சிவகார்த்திகேயன் – சூர்யா – ரஜினியை அடுத்து ஜெயம் ரவியுடன் இணையும் பிரபல நடிகை

சிவகார்த்திகேயன் – சூர்யா – ரஜினியை அடுத்து ஜெயம் ரவியுடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா மோகன்.

இதன் பின்னர் சூர்யா உடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார்.

மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே மாதம் 13ஆம் தேதி வெளியாக உள்ளது.

விரைவில் ‘தலைவர் 169’ படத்தில் ரஜினியின் மகளாக பிரியங்கா நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜேஷ் எம் இயக்கவுள்ள படத்தில் ஜெயம் ரவி உடன் பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

ஏற்கெனவே இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் PBS நடிக்க போவதாக தகவல் வெளியானதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Priyanka Mohan to pair up with Jayam Ravi ?

அக்ஷய்குமாரை அடுத்து ஷாரூக்கானுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்

அக்ஷய்குமாரை அடுத்து ஷாரூக்கானுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஷாரூக்கான்.

‘PK’, 3 இடியட்ஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி.

ராஜ்குமார் ஹிரானி & ஷாரூக்கான் இணையும் இந்தப்படத்தில் டாப்ஸி நாயகியாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த மே மாதம் துவங்கவுள்ளது.

ரசிகர்களுடன் ‘செல்ஃபி’ பார்த்து செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ் & வர்ஷா

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமாரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெறுதாகக் கூறப்படுகிறது.

இதற்குமுன் அக்லி(Ugly), ஜோக்கர் உள்ளிட்ட ஹிந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜிவி. பிரகாஷ்

சூர்யா தயாரிப்பில் சுதா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிக்கும் ‘சூரரைப்போற்று’ பட ஹிந்தி ரீமேக்கிற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

GV Prakash to compose music for Shah Rukh khan’s next film?

மறைந்த புனித் ராஜ்குமாரின் அண்ணன் மகனை அறிமுகம் செய்யும் KGF பட நிறுவனம்

மறைந்த புனித் ராஜ்குமாரின் அண்ணன் மகனை அறிமுகம் செய்யும் KGF பட நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேஜிஎப், கேஜிஎப் -2 ஆகிய இரண்டு மெகா படங்களையும் தயாரித்த நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ்.

இதே நிறுவனம் தற்போது KGF பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை தயாரித்து வருகிறது.

அண்மையில் சுதா கெங்கரா அடுத்து இயக்கும் படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவித்தது.

இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் பேரன் யுவராஜ் குமார் என்பவர் அறிமுகமாகும் படத்தை தாங்களின் ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

KGF 2 BLOCK BUSTER HIT..; யஷ் ரசிகர்கள் படைத்த உலக சாதனை

இந்த படத்தை ராஜகுமாரா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமச்சாரி என பல படங்களை இயக்கியுள்ள சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்குகிறார்.

இந்த யுவராஜ் குமார் நடிகர் ராஜ்குமாரின் இரண்டாவது மகனும் நடிகருமான ராகவேந்திராவின் மகன் ஆவார்.

மேலும் சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணன் மகன் தான் இந்த யுவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Hombale Films introduces the Grandson of the matinee idol Dr. Rajkumar

தனுஷின் பெற்றோர் யார் வழக்கு.? நடிகருக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவு

தனுஷின் பெற்றோர் யார் வழக்கு.? நடிகருக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை மாவட்டம் மேலுார் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்.

இவர் நடிகர் தனுஷ் என் மகன். அவர், எனக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்’ என மேலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதை எதிர்த்து, நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்ததால், உயர் நீதிமன்ற கிளை மேலுார் நீதிமன்ற வழக்கை ரத்து செய்தது.

மேலும், ‘தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தில் அவருக்கு சாதகமாக உத்தரவு பெற்றார்.

அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கதிரேசன்.

அந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘நானே வருவேன்’ ஓவர்.; ‘வாத்தி’-யை அடுத்து பான் இந்தியா படத்தில் தனுஷ்

அதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.

மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாததால், மனுவை தள்ளுபடிக்குரிய தலைப்பிட்டு இன்று (ஏப்.,27) விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது… கதிரேசன் தொடர்ந்த வழக்கில் நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியது.

நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கதிரேசன் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

High court decides to send notice to Dhanush regarding paternity case

‘ஓ மை டாக்’ என்ற படத்தை கண்டிப்பாக பார்க்க ஐந்து காரணங்கள் இதோ…

‘ஓ மை டாக்’ என்ற படத்தை கண்டிப்பாக பார்க்க ஐந்து காரணங்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

‘நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையுடன் வெளியாகியிருக்கும் படம்’ என குறிப்பிட்டு, ‘ஓ மை டாக்’ படத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள்.

‘ஓ மை டாக்’ திரைப்படத்தில் சிம்பா என்ற நாய்க்குட்டிக்கும், அர்ஜுன் என்கிற சிறுவனுக்கும் இடையேயான அழகான கதையாக உருவாகி இருக்கிறது.

இதனை பார்வையாளர்கள் பார்வையிட பல காரணங்கள் உள்ளது. அவற்றில் சிலவற்றை தற்போது காண்போம்.

1. ஒன்றிணைந்த மூன்று தலைமுறை நடிகர்கள்..!

‘ஓ மை டாக்’ – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை கொண்டு அற்புதமாக பின்னப்பட்ட அழகான கதை. பழம்பெரும் நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இனிய விருந்தாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருப்பதும் ரசிகர்களின் வரவேற்பிற்கு காரணம். திரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றாக காண்பது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

2. சிம்பா மற்றும் ஆர்ணவ் இடையேயான காதல்…

இப்படத்தில் நடித்திருக்கும் சிம்பா என்ற நாய்க்குட்டி அழகான தோற்றத்தில் இருப்பதையும், அர்ஜுன் வேடத்தில் நடிக்கும் அறிமுக நடிகர் ஆர்ணவ் விஜய் நாய்க்குட்டிகளுடன் கொண்டிருக்கும் பாசமும் திரையில் காண்பது அற்புதமான தருணங்கள்.

உங்க மகள் இந்தியா ரோட்ஸுக்கு இந்த படம் பிடிக்கும்..; யாரிடம் சொன்னார் சூர்யா..?

அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்கும், நாய் குட்டிக்கும் இடையேயான அற்புதமான பந்தம் மற்றும் ரசாயன கலவையை பார்த்த பார்வையாளர்கள், குறிப்பாக செல்லப்பிராணிகளின் காதலர்கள்.. கதையுடன் வித்தியாசமான தொடர்பை உணர்வுபூர்வமாக உணர்ந்தனர். மேலும் இந்த குடும்பத்தினர் உண்மையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்து அதற்கு ‘ஸ்னோ’ என பெயரிட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவரின் பந்தம் திரைக்குப் பின்னாலும் தொடர்ந்து போற்றக்கூடியதாக இருந்தது.

3. அமேசான் பிரைம் வீடியோ உடன் சூர்யாவின் மற்றொரு வெற்றிகரமான தயாரிப்பு

நட்சத்திர தம்பதிகளான சூர்யாவும், ஜோதிகாவும் தங்களது பட நிறுவனத்தின் சார்பில் சிறந்த கதைகளை திரைக்குக் கொண்டு வருவதில் புகழ் பெற்றவர்கள். அமேசான் பிரைம் வீடியோ உடன் ‘ஜெய்பீம்’ போன்ற முக்கிய படத்தை கொடுத்த பிறகு வெற்றிகரமான தயாரிப்பாளர்களான அவர்கள், மீண்டும் ஒரு அழகான கதையுடன் இங்கு வருகை தந்துள்ளனர்.

இதன் மூலம் இருவரும் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் வல்லவர்கள் என்பது மீண்டும் நிரூபித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் ‘உடன்பிறப்பே’, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ போன்ற பல அற்புதமான கதைகளையும் கொண்டு வந்துள்ளார்.

4. குடும்ப பொழுதுபோக்கு மற்றும் செல்ல பிராணிகளை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்கவும்.

‘ஓ மை டாக்’ படத்தை செல்ல பிராணிகளின் மீது எல்லையற்ற பாசம் கொண்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் ரசிக்கக் கூடிய அழகான கதையாக இது அமைந்திருக்கிறது. குடும்ப பார்வையாளர்களை ஒரே இடத்தில், அவர்களின் வீட்டில் வசதியாக கொண்டுவர தயாரிப்பாளர்கள் ஒரு காரணத்தை கூறியுள்ளனர். செல்ல பிராணி பிரியர்களின் உணர்வுகளை தூண்டி, அவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அரவணைத்துக் கொள்வதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கும் ஒரு சரியான பொழுதுபோக்கு திரைப்படம் தான் ‘ஓ மை டாக்’.

5. ஆத்மார்த்தமான இசை மற்றும் சரோவ்வின் அற்புதமான இயக்கம்!

இசை அமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவின் மனதை சாந்தப்படுத்தும் இசை. ஒரு நாய்க்கும் அதன் மீது பாசம் கொண்டவருக்கும் இடையேயான உணர்வையும், ரசாயன மாற்றங்களையும் சிறந்த முறையில் விவரித்துள்ளது. சரோவ் சண்முகத்தின் அற்புதமான இயக்கம் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. கதைக்கும் போதிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது. ‘ஓ மை டாக்’ படத்தில் சித்தரிக்கப்பட்ட உணர்வுடன் சிறந்த முறையில் இணைந்து இருப்பதால் இசையை கேட்பதற்கு நன்றாக உள்ளது.

‘ஓ மை டாக்’ படத்தை ஜோதிகா – சூர்யா தயாரித்துள்ளனர். ஆர். பி. டாக்கீஸ் சார்பில் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் எஸ். ஆர். ரமேஷ் பாபு இணைந்து தயாரித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரைம் வீடியோ மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் இடையேயான 4 திரைப்பட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ‘ஓ மை டாக்’ இடம்பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. இன்னும் பார்க்கவில்லை என்றால்… இப்போதே பாருங்கள். பார்த்து ரசியுங்கள்.

Reasons why the paw-some Amazon Original ‘Oh My Dog’ is a must watch, if you haven’t already

‘செல்ஃபி’ வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட அட்வான்ஸ் வழங்கிய தாணு

‘செல்ஃபி’ வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட அட்வான்ஸ் வழங்கிய தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ..; செல்ஃபி விமர்சனம் 3.75/5

இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது,…

“எங்கள் செல்ஃபி படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்ட தாணு சார் அவர்களுக்கு நன்றி. மேலும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ், கவுதம்மேனன் உள்பட அனைவருக்கும் நன்றி.

இந்தப்படம் மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட டெக்னிஷியன்ஸ் அனைவருக்கும் நன்றி’ என்றார்.

சுப்பிரமணிய சிவா பேசும்போது,…

‘இந்த செல்ஃபி படத்தின் வெற்றி விழாவை நன்றி விழாவாக மாற்றிருப்பது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்கு காரணம் தாணு சார் தான். மேலும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.

ஒரு மனிதனின் முக்கியமான தேவையை சரியாக சொன்ன படம் செல்ஃபி. சாதாரண மனிதனுக்கு கல்வி நேர்மையாக சென்று சேர வேண்டும் என்பதை சிறப்பாக பேசப்பட்ட படம். கல்வி வியாபாரமாக மாறிவிட்டால் ஏழைகளுக்கு பெரிய கஷ்டம் என்பதை இப்படம் பேசியது. பசியை போக்குவது தான் கல்வி. சில குறைகளை நீங்கள் எழுதியிருந்தீர்கள் அதற்கும் நன்றி.

இயக்குனர் மதிமாறன் அடுத்தப்படத்தை இன்னும் மிகச்சிறப்பாக தருவார். மதிமாறன் எந்தக் கீரிடமும் இல்லாமல் மேன்மையாக பழகும் தன்மை கொண்டவர். குணாநிதி மிகவும் நல்ல பையன்.

சபரிஷ் தயாரிப்பாளர் போல் அல்லாமல் மேனேஜர் போல் வேலை செய்தார். பணத்தைக் கையாளும் மனிதனுக்கு படபடப்பு வரும். ஆனால் சபரிஷ் ரிலாக்ஸாக இருந்தார். நன்றியுணர்வு தான் எல்லா உணர்வுகளுக்கு தாய். அந்த நன்றியை உங்களிடம் சொல்கிறோம். ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் செட்டிலாக நடித்திருந்தார். அவர் சிரித்தால் அழகாக இருக்கும். அவர் மேலும் இதுபோல் படங்களை கொடுக்க வேண்டும். கவுதம் மேனன் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்” என்றார்.

வர்ஷா பொல்லம்மா பேசும்போது….

, ‘ஒரு படம் எவ்வளவு நல்லாருந்தாலும் அதை மக்களிடம் சேர்க்க ஒரு சப்போர்ட் வேணும். எங்களுக்கு தாணு சாரின் சப்போர்ட் இருந்தது. அவருக்கு நன்றி. சபரிஷ் தான் இப்படத்தின் மூலம். அவருக்கும் நன்றி. இயக்குநர் முதல்படமே மக்களுக்கான படமா எடுத்திருக்கீர்.

உங்களுக்கு வாழ்த்துகள். ஜிவி பிரகாஷின் நடிப்பை இப்படத்தில் என்ஜாய் செய்தேன். குணா மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு வாழ்த்துகள். சக்சஸ் மீட் என்பது சந்தோஷமானது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் டி.ஜி.குணாநிதி பேசும்போது,…

‘தாணு சார், ஜி.வி.பிரகாஷ், மதிமாறன் உள்பட அனைவருக்கும் நன்றி. குலதெய்வம் தான் குலம் காக்கும் என்பார்கள். இந்தப்படத்திற்கு தாணு சார் தான் குலசாமி. ஜிவி சார் என்னை நல்ல என்கிரேஜ் செய்வார். இப்படி வேறு ஹீரோ இருப்பார்களா என்று தெரியாது. நன்றி ஜி.வி.பிரகாஷ் சார். வர்ஷா கடினமான சூழலிலும் படத்தில் வந்து நடித்துக் கொடுத்தார்.

மதிமாறன் அண்ணன் என்னை ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணி உள்ள பையனாக மாற்ற நிறைய விஷயங்களைச் சொல்லித் தந்தார். படத்தில் எல்லாரும் நன்றாக உழைத்து இந்தப்படத்தை வெற்றிகரமான படமாக்க உதவிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குனர் மதிமாறன் பேசும்போது,…

“2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்படத்தை ஆரம்பித்தேன். அப்போது வெற்றிமாறன் சார் சொன்னார், நீ படம் எடுக்கிற பாராட்டுவாங்க. அதைவிட படத்தின் தயாரிப்பாளர் நல்லாருக்கணும் என்று சொன்னார்.

இன்றைக்கு வெற்றிமாறனை நினைத்துப் பார்க்கிறேன். ஜிவி இந்தப்படத்தில் எனக்கு ஒரு நண்பனைப் போல நடித்தார். குணா நடிப்பை அனைவரும் பாராட்டி வருவது மகிழ்ச்சி. தாணு சார் தான் இந்தப்படத்தை நிறுத்தி நிதானமாக தியேட்டருக்கு எடுத்து வந்தார். தாணு சார் என்மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என் டீம் அனைவருக்கும் மிக்க நன்றி” என்றார்.

ஜிவி பிரகாஷ் பேசும்போதுு….

“நன்றி தாணு சார். சினிமாவில் அவர் ஒரு காட்பாதர். மதிமாறனுக்கு முதல் நன்றி. இது முதலில் நல்ல படம். இந்த நல்ல படத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சி. குணாநிதி, வர்ஷா, சுப்பிரமணிய சிவா, உள்பட அனைவருக்கும் நன்றி. சின்ன பட்ஜெட்டில் எடுத்த இந்த படம், நல்ல லாபகரமான படமாக வந்ததில் ரொம்ப சந்தோஷம். படம் வெளிவருமுன்னே நல்ல லாபமாக மாற்றியவர் தாணு சார். படத்தை மிகச் சிறப்பாக எழுதிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி’ என்றார்.

கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது….

, ‘செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.

இந்தப்படத்தை நாம் எடுக்கணும்னு நினைச்சேன் தம்பிகள் கேட்டதும் சரி தயாரிங்க என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததிற்கு மதிமாறனை நிறைய சொல்லலாம்.

ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போகவேண்டும். தம்பி குணாநிதி திறமையாக நடித்திருக்கிறார்.

முதல்படம் என்று சொல்ல முடியாதளவிற்கு நடித்திருக்கிறார். 160 அடி பாயக்கூடியவன். சபரிஷ் 30 வருடம் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். நல்ல படங்களை சபரிஷ் தயாரிக்க வேண்டும். கவுதம்மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார். அவர் இயக்குனர் மதிமாறனை மிகவும் பாராட்டினார்.

வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன். இந்தப்படம் தியேட்டருக்குத் தான் வரணும்னு நினைச்சேன். இந்தப்படத்தைக் கொண்டாடிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

ஒரே ஒரு காட்சி போட்டுக் காண்பித்து நல்ல விலைக்கு விற்றுக்கொடுத்தேன். இப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது” என்றார்.

Producer Thanu given advance amount to director Mathi Maaran for their next film

More Articles
Follows