வடிவேலுவுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க..; வரிந்துக் கட்டும் தயாரிப்பாளர்கள்

vadiveluஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு 2 வேடங்களில் நடித்து 2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.

இதனையடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே படக்குழுவினருடன் வடிவேலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அவர் சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இப்படியாக இந்த பிரச்சினை நீடித்து வந்தாலும் முடிவு ஏற்படவில்லை.

இறுதியாக இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர்.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கும் பிறகும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

தற்போது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்துள்ளது.

இப்படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சொன்னதற்கு, வடிவேலு தரப்பில் எந்த ஒரு பதிலுமே வரவில்லை.

எனவே இந்த படப்பிரச்சினையை முடியும் வரை, வடிவேலுக்கு எந்த தயாரிப்பாளரும் வாய்ப்பு தரக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்து சிம்புதேவன்…
...Read More
வடிவேலு நடிக்க, சிம்புதேவன் இயக்கத்தில் டைரக்டர்…
...Read More
நடிகர் வடிவேலு காமெடிக்கு மயங்காதவர்கள் யாருமே…
...Read More
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, நாசர், இளவரசு,…
...Read More

Latest Post