இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவானார் நடிகர் வடிவேலு

Comedy Actor Vadivelu became Grand Father for twinsநடிகர் வடிவேலு காமெடிக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை எனலாம்.

அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் காமெடியில் முத்திரை பதித்தவர் அவர். சில ஆண்டுகளாக அவரது படங்கள் வெளியாகவிட்டாலும் இன்றுவரை டிவிக்களில் அவரது காமெடிதான் பிரபலம்.

அண்மையில் மீண்டும் ஹீரோவாக இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்கவிருந்தார்.

ஆனால் படம் தாமதம் ஆக ஆக, அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி கோலிவுட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு வீட்டில் ஒரு சந்தோஷமான விசேஷம் நடந்துள்ளது.

அவரது மகளுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாம்.

ஒரு பெண் குழந்தை மற்றொன்று ஆண் குழந்தையாம்.

ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாத்தாவான உற்சாகத்தில் இருக்கிறாராம் இந்த வைகை புயல்.

அதே உற்சாகத்தோட சினிமாவுக்கு வந்துடுங்க சார்.. நல்லா சிரிச்சி ரொம்ப நாளாச்சு

Comedy Actor Vadivelu became Grand Father for twins

Overall Rating : Not available

Related News

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு…
...Read More
வடிவேலு நடிக்க, சிம்புதேவன் இயக்கத்தில் டைரக்டர்…
...Read More
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம்…
...Read More

Latest Post