சூர்யாவுக்கு ET.. சிம்புவுக்கு VTK.. தனுஷுக்கு T.; அஜித் 61 படத்துக்கு TT

சூர்யாவுக்கு ET.. சிம்புவுக்கு VTK.. தனுஷுக்கு T.; அஜித் 61 படத்துக்கு TT

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் அஜித் நடித்து வரும் அவரின் 61வது படத்தை இயக்கி வருகிறார் வினோத்.

இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில் இந்தப் படத்தில் டைட்டில் என்ன என ரசிகர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘துணிவே துணை’ என டைட்டில் வைக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.

துணிவே துணை படத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக டிடி என்று கூறலாம். இதை எழுத்து உடைய சில படங்கள் சமீபத்தில் வந்தன. சூர்யாவுக்கு எதற்கும் துணிந்தவன் (ET).. விஜய்க்கு துள்ளாத மனமும் துள்ளும் (TMT).. சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு (VTK) தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் (T) ஆகியவை குறிப்பிடத்தக்கது.

துணிவே துணை

Ajith 61 movie title may be Thunivae Thunai

JUST IN – 100 கோடியானாலும் என்கிட்ட நடக்காது; PART 2 படம் எடுப்பவர்களை கிழித்தெடுத்த ராமராஜன்

JUST IN – 100 கோடியானாலும் என்கிட்ட நடக்காது; PART 2 படம் எடுப்பவர்களை கிழித்தெடுத்த ராமராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980-களில் கமல் – ரஜினி படங்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தன. ஆனால் அவர்களுக்கே பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நடிகர் மோகன் மற்றும் ராமராஜன் ஆகியோரது படங்களின் வெற்றி உருவானது.

ஆனால் 1990 களில் இறுதியில் இருந்து இருவரும் அவ்வளவாக சினிமாவில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் நடிகர் ராமராஜன் தற்போது ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த புதிய படத்தில் எம் எஸ் பாஸ்கர், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சிம்பு, ஹன்சிகா நடித்த மகா படத்தை தயாரித்த மதியழகன் இந்த படத்தை தனது 14வது படைப்பாக தயாரிக்கிறார். இந்தப் படத்தை ராகேஷ் என்பவர் இயக்குகிறார்

இந்தப் படத்திற்கு ‘சாமானியன்’ என்று தலைப்பு வைத்துள்னர். இன்று இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் மிகப் பிரம்மாண்டமாக படகுழு நடத்தியது.

இந்த விழாவில் ராதாரவி பேசும் போது…

” 30 வருடங்களுக்கு முன்பு நானும் ராமராஜனும் இணைந்து நடித்தோம். தற்போதும் அதே அழகுடன் உள்ளார். ஒருமுறை ராமராஜன் தலைமுடியை ஒரிஜினலா என்று பரிசோதனை செய்தார் கமல்ஹாசன்.

ஆனால் தற்போதும் அதே அழகான முடியுடன் வலம் வருகிறார் ராமராஜன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”

இறுதியாக ராமராஜன் பேசியபோது…

“என்னை இத்தனை வருடங்களாக வாழ வைத்துக் கொண்டிருப்பது என்னுடைய ரசிகர் மன்றங்கள் தான்.

திடீரென இந்த விழா ஏற்பாடு நடந்ததால் சில மன்றங்களை மட்டுமே அழைத்தேன். மற்றொரு விழாவை மதுரையில் நடத்தலாம் என்று நினைக்கிறோம். அந்த விழாவில் என் ரசிகர் மன்றங்களை அழைப்பேன்.

ஒரு தம்பதிக்கு முதலில் ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு பெயர் வைப்பார்கள். இரண்டாவது குழந்தை பிறந்தால் அதற்கு வேறு ஒரு பெயர் தான் வைப்பார்கள். நம்பர் 2 என்று வைக்க மாட்டார்கள். அதுபோல தான் சினிமாவிற்கு பெயர் வைப்பதும். இப்போது பார்ட் 2.. நம்பர் 2 என்று வைக்கிறார்கள். அது சரியில்லை.

இந்த படத்திற்கு சாமானியன் என்று பெயர் வைத்துள்ளார்கள். நான் மக்களோடு கலந்திருப்பவன். இந்த டைட்டில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இப்போ 100 கோடி நடிகர்களுக்கு கொடுக்கிறார்கள். ஆனால் எனக்கு 100 கோடி கொடுத்தாலும் நான் தாய்மார்களை இழிவு படுத்துமாறு நடிக்க மாட்டேன். என் படங்களில் தீய பழக்கங்கள் காட்சிகளை காட்ட மாட்டேன்” என பரபரப்பாக பேசினார் ராமராஜன்.

ராமராஜன்

100 கோடி கொடுத்தாலும் அது நடக்காது; PART 2 படம் எடுப்பவர்களை கிழித்தெடுத்த ராமராஜன் Saamaniyan
https://www.youtube.com/watch?v=BSsSIjIHkAw

Ramarajan mass speech at Saamaniyan Teaser launch

OFFICIAL தனுஷுக்கு ஜோடியாகும் சூர்யா – சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

OFFICIAL தனுஷுக்கு ஜோடியாகும் சூர்யா – சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ஒருவர் பிரியங்கா மோகன்.

இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ & ‘டான்’ உள்ளிட்ட படங்களின் நடித்திருந்தார்.

சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

மேலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் பிரயங்கா.

இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கம் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்த செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரியங்கா மோகன்

Priyanka Mohan teams up with Dhanush for Captain Miller

நாலு நாட்களில் ரூ 50 கோடியை அசால்ட்டாக அள்ளிய சிலம்பரசன்

நாலு நாட்களில் ரூ 50 கோடியை அசால்ட்டாக அள்ளிய சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘வெந்து தணிந்தது காடு’.

உடல் எடையை குறைத்து வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நடித்திருந்த இந்த படத்தை கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கியிருந்தார்.

சித்தி இத்னானி நாயகியாக நடிக்க ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஐசரி கணேசன் தயாரித்து இருந்தார்.

செப்டம்பர் 15ல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

முதல் நாளில் ரூ.11 கோடி வசூலை ஈட்டியதாகவும் 2வது நாளில் ரூ.8 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நான்கு நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 50 கோடியை வசூலித்துள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

VTK collected  Rs 50 crore in four days

‘வாத்தி’ தனுஷ் SIR கம்மிங்.; ரிலீஸ் & ரைட்ஸ் அப்டேட்

‘வாத்தி’ தனுஷ் SIR கம்மிங்.; ரிலீஸ் & ரைட்ஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி என்பவர் இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் சித்தாரா எண்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

இது தனுஷ் நடிக்கும் நேரடி தெலுங்கு படமாகும்.

தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தரும், பைனான்சியருமான அன்புச் செழியன் கைப்பற்றியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு இப்பட டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

வாத்தி

Dhanush starring ‘Vaathi’ movie Release and Rights Update

எம்ஜிஆருடன் நடித்த ஜெயகுமாரிக்கு உதவும் தமிழக அரசு.; அமைச்சர் நேரில் சந்தித்தார்

எம்ஜிஆருடன் நடித்த ஜெயகுமாரிக்கு உதவும் தமிழக அரசு.; அமைச்சர் நேரில் சந்தித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆருடன் ‘ரிக்‌ஷாக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயகுமாரி.

இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அழகும் திறமையும் இருந்தாலும் இவருக்கு பெரும்பாலும் கவர்ச்சி மற்றும் வில்லி வேடங்களே வந்தன.

தற்போது இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மோசமான நிலையில் உள்ளார்.

எனவே சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது உறவினர்களும், பெற்ற பிள்ளைகளும் இவரை கைவிட்டு விட்டனர்.

இதனை அடுத்து தனக்கு திரையுலகமும் தமிழக அரசும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்

இந்த நிலையில் நடிகை ஜெய்குமாரிக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரடியாக மருத்துவமனைக்கே சென்று ஜெயகுமாரியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

மேலும் அவருக்கு உயர்சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இத்துடன் அவருக்கு பண உதவி செய்துள்ளார்.

இத்துடன் நடிகைக்கு முதியோர் உதவி தொகை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

ஜெயகுமாரி

Tamil Nadu Govt to help Jayakumari who acted with MGR

More Articles
Follows