இம்சை அரசன் பிரச்சினை தீரல; வெங்கட் பிரபுடன் இணையும் சிம்புதேவன்

chimbu devan and vpவடிவேலு இரண்டு வேடங்களில் நடித்து சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தை ஷங்கர் தயாரித்து இருந்தார்.

2006ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெறவே, இதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

ஆனால், வடிவேலு சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் படம் நிறுத்தப்பட்டது.

இதனால் வெறுத்துப் போன டைரக்டர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்கப் போகிறாராம்.

இப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கவுள்ளார்.

இப்படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகிறதாம்.

சிவா, ஜெய், வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜனனி, அஜய் மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Overall Rating : Not available

Related News

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு…
...Read More
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, நாசர், இளவரசு,…
...Read More

Latest Post