ரஜினி, கமல், விஜய் வரிசையில் இணைகிறாரா சூர்யா..?

ரஜினி, கமல், விஜய் வரிசையில் இணைகிறாரா சூர்யா..?

Suriya May Team up with Sundar C Next Filmஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100 படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் ஒரு சரித்திரப் படமாக உருவாகவுள்ளது.

கமலக்கண்ணன், சாபு சிரில், திரு என முன்னணி கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

முன்னணி இசையமைப்பாளருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதால், முன்னணி நடிகர்களை நடித்தால் சரியா இருக்கும் என விரும்புகிறாராம் சுந்தர் சி.

எனவே தமிழ் மற்றும் தெலுங்கில் மார்கெட் உள்ள சூர்யா, மகேஷ்பாபு போன்றவர்கள் நடித்தால் சரியாக இருக்கும் என தயாரிப்பு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை சூர்யா நடித்தால் இதுதான் அவரது கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்.

ரஜினி, கமல், விஜய் ஆகியோர் இதற்கு முன்பே ரூ. 100 கோடி பட்ஜெட்டில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போ ஃபீல் பண்ணி என்ற பண்றது லட்சுமி மேனன்..?

இப்போ ஃபீல் பண்ணி என்ற பண்றது லட்சுமி மேனன்..?

Actress Lakshmi Menon Quits college?குடும்ப பாங்கான கேரக்டர் தேவையா? கூப்பிடுங்கள் அவரை என்கிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார் லட்சுமி மேனன்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றும் வரும் நிலையில், இவருக்கு வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது ரத்னசிவா இயக்கும் றெக்க படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

படப்பிடிப்புக்கு செல்வதால் சரியாக கல்லூரிக்கு செல்ல முடியவில்லையாம்.

எனவே, கல்லூரிப் படிப்பை நிறுத்தி, விட்டு அஞ்சல் வழியில் தொடரவிருக்கிறாராம்.

இருந்தாலும் காலேஜ் லைஃபை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

நிவின்பாலியுடன் இணையும் அட்லி…. தெறிக்க விடுவாரா?

நிவின்பாலியுடன் இணையும் அட்லி…. தெறிக்க விடுவாரா?

atlee and nivin paulyராஜா ராணி, தெறி ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய அட்லி தற்போது தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ளார்.

தனது ‘A for Apple’ என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘சங்கிலி பிங்கிலி கதவ தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இதில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை கமலின் உதவியாளர் ஹரி இயக்குகிறார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறாராம் அட்லி.

இவரின் உதவி இயக்குனர் இயக்கவுள்ள இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார்.

விஜய்யின் ரீமேக் படத்தில் ரஜினியின் அனிமேஷன் நாயகி.!

விஜய்யின் ரீமேக் படத்தில் ரஜினியின் அனிமேஷன் நாயகி.!

deepika padukone hot imageமுழு நேர அரசியலில் ஈடுபட்ட சிரஞ்சீவி நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யின் கத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்.

தெலுங்கு இயக்குனர் விவி விநாயக் இயக்கவுள்ள இப்படம் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகிறது.

சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண், இப்படத்தை லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இதில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என கூறப்பட்டது.

தற்போது அவருக்கு பதிலாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ரஜினியின் அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தஞ்சையில் விவசாயம் செய்ய நிலம் வாங்கும் விஷால்…!

தஞ்சையில் விவசாயம் செய்ய நிலம் வாங்கும் விஷால்…!

vishal in rice festivalதிருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கத்தில் நடைபெற்ற நெல் திருவிழாவில் நடிகர் விஷால் கலந்துக் கொண்டார்.

அப்போது ‘நெல் செய்தி’ என்ற காலாண்டு இதழை வெளியிட்டு அவர் பேசியதாவது:

ஒரு நடிகராக இருந்தாலும் விவசாயியாக வாழ்வதே எனது நோக்கம். எனவே, டெல்லா பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்யவுள்ளேன்.

எனக்கு விதை விதைக்கும் பணிகள் ரொம்ப பிடிக்கும்.

இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் துறை போன்று விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

கடன் பிரச்சினைகள் வந்தாலும் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு செல்ல கூடாது. தங்களின் பிரச்சினைக்கு அது ஒரு தீர்வாகாது” என்றார்.

சினிமா விநியோகத்தில் புரட்சி செய்யும் கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன்.!

சினிமா விநியோகத்தில் புரட்சி செய்யும் கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன்.!

iravi lcd monitor in chennai autosவிஜய் ஆண்டனி தயாரித்து நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தை கே.ஆர்.பிலிம்ஸ் சார்பாக சரவணன் என்பவர் தமிழகம் முழுக்க விநியோகம் செய்தார்!.

மற்ற விநியோகஸ்தர்களை காட்டிலும் இவர் விநியோக முறையில் புதிய முறைகளை கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு தியேட்டர்களிலும் வசூல் விவரங்களை பெற்று சம்பந்தபட்ட தயாரிப்பாளருக்கு புள்ளி விவரங்களுடன் தெரிவித்து வருகிறாராம்.

இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தின் விநியோக உரிமையை பெற்றார்.

இதனை புரமோசன் செய்யும் வகையில் 300 ஆட்டோக்களில் எல்.சி.டி. மானிட்டரை பொருத்தி  டிரெய்லர், பாடல் காட்சிகளை ஒளிப்பரப்பினார்.

இதனைத் தொடர்ந்து, ‘காக்கா முட்டை’ பட இயக்குனர் மணிகண்டன் இயக்கிய ‘குற்றமே தண்டனை’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது கே.ஆர்.பிலிம்ஸ்.

எனவே, குற்றமே தண்டனை படத்தின் விளம்பரத்திற்காக 1,000 ஆட்டோக்களில் எல்.சி.டி. மானிட்டரை பொருத்த திட்டமிட்டுள்ளாராம் இந்த சரவணன்.

More Articles
Follows