பங்கேற்க தயாராகும் திரை பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரிஷா நடிக்கும் “தி ரோட்” திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் முதல் முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது.

நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் “தி ரோட்” திரைப்படம் மிகப்பெரியப் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் இருபாகங்களுக்குப் பிறகு “தி ரோட்” திரைப்படத்தை நடிகை திரிஷா பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் “திரிஷா” மற்றும் “சார்ப்பட்டா” புகழ் டான்சிங் ரோஸ் “சபீர்”, சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “தி ரோட்”.

மேலும் இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்துள்ளார். K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“தி ரோட்” திரைப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என படத்தின் இயக்குனர் அருண் வசீகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்காக நடிகை “திரிஷா” மற்றும் படக்குழுவினர் அனைவரும் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகள், காடுகள் என மிக கடுமையான இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு மேற்க்கொண்டுள்ளதாக படக்குழு தெரிவித்தன.

மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி திரிஷா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை திரை பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get ready to be mesmerized by the Movie “The Road” 🔥 and we bring you an exclusive behind the look scenes!

🎶 👉🏻 – https://www.youtube.com/watch?v=1JD2pYZUCmw

#TheRoad
#HBDSouthQueenTrisha
#HBDTrisha

@trishtrashers
@Actorsanthosh @actorshabeer
@Arunvaseegaran1 @actorvivekpra
@SamCSmusic

@tipsofficial @idiamondbabu @akash_tweetz

Actress Trisha Podum’s ‘The Road’.; Screen celebrities getting ready to participate

JUST IN அதுவொரு தெய்வீக உணர்வு.; இளையராஜாவுடன் தருணங்கள் பற்றி ஸ்ரேயா

JUST IN அதுவொரு தெய்வீக உணர்வு.; இளையராஜாவுடன் தருணங்கள் பற்றி ஸ்ரேயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.

இந்த படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர்.

யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.

முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023 அன்று வெளியாகிறது.

இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தையும், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கல்விச் சாதனைகள் மட்டுமே முக்கியமில்லை, கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளும் என்பதை வலியுறுத்தும் இத்திரைப்படம், பொழுதுபோக்கு முறையில் இசைஞானியின் இசைக்கோர்ப்பில், 11 பாடல்களால் அழகாக விவரிக்கிறது.

அவற்றில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில், கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது.

படம் வெளியாவதையொட்டி, படக்குழு தீவிரமாக முன்வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று இயக்குநர் இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். அவருடன் உரையாடி, புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் இசைப் பள்ளியின் மற்ற நடிகர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி பிலிம்ஸ் வழங்கும் இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. பிவிஆர் இந்தி, தமிழ்ப் பதிப்புகளையும், தில் ராஜு தெலுங்கு பதிப்பையும் வெளியிடுகிறார்கள் .

இப்படம் உலகமெங்கும் 12 மே 2023 அன்று வெளியாகிறது.

இன்று மே 4ம் தேதி மாலை படக்குழுவினர் செய்தியாளர்களை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் சந்தித்து பேசினர்.

அப்போது இந்தப் படத்தின் இசை பணிகளின் போது.. “நான் இளையராஜாவை சந்தித்தேன். அது ஒரு தெய்வீக உணர்வை எனக்கு தந்தது. அந்த இடமே ஒரு ஆன்மீக இடமாக எனக்கு தோன்றியது.

இங்கே கொஞ்ச நேரம் இருக்கலாமா? என்று இளையராஜா அவரிடம் கேட்டேன்.. இருமா என்று சொல்லி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்” என தன்னுடைய தருணங்களை பகிர்ந்தார் ஸ்ரேயா.

LIVE Gorgeous & Hottest Ever Green Beauty Shriya Saran dance performance at Music School Press Meet

https://t.co/CxGBqJT144

LIVE I felt like Divine.; Shriya Saran talks about ilaiyaraaja l Music School l Prakash Raj Papa Rao

https://t.co/4q6xaPxCO1

ஸ்ரேயா சரண்

Shriya Saran talks about ilaiyaraaja

ஜெயிலரை என்னையா பண்ணி வச்சிருக்கீங்க.? நெல்சன் அனிருத்தை கலாய்க்கும் தென்னிந்திய ரசிகர்கள்

ஜெயிலரை என்னையா பண்ணி வச்சிருக்கீங்க.? நெல்சன் அனிருத்தை கலாய்க்கும் தென்னிந்திய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், தமன்னா, வசந்த் ரவி, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

‘ஜெயிலர்’ படம் 2023 தீபாவளி வெளியீடாக இருக்குமோ என பல யூகங்கள் வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 10ஆம் தேதி ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக தென்னிந்தியாவில் ரஜினி ரசிகர்களும் மோகன்லால் ரசிகர்களும் சிவராஜ் குமார் ரசிகர்களும் இந்த பின்னணி இசையை கலாய்த்து வருகின்றனர்.

யோவ் நெல்சா என்னய்யா பண்ணி வச்சிருக்கிக்க.?

யோவ் அனிருத் என்னய்யா பண்ணி வச்சிருக்க? என பல கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் அறிமுகக் காட்சி வருவதற்கு முன் தமன்னா ரம்யா கிருஷ்ணன் சுனில் மோகன்லால் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரின் கேரக்டர்கள் வருகின்றன.

அவையெல்லாம் நொடி பொழுதில் வந்து மறைகின்றன. எனவே எதையும் முழுதாக பார்க்க முடியவில்லை என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக ரஜினியின் தோற்றம் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றே தெரிகிறது.

South Indians fans trolls Nelson Anirudh in Jailer Combon

முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்தனர்

முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’.

இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.

ருக்கேஷ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனித்திருக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாக்ஷி பணியாற்றியிருக்கும் இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதி, பாடியிருக்கிறார்.

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு நரேன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. மேலும் பல சுவாரஸ்யங்களூட்டும் காட்சிகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸிடம் மிகுந்த வரவேற்பைப் பெரும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

டியர்

GV Prakash Aishwarya Rajesh starrer Dear First Look Unveiled

OFFICIAL ரஜினி மோகன்லால் தமன்னா இணையும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி

OFFICIAL ரஜினி மோகன்லால் தமன்னா இணையும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், தமன்னா, வசந்த் ரவி, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே ரஜினி ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

2023 தீபாவளி வெளியீடாக இருக்குமோ என பல யூகங்கள் வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்

rajini’s Jailer release from August 10th

More Articles
Follows