ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையில் ‘சந்திரமுகி 2’ பட முதல் பாடல் வெளியானது

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையில் ‘சந்திரமுகி 2’ பட முதல் பாடல் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.

ஆக்சன் + காமெடி + ஹாரர் ஜானரில்
‌தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் வேட்டையனாக தோன்றும் ராகவா லாரன்ஸின் கேரக்டர் லுக்கும், சந்திரமுகியாக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் கேரக்டர் லுக்கும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஸ்வகதாஞ்சலி …’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் சைதன்ய பிரசாத் எழுத, பின்னணி பாடகி ஸ்ரீநிதி திருமலா பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் ஆடும் நடனத்தை டான்ஸ் மாஸ்டர் கலா வடிவமைத்திருக்கிறார்.

இந்தப் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் இணையத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைக்கா- ராகவா லாரன்ஸ்- கங்கணா ரணாவத்- பி வாசு -எம். எம். கீரவாணி கூட்டணியில் தயாராகி, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Swagathaanjali first single from Lycas Chandramukhi 2 released

JUST IN சத்யராஜின் தாயாரும் சிபிராஜின் பாட்டியுமான நாதாம்பாள் காலமானார்

JUST IN சத்யராஜின் தாயாரும் சிபிராஜின் பாட்டியுமான நாதாம்பாள் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை மாவட்டத்தை சேர்ந்த சத்யராஜ் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வில்லனாக உயர்ந்தார் .

அதன் பின்னர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக வளர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார்.

தற்போது சத்யராஜின் மகன் சிபிராஜும் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். சத்யராஜின் மகள் திவ்யா டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானார். நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். வயது 94.

நாதாம்பாள்

சிபி நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தில் சத்யராஜ் தயாரித்திருந்தார். இந்த பட நிறுவனத்திற்கு நாதாம்பாள் என்று பெயரிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று ஆகஸ்ட் 11 (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

தாயார் மறைவு செய்தியறிந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.

நாதாம்பாள்

Actor Sathyarajs mother passes away

‘கிக்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சர்டிபிகேட்.; ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்.!

‘கிக்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சர்டிபிகேட்.; ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, மன்சூர் அலி கான், செந்தில், பிரசாந்த் ராஜ், மனோபாலா, தம்பி ராமையா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ளது.

பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.

‘கிக்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘கிக்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

கிக்

Santhanam’s ‘Kick’ movie to release in September

பாலியல் வன்முறைகளை தடுக்கும் ‘எக்ஸ் ஆர்மி’ மேன்.; மீண்டும் இணையும் ‘யோக்கியன்’ கூட்டணி

பாலியல் வன்முறைகளை தடுக்கும் ‘எக்ஸ் ஆர்மி’ மேன்.; மீண்டும் இணையும் ‘யோக்கியன்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A Cube movies app பட நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “எக்ஸ் ஆர்மி”.

இதில் ஜெய் ஆகாஷ் எக்ஸ் மிலிட்ரி ஆபிசராக நடிக்கிறார். நாயகிகளாக அஷ்மிதா, அக்ஷாயா, இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா பிரதான வில்லனாக தினேஷ் மேட்னே நடிக்கிறார்.

இவர்களுடன் மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜெய் ஆகாஷ் கதை திரைக்கதை அமைக்கிறார்.சாய் பிரபா மீனா இயக்குகிறார். இவர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான யோக்கியன் படத்தை இயக்கியவர்.

ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில் சாய் பிரபா மீனா உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

எக்ஸ் ஆர்மி

ஆர்.ராம்குமார், சி. பி. சதீஷ் குமார் இணைந்து வழங்கும் இப்படத்தை ஏ.சி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் “ரூட்” என்ற படத்தை இயக்கி ஒளிப்பதிவு செய்தவர்.

ஜெய் விஜயம் படத்துக்கு இசை அமைத்த எஸ்.சதீஷ் குமார் இசை அமைக்கிறார். துர்காஸ் எடிட்டிங் செய்கிறார்.

புதுமையான ஸ்டன்ட் காட்சிகளை விஜய் ஜாகுவார் அமைக்கிறார். ஜோய் மதி நடனம் அமைக்கிறார்.

ராணுவத்தில் பணிபுரிந்து போரில் வீர காயத்துடன் ஓயுவு பெறும் இராணுவ வீரர் ஜெய் ஆகாஷ் நாட்டில் சிலர் பெண்களுக்கு எதிராக நடத்தும் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்களை கண்டு ஆவேசம் அடைகிறார்.

அதை தட்டி கேட்க முடிவு செய்து ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றிய எக்ஸ் ஆர்மி மேன்கள், மற்றும் போரில் காயம் அடைந்து ஊனமுற்று இன்னும் தேச பக்தியுடன் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை ஒரு படைபோல் திரட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் அக்கிரமக்காரர்களை தேடிப் பிடித்து ஜெய் ஆகாஷ் எப்படி பழிவாங்குகிறார் என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் இப்படம் சொல்கிறது.

எக்ஸ் ஆர்மி

எல்லையை காப்பாற்றியவர்கள் நாட்டுக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்டு அவர்களை எப்படி காக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு.

இப்படத்தின் தொடக்க விழா பாடல் பதிவுடன் இன்று ஆகஸ்ட் 11ம் தேதி நடந்தது. இதில் ஹீரோ ஜெய் ஆகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, பெங்களுர், மும்பையில் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் திரைக்கு வருகிறது.

எக்ஸ் ஆர்மி

Jaiakash next movie titled Ex Army started with pooja

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்..; ரசிகர்களுடன் ‘ஜவான்’ குறித்து ஷாரூக் ஜாலி உரையாடல்

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்..; ரசிகர்களுடன் ‘ஜவான்’ குறித்து ஷாரூக் ஜாலி உரையாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கானின் நடிப்பில் பரபரப்பை கிளப்பியிருக்கும், ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதற்கான ஆதாரமாக சமீபத்திய #AskSRK அமர்வு, இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் #AskSRK எனும் ஹேஸ்டேக்கில், ட்விட்டரில் தொடர்புகொள்வதால், அவருடன் ரசிகர்கள் உரையாடுவது, உண்மையில் ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவு ஷாருக்கானின் ஜவான் திரைப்பட எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. ஷாருக்கானிடம் படத்தின் கதையைக் கேட்பது முதல், அவரது கதாபாத்திரம் குறித்து கேட்பது வரை, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

#AskSRK டிவிட்டர் அமர்வில் SRK தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கியவுடன், ரசிகர்கள் தங்கள் கேள்வியுடன் வந்து, கிங்கானிடமிருந்து பல சுவாரஸ்யமான கேள்வி பதில்களால் இணையத்தை குதூகலமாக்கி வருகின்றனர்.

“ஜாவன்” திரைப்படத்திலிருந்து வெளிவந்த சுவாரஸ்யம்

இந்த அமர்வில், ரசிகரின் கேள்விக்கு மிக சுவாரஸ்யமிக்க புத்திசாலித்தனமான பதில் தந்தார் SRK, “இந்தப் படம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்… அவர்களை எப்படி மதிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது என்பதில் வலுவான கருத்தைக் கொண்டுள்ளது. #ஜவான்” என்றார்.

ஜவான் என்னவிதமான ஜானர் படம் என்பது குறித்து SRK தந்த பதில்

SRK தந்த பதில், “ஜவான் ஒரு எமோஷனல் டிராமா….#ஜவான்”

ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் குறித்து பகிர்ந்ததாவது…

இந்த அமர்வில் SRK, “@VijaySethuOffl ஒரு அற்புதமான மனிதர் மற்றும் நடிகர். உண்மையில் நடிப்பில் அவரது நுட்பமான நுணுக்கங்கள் மற்றும் அற்புதங்களை அனைவரும் படத்தில் பார்க்க வேண்டும். மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். #ஜவான்” என்று பகிர்ந்துள்ளார்.

ஜவான் அதிரடி ப்ரிவ்யூ மற்றும் வசீகரிக்கும் கேரக்டர் போஸ்டர்களால் நாட்டையே வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது, படத்தின் முதல் பாடலான ‘வந்தா எடம்’ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அட்டகாசமான விஷுவல்கள் மற்றும் SRK அசத்தலான நடனம் என இந்தி (ஜிந்தா பந்தா), தமிழ் (வந்த எடம்) மற்றும் தெலுங்கு (தும்மே துலிபேலா) ஆகிய மொழிகளில் இந்த பாடல் நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை ஆள்கிறது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Shah Rukh reply to his fans at Social Media

முதன்முறையாக கமல் – விஜய் இணையும் படத்தின் ஹாட் அப்டேட் இதோ…

முதன்முறையாக கமல் – விஜய் இணையும் படத்தின் ஹாட் அப்டேட் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இவர் தீவிர கமல்ஹாசன் ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதற்கு முன்பு கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தையும் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது உருவாகி வரும் லியோ படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

‘லியோ’ படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகத்திற்கான சீன்ஸ் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ‘லியோ’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

’லியோ’ இரண்டாம் பாகத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் லலித்தின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில் கமல் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் ‘லியோ’ படத்தை முடித்த பிறகு ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக ஒரு பேட்டியில் “அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும்” எனவும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal and Vijay joining hands together for first time

More Articles
Follows