தெலுங்கில் விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன்..; மலையாளத்தில் சூர்யா

தெலுங்கில் விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன்..; மலையாளத்தில் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போது நேரடியாக மலையாள படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்பட புரமோஷன் பணிகளுக்காக நேற்று கேரளா சென்றிருந்தார்.

இந்த புரமோஷன் விழாவில்… மலையாள இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் ஒரு கதை சொன்னதாகவும் அதில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சூர்யா தெரிவித்தார்.

இந்த படம் உறுதியானால் இது சூர்யா நடிக்கும் நேரடி மலையாள படமாக அமையும்.

தற்போது விஜய்யின் 66வது படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகிறது.

அதுபோல் தனுஷ் நடிக்கும் SIR ’வாத்தி’ படமும் மற்றும் சிவகார்த்திகேயனின் 20வது படமும் நேரடி தெலுங்கு படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் விஜய்சேதுபதியும் நேரடி தெலுங்கு படம், மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

தமிழ் நடிகர்கள் மற்ற மாநில மொழி படங்களில் கவனம் செலுத்தி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Suriya to work in Malayalam film

‘மங்காத்தா’ பாணியில் அஜித்-61.; ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட் வைக்கும் வினோத்

‘மங்காத்தா’ பாணியில் அஜித்-61.; ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட் வைக்கும் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்டப் பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து 3வது முறையாக அஜித், வினோத், போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது.

அஜித்தின் 61வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் மார்ச் 18ல் தொடங்கவுள்ளதாம்.

இதில் நாயகியாக தபு நடிக்கவுள்ளார். மற்றொரு நாயகியாக அதிதி ராவ் நடிப்பார் என கூறப்படுகிறது. பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படம் கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் நடித்த மங்காத்தா படமும் இதே பாணியில்தான் உருவானது.

ஆனால் அதில் ஒரு அஜித் இருந்தார். ஆனால் AK 61 படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரு வேடங்களில் அஜித்தே நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

Director H Vinoth twist in AK 61

‘புஷ்பா’ – ‘பொன்னியின் செல்வன்’ வரிசையில் ‘துருவ நட்சத்திரம்’

‘புஷ்பா’ – ‘பொன்னியின் செல்வன்’ வரிசையில் ‘துருவ நட்சத்திரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு படம் ரிலீசின்போது விமர்சனத்தில் அடிக்கடி வரும் வார்த்தை படத்தின் நீளம்… தான். இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம் என்பார்கள்.

அண்மையில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கும் இந்த கமெண்ட் வந்தது. எனவேதான் படத்தின் நீளத்தை 15 நிமிடம் வெட்டினர்.

ஒருவேளை படம் ரொம்ப நீ……ளமாக இருந்தால் அதனை இரண்டு பாகங்களாக வெளியிடும் திட்டத்தில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகுபலி உருவானபோதே அதனை 2 பாகங்களாக எடுத்தார் ராஜமௌலி. அண்மையில் வெளியான புஷ்பா படமும் இப்படித்தான் உருவானது.. முதல் பார்ட் வெளியாகிவிட்டது.

பொன்னியின் செல்வன் படத்தையும் மணிரத்னம் இரண்டு பாகங்களாகவே உருவாக்கி வருகிறார். முதல் பாகம் செப்டம்பர் 30ல் ரிலீசாகவுள்ளது.

வடசென்னை படமும் இரண்டு பாகங்களாக உருவான நிலையில் முதல் பாகம் மட்டும் ரிலீசாகிவிட்டது. இரண்டாம் பாகம் இன்னும் தயாராகவில்லை.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

2017ல் தொடங்கப்பட்ட இந்த படத்தின் பாடல்கள் டீசர்கள் அவ்வப்போது வரும். ஆனால் பல பிரச்சினைகளால் படம் வெளியாகவில்லை.

தற்போது பிரச்சினைகளுக்கு இயக்குநர் கௌதம் தீர்வு கண்டுள்ளதால் விரைவில் படத்தை 2 பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

முதல் பாகத்தை 2022 ஜீன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் விக்ரம் உடன் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, அர்ஜீன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் இடம்பெற்ற ‘ஒரு மனம் நிக்க சொல்லுதே….’ என்ற பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல ஒரு பார்ட் ரிலீஸ் செய்ங்கப்ப்பூ.. என ரசிகர்கள் கமெண்ட் கேட்கிறதே..

Chiyaan Vikram’s Dhruva Natchatiram movie updates here

Thalapathy 67 Update விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கும் லோகேஷ்

Thalapathy 67 Update விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கும் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கமல், விஜய்சேதுபதி, பஹத் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதனையடுத்து லோகேஷின் அடுத்த பட அறிவிப்பு எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

ஆனால் பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

எனவே விஜய்க்கு காத்திருக்காமல் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்படுகிறது. ஆனால் கார்த்தியின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஆகிறது.

இந்த நிலையில் தளபதி 67 படம் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.

இதில் விஜய்க்கு ஹீரோயின் கிடையாதாம். மேலும் பாடல்களும் கிடையாதாம். லோகேஷ் இயக்கிய ‘கைதி’ படத்திலும் இதுதான் நிலை.

இது லோகேஷ்க்கு புதியது இல்லை என்றாலும் விஜய்க்கு ஜோடியும் இல்லை.. பாட்டும் இல்லை என்றால் அது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான அனுபவமாக இருக்கும். அவர்களுக்கு டென்ஷனை ஏற்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.

Vijay Lokesh Kanagaraj’s Thalapathy 67 movie update

வில்லன் ரஜினிக்கே முதன்முதலாக மன்றம் தொடங்கிய ரசிகர் மரணம்

வில்லன் ரஜினிக்கே முதன்முதலாக மன்றம் தொடங்கிய ரசிகர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் பல நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் உள்ளன.

மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஒரு தமிழ் நடிகருக்கு ரசிகர் மன்றம் இருப்பது ரஜினிக்கு மட்டுமே.

இவர் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே உள்ளிட்ட தன் ஆரம்பகாலங்களில் வில்லனாகவே நடித்தார்.

அப்போதே ‘கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் தன் 18 வயதில் முதல் ரசிகர் மன்றத்தை மதுரையில் தொடங்கியவர் ஏ.பி.முத்துமணி.

குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் இடம்பெற்ற முத்துமணி சுடரே வா.. என்ற பாடல் கூட இந்த ரசிகர் பெயரிலேயே உருவானதாக கூறப்படுகிறது.

ரஜினியின் வீட்டு பூஜை அறையில் தான் முத்துமணியின் திருமணம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமணி நேற்று மார்ச் 8ல் உயிரிழந்தார்.

இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் முத்துமணி அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்து இருந்தார் ரஜினிகாந்த் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Rajini die hard fan Muthumani died who launched 1st fan club

அப்பா வயதுள்ள பாலகிருஷ்ணா-சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

அப்பா வயதுள்ள பாலகிருஷ்ணா-சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் பின்னணி பாடகியும் கூட.

இவர் தமிழில் விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, சூர்யாவுடன் ‘ஏழாம் அறிவு’, தனுஷ்டன் ‘3’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. எனவே தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது பிரபாஸ் உடன் பான்–இந்தியா படமான ‘சலார்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ஒரு தெலுங்கு படத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். பாபி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

இது சிரஞ்சீவியின் 154வது படமாக உருவாகிறது. நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

ஸ்ருதிக்கு தற்போது 36 வயதாகிறது. தமிழில் 45 வயதுள்ள நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் 60 வயதை கடந்தவர்கள். இவர்கள் ஸ்ருதியின் அப்பா கமல் வயதை உடைய நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Shruti Haasan to pair opposite with senior actors

More Articles
Follows