விஜய் இல்லன்னா ரெட் ஜெயன்ட் இல்ல.: ‘டான் & எதற்கும் துணிந்தவன்’ படங்கள் லாபமே – உதயநிதி

விஜய் இல்லன்னா ரெட் ஜெயன்ட் இல்ல.: ‘டான் & எதற்கும் துணிந்தவன்’ படங்கள் லாபமே – உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் தயாரிப்பு.. ஒரு பக்கம் விநியோகம்… ஒரு பக்கம் நடிப்பு.. ஒரு பக்கம் அரசியல் என பன்முகத் திறமை காட்டி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

சினிமாவை பொருத்தவரை படங்களை தயாரிப்பதிலும் விநியோகிப்பதிலும் முன்னணி நிறுவனமாக ரெட் ஜெயன்ட் விளங்கி வருகிறது.

இந்த நிலையில் உதயநிதி ஹீரோவாக நடிக்க தொடங்கி 10 வருடங்கள் ஆன நிலையில் நேற்று நவம்பர் 11ல் ரசிகர்களை சந்தித்தார்.

இது தொடர்பான விழாவில் உதயநிதி பேசும்போது…

“விஜய் நடித்த ‘குருவி’ படத்தை தான் முதன் முதலில் விநியோகம் செய்தோம். விஜய் இல்லனா ரெட் ஜெயன்ட் நிறுவனம் இல்லை.

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ & சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ ஆகிய படங்கள் தங்களுக்கு நல்ல லாபத்தை தந்தது” என உதயநிதி பேசினார்.

‘மொச்ச கொட்ட பல்லழகி..’ பாடல் மெட்டுதான் ‘ரஞ்சிதமே’.; சூப்பர் விளக்கமளித்த பாடலாசிரியர் விவேக்

‘மொச்ச கொட்ட பல்லழகி..’ பாடல் மெட்டுதான் ‘ரஞ்சிதமே’.; சூப்பர் விளக்கமளித்த பாடலாசிரியர் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’.

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ் & தெலுங்கில் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரஞ்சிதமே….’ என்ற பாடலை இணையத்தில் வெளியிட்டனர்.

இந்தப் பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி பாடியிருந்தனர்.

இந்த பாடல் இதுவரை 4 கோடி பார்வையாளர்களை சென்று அடைந்துள்ளது.

இந்தப் பாடல் & நடனம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் போட்ட நடன அசைவுகளை அப்படியே காப்பி அடித்துள்ளார் நடன இயக்குனர் ஜானி என நெட்டிசன் என்ற வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். 2 பாடல்களையும் ஒப்பிட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் 1994ல் உளவாளி படத்தில் இடம்பெற்று தமிழில் வெளியான ‘மொச்ச கொட்ட பல்லழகி.. முத்து முத்து சொல்லழகி…’ என்ற பாடலின் மெட்டும் ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலின் மெட்டும் ஒரே போல உள்ளது எனவும் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பாடல் ஆசிரியர் விவேக் பதில் அளித்துள்ளார்..

அந்த பேட்டியில்…

“ஒரு மெட்டை தொடர்ந்து பல மெட்டுக்கள் அதுபோல உருவெடுக்கும்..

மொச்ச கொட்ட பல்லழகி… என்ற பாடல் 90களில் வெளியானது.. அதன் பின்னர் ‘சிலம்பாட்டம் படத்தில்.. பார்ட்டிக்கு போகலாமா..’ என்ற பாடலும் ‘தர்மதுரை படத்தில் மக்க கலங்குதப்பா…’ ஆகிய பாடல்களும் இதே போல இருக்கும்.

நான் வாரிசு படத்தில் வசனங்களையும் எழுதியுள்ளேன். எனவே ரஞ்சிதமே பாடலை எழுதும் போதும் இந்த மொச்ச கொட்ட பல்லழகி பாடலை தமனிடம் சொன்னேன்…

அவரும் ஒப்புக் கொண்டே காட்சிகளை வைத்தோம். மொச்ச கொட்ட பல்லழகி என்ற பாடலுக்கான காரணத்தையும் காட்சிகளாக வைத்துள்ளோம். படம் வரும்போது புரியம்.” என தெரிவித்துள்ளார் விவேக்..

அடடடா.. அவசரப்பட்டு நாமதான் ஏதோ சொல்லிட்டோமோ..??!!

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid028oPkM7Pf35w21DEMAvrGGGkfRWS9Bne2Wv7raExQNV4cnVCY8C2EPM8ZuvkDyryGl&id=100036368776950&sfnsn=wiwspwa

வீட்டில் வேலை செய்த திருடன்.; நடிகை போலீசில் புகார்.; மீடியாவுக்கு எச்சரிக்கை!

வீட்டில் வேலை செய்த திருடன்.; நடிகை போலீசில் புகார்.; மீடியாவுக்கு எச்சரிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன.

இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் ‌அவதாறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது.

இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை‌ விடுக்கப்பட்டிருக்கிறது.

(நம் FILMISTREET தளத்தில் இது போன்ற செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

இதனிடையே நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த நபர், வீட்டிலிருந்து ஆறு லட்சம், மூன்று லட்சம் என லட்ச கணக்கில் மதிப்புள்ள கை கடிகாரங்களையும் மற்றும் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் திருடி இருக்கிறார் என்பதும், அவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actress Parvati nair filed police complaint and warns Media

Actress @paro_nair, who has filed a police complaint against a person working in her household for stealing costly gadgets from her home, has said defamation suits will be filed against those media organisations that look to distort the truth and defame her.

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பிரதமர்.; மோடிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வழங்கிய ஸ்டாலின்

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பிரதமர்.; மோடிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வழங்கிய ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

எனவே இதன் பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. மேலும் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழாவும் இன்று நடைபெற்றது.

இந்த இருவிழாக்களிலும் பாரத பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து அதன்பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கலுக்கு வருகை தந்தார் பிரதமர்.

அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.

அப்போழுது பிரதமரை வரவேற்ற ஸ்டாலின் பொன்னியின் செல்வன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பரிசளித்தார்.

இன்றைய விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு காந்தி கிராம பல்கலைகழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார்.

Stalin gift modi ponniyin selvan books and ilaiyaraaja receives honor doctor from PM

ஃப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் ‘துணிவு’ படத்தை துவம்சம் செய்த ‘வாரிசு’.; முழு தகவல்கள்

ஃப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் ‘துணிவு’ படத்தை துவம்சம் செய்த ‘வாரிசு’.; முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு ஆகிய இரு படங்களும் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜயின் படமும் அஜித்தின் படமும் ஒரே நாளில் மோத உள்ளதால் இரு தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படத்தின் வியாபாரம் & விநியோக உரிமை பற்றிய தகவல் கிடைத்துள்ளன.

அதன் விவரம்…

விஜய்யின் ‘வாரிசு’ பட தமிழக விநியோக உரிமை மட்டும் 65 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

அஜித் நடித்த ‘துணிவு’ படமும் 60 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகி உள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு படம் 8 கோடிக்கும் துணிவு படம் ஆறு கோடிக்கும விற்பனை.

கேரளாவில் வாரிசு படம் ஆறு கோடிக்கும் துணிவு படம் 5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

கன்னடத்தில் துணிவு படம் 5 கோடிக்கும் வாரிசு படம் 4 கோடிக்கும் விற்பனை.

வட இந்தியாவில் பாலிவட்டில் துணிவு படம் 10 கோடிக்கும் வாரிசு படம் 8 கோடிக்கும் விற்பனை ஆகி உள்ளது.

இவை இல்லாமல் வெளிநாடு உரிமை, ஓடிடி & சாட்டிலைட் என அனைத்திலும் ‘துணிவு’ படத்தை விட ‘வாரிசு’ படம் முன்னணியில் உள்ளது.

இதுவரையில் ‘வாரிசு’ படம் ரூ 240 கோடிக்கும் அஜித்தின் ‘துணிவு’ ரூ. 170 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

இவையெல்லாம் ரிலீசுக்கு முன்பான வசூல் நிலவரங்கள் மட்டுமே. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிறகு இந்தப் படங்களின் மொத்த வசூல் எவ்வளவு? என்பது தெரிய வரும்.. அதுவரை காத்திருப்போம்..

Varisu beats Thunivu in pre release business

80களின் பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைகிறார்?

80களின் பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைகிறார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் விக்ராந்தின் தந்தையாக ரஜினி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் விஷ்ணு விஷாலுக்கு இணையான முக்கிய வேடத்தில் நடிக்கும் அம்மாவின் கதாபாத்திரமும் முக்கியமானது. நம்பகமான ஆதாரங்களின்படி, ஐஸ்வர்யா இந்த பாத்திரத்திற்காக பிரபல 80 களின் நடிகை ஜீவிதா ராஜசேகரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜீவிதா 1984 ஆம் ஆண்டு டி.ராஜேந்தரின் ‘உறவை காத்த கிளி’ படத்தில் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows