தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.
இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோ நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக ரத்னவேலு பணிபுரிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தை வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிடப் படக்குழு தீர்மானித்து அந்த அறிவிப்பையும் 2021 நவ.19ல் வெளியிட்டது.
ஆனால் கரோனா அச்சுறுத்தலால் ரிலீசில் தள்ளி வைத்தனர்.
தற்போது இப்படத்தை வரும் மார்ச் 10ஆம் தேதி தியேட்டர்களில் உலகமெங்கும் வெளியிடப் படக்குழு தீர்மானித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சூர்யாவின் முந்தைய படங்களான ‘சூரரைப் போற்று’ & ‘ஜெய்பீம்’ ஆகிய படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகாமல் பல பிரச்னைகளை தாண்டி ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya ’s #EtharkkumThunindhavan is releasing on March 10th, 2022