2016 ஆண்டில் தமிழ் சினிமாவின் ப்ளாக் பஸ்டர் படங்கள்

Rajini Vijay Vikram Suriya Sivakarthikeyan2016ஆம் ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ளன.

இந்தாண்டு ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானது.

ஆனால் கமல், அஜித் படங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் எவை ப்ளாக் பஸ்டர் படங்கள் என்பதை பார்ப்போம்.

1) ரஜினிகாந்த் நடித்த கபாலி

ரஞ்சித் இயக்கிய இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

சினிமாவிற்கு இப்படி எல்லாம் விளம்பரம் செய்ய முடியுமா? என்று வியக்கவைக்கும் அளவுக்கு இப்படத்தினை மார்க்கெட்டிங் செய்தார் தயாரிப்பாளர் தாணு.

எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும் என்றைக்குமே நான்தான் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி இப்படத்தின் வசூல் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.

இப்படம் ரிலீசான நாள் அன்று சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் கிட்டதட்ட ரூ- 400 கோடி வரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2) விஜய் நடித்த தெறி

அட்லி இயக்கிய இப்படத்தையும் கலைப்புலி தாணுவே தயாரித்திருந்தார்.

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை மீனாவின் மகள் நைனிகா.

இப்படத்தின் பாடல்களும் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் வசூல் 160 கோடி என தெரியவந்துள்ளது.

3) சூர்யா நடித்த 24

விக்ரம் குமார் இயக்கிய இப்படத்தை சூர்யாவே தயாரித்திருந்தார்.

சூர்யா மூன்று வேடம் ஏற்று, வில்லனாகவும் நடித்திருந்தார்.

இப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை களமாகக் கொண்டு இருந்தது.

ரூ. 100 கோடி தாண்டி இப்படம் வசூல் செய்தது.

4) விக்ரம் நடித்த இருமுகன்

ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் லவ் என்ற கேரக்டரில் திருநங்கையாக நடித்திருந்தார் விக்ரம்.

இதன் வசூல் 70 கோடி என சொல்லப்படுகிறது.

5) சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ

பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.

கமல், பிரசாந்த் உள்ளிட்டவர்கள் மட்டுமே முழுபடம் முழுவதும் பெண் வேடமிட்டு நடித்திருந்தனர்.

இந்த வரிசையில் இளம் நாயகன் சிவகார்த்திகேயன் நர்ஸ் ஆக நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

இப்பட வசூல் 65 கோடியை நெருங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தின் முதல் நாள் வசூலில் கபாலி, தெறிக்கு பிறகு ரெமோ 3வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

கபாலி ரூ. 22 கோடி, ரூ. 13 கோடி, ரெமோ ரூ. 8 கோடி

இந்த 5 தமிழ் படங்களே இந்தாண்டின் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது.

Block buster movies of Tamil Cinema 2016

Overall Rating : Not available

Related News

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க 'ரெமோ, வேலைக்காரன்,…
...Read More
கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி,…
...Read More
இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.…
...Read More
வெளிநாட்டில் பிறந்து அங்கேயே வளர்ந்து 'மதராசப்பட்டனம்'…
...Read More

Latest Post