ஆயுதபூஜைக்கு விஜய்-சூர்யா-தனுஷ்-சிவகார்த்திகேயன் படங்கள்

Vijay Suriya Dhanush Sivakarthikeyan movies will be telecasted on Pooja Holidaysஹாலிடேஷ்ல தியேட்டர்ல டிக்கெட் கிடைக்கலேன்னா என்ன பண்றது? வேற என்ன டிவியை ஆன் பன்னிட்டு வீட்ல படம் பார்க்க வேண்டியதுதான்.

அப்படின்னா, இந்த ஆயுதபூஜை விடுமுறைக்கு என்னென்ன படங்கள் டிவியில ஒளிப்பரப்புவாங்கன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா? இதோ அந்த படங்கள்.

விஜய்டிவி படங்கள்…

விஜய் டிவியில் ஜீவா நடித்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, தனுஷ் தயாரித்து நடித்து இயக்கிய ‘பவர் பாண்டி’ மற்றும் உதயநிதி நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ ஆகிய புதுப்படங்கள் ஒளிப்பரப்பாக இருக்கின்றன.

இவையில்லாமல் வழக்கம்போல அவர்கள் அடிக்கடி போடும் படங்களான விஜய் நடித்த ‘துப்பாக்கி’, விஷ்ணு விஷால் நடித்த ‘குள்ளநரிக்கூட்டம்’ ஆகிய படங்களையும் ஒளிபரப்புகின்றனர்.

கலைஞர் டிவி…

ஏகே சஜன் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த படம் புதிய நியமம்.

இப்படம், நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதையும் பெற்று தந்தது.

இப்படத்தை வாசுகி என்ற பெயரில் தமிழில் டப் செய்து ஒளிப்பரப்ப உள்ளனர்.

மேலும் ஜீவா நடித்த ‘கோ’, அனுஷ்காவின் ‘அருந்ததி’, ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவான ‘சிவாஜி’ ஆகிய படங்களையும் பூஜை விடுமுறைக்கு ஒளிபரப்ப இருக்கின்றனர்.

ஜீ தமிழ் டிவி

சமுத்திரக்கனி இயக்கி நடித்த ‘தொண்டன்’, விஜய் ஆண்டனி நடித்த ‘எமன்’, ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’, பி.வாசு இயக்கி லாரன்ஸ் நடித்த ‘சிவலிங்கா’ ஆகிய படங்கள் ஒளிப்பரப்பாகின்றன.

மேலும் அமீர்கான் நடித்த ‘டங்கல்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ படமும் ஒளிப்பரப்பாகின்றன.

ஜெயா டிவி

விக்ரம் நடித்த ‘ஐ’, சூர்யா நடித்த ‘24’, மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ மற்றும் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ ஆகிய நான்கு படங்களை நான்கு நாள்களுக்கு ஒளிபரப்ப உள்ளனர்.

Vijay Suriya Dhanush Sivakarthikeyan movies will be telecasted on Pooja Holidays

Overall Rating : Not available

Related News

கொரோனா காலத்தில் எவருமே எதிர்பாராத வகையில்…
...Read More
துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்களை தொடர்ந்து…
...Read More

Latest Post