2016-ஆம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த டாப் 12 டிரைலர்கள்

2016-ஆம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த டாப் 12 டிரைலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Cinema Favourite Trailer and Teasers of 2016ஒரு படம் வெளியாவதற்கு முன் அப்படம் பற்றிய முன்னோட்டமே ட்ரைலர்.

இவையே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகளவில் உருவாக்குகிறது.

இது குறைந்தது இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடியது. ஆனால் சமீப காலமாக இந்த ட்ரெய்லர் 1 நிமிடத்திற்குள் குறைந்து டீசர் என ஆகி விட்டது.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து டீசர், ட்ரைலர்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

1. கபாலி
2. தெறி
3. இருமுகன்
4. 24
5. பைரவா (2017 பொங்கல் ரிலீஸ்)
6. ரெமோ
7. கொடி
8. அச்சம் என்பது மடமையடா
9. ஜோக்கர்
10. சைத்தான்
11. மிருதன்
12. மெட்ரோ

Tamil Cinema Favourite Trailer and Teasers of 2016

‘பாட்ஷா’வை பார்க்க சென்னை வரும் ஜப்பானிய ரசிகர்கள்

‘பாட்ஷா’வை பார்க்க சென்னை வரும் ஜப்பானிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Baasha posterசுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா ரிலீஸ் ஆகி கிட்டதட்ட 20 வருடங்களை கடந்துவிட்டது.

ஆனாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்றளவும் குறையவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் இப்படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி வருகிற 2017 ஜனவரி 5ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

எனவே பாட்ஷா படத்தை திரையில் காண சென்னைக்கு வரவிருக்கிறார்களாம் ரஜினியின் தீவிர ஜப்பானிய ரசிகர்கள்.

இதனைத் தொடர்ந்து ரஜினியினை நேரில் சந்தித்து பேசவிருக்கிறார்களாம்.

மேலும் ஜப்பானிய மொழியில் இப்படத்தை வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Japan Rajini fans arriving to Chennai to Watch Baashaa Digital Version movie

சூர்யா பட இயக்குநருடன் இணைந்த குஷ்பூ-அனிருத்-கீர்த்தி சுரேஷ்

சூர்யா பட இயக்குநருடன் இணைந்த குஷ்பூ-அனிருத்-கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushboo Keerthy Suresh Anirudhமூன்று வேடங்களில் சூர்யா நடித்த படம் 24. இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் விக்ரம் குமார் இயக்கியிருந்தார்.

இவர் தற்போது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 25வது படத்தை இயக்கவிருக்கிறார்.

அனிருத் இசையமைக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் குஷ்பூ நடிக்கவிருக்கிறாராம்.

இதனை குஷ்பூவே உறுதி செய்துள்ளார்.

சரியாக 9 வருடங்களுக்கு முன்பு ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் குஷ்பூ என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை விட்டு கமல் ரசிகர்களுடன் மோதும் அஜித் ரசிகர்கள்

விஜய்யை விட்டு கமல் ரசிகர்களுடன் மோதும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Ajithதல தளபதி கூட நட்பாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் அடித்துக் கொள்ளும் வழக்கம் பல நாட்களாகவே இருந்து வருகிறது.

ஆனால் சில நாட்களாக அஜித் ரசிகர்களின் இந்த மோதல் கமல் ரசிகர்களின் பக்கம் திரும்பியுள்ளது.

அதற்கு காரணம் அஜித்தின் பைக் வீலிங்தான்.

தல 57 படப்பிடிப்பில் அஜித் செய்த பைக் வீலிங் செய்யும் வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் இப்படி எந்த நடிகரால் செய்ய முடியும்? என்று சவால் விட்டனர்.

இதை கவனித்த கமல் ரசிகர்கள், இதையெல்லாம் எங்க தல சத்யா படத்திலேயே செய்திட்டார் என்று வீடியோ ஆதாரத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பாக இரு தரப்பு ரசிகர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Kamal and Ajith fans fight for their actors

காதலர்களுக்கு மட்டும் கவர்ச்சி?.. நயன்தாராவுக்கு ஒரு பகிரங்க கடிதம்

காதலர்களுக்கு மட்டும் கவர்ச்சி?.. நயன்தாராவுக்கு ஒரு பகிரங்க கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara hotரசிகர்களுக்காக நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என இயக்குநர் சுராஜ் தன் பேட்டியில் கூற, அது சர்ச்சைக்குள்ளானது.

இதற்கு நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நயன்தாரா அப்படி கூறலாமா? அவர் மட்டும் ஓவர் கவர்ச்சியாக நடிக்கவில்லையா? என்ற ஒரு கடிதம் இணையத்தில் உலா வருகிறது.

அக்கடிதத்தை அப்படியே இங்கே பகிர்ந்துள்ளோம்.

அன்புள்ள நயன்தாராவுக்கு…

அரைகுறை ஆடையுடன் நடிகைகளின் படங்களை Double Spread-ல் கடை விரித்திருக்கும் புத்தகங்களிலும் (Book Requires it ? ), thigh-high Slit- கவுன் அணிந்திருக்கும் நடிகைகளின் படங்களை upload-டியிருக்கும் இணையதளங்களிலும் நேற்றில் இருந்து Nayanthara Lashes Out, Lashes Out, என்று கூவிக்கூவி பெண்ணுரிமை விற்றதை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

சரி அப்படி என்னதான் நயன்தாரா Lashes out செய்திருக்கிறார் என்று படித்தபோதுதான், என்னை போன்ற ஒரு சராசரி ரசிகைக்கு “சுராஜ் விவகாரம், நீங்களும், தமனாவும்” பொங்கி எழுந்தது என்று எல்லாமே தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட இணையத்தளத்திற்கு மட்டுமேயான உங்களின் அந்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியை படித்து முடித்த பின், சுராஜிற்கு எதிரான உங்களது வெறித்தனமான குதறல் மிகவும் பிடித்திருந்தது.

“We are not strippers Mr Suraj” என்ற உங்களின் அந்த கருத்தை “காசுக்காக அவிழ்த்து போட வரவில்லை நாங்கள்” என்று தமிழாக்கம் செய்த போது, வழக்கமான HalfBoil பெண்ணியவாதிகளுக்கு ஏற்படும் புல்லரிப்பு ஏற்பட்டது, எங்கள் வீட்டு கிழவி மீது சத்தியம் செய்யுமளவிற்கு உண்மை.

ஆனால், அந்த புல்லரிப்பை சிறிது நேரம் கூட அனுபவிக்க விடாமல் செய்து விட்டது சன் டிவி. வழக்கம் போல அதனுடைய நகைச்சுவை சேனல் ஒன்றை டியூன் செய்த போது, என்னுடய பெண்ணியத் தீயில் மண்ணை எடுத்து போடுமளவிற்கு, “வில்லு’ படத்தின் காமடி காட்சிகளை ஒளிபரப்பி கொண்டிருந்தது.

என்னைப் போன்ற HalfBoil பெண்ணியவாதிகளே கொதித்து எழுமளவிற்கான “விஜயுடன் சேர்ந்து கிணற்றில் வாளியை தூக்கும்” அந்த ஆஸ்கார் காட்சிஓடிக்கொண்டிருந்தது. ஒரு Porn படத்திற்கான அத்தனை அங்க அசைவுகளுடனும்படமாக்கப்பட்டிருக்கும் அந்த காட்சியில், மியூட் செய்யப்பட்ட “மேல வருது மேல வருது” என்ற வசனங்களுடனும்.

அருவருப்பான அந்த காட்சியை முன்பு பார்க்கும்போதெல்லாம், இயக்குனரும், உங்களுடைய அப்போதைய காதலருமான பிரபு தேவா, உங்களை இத்தனை அசிங்கமான முறையில் காண்பித்திருக்க வேண்டாம் என்று கோபாவேசத்துடன், விரும்புகிற ஒருவனுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயாராக இருந்த உங்களுடைய காதலையும் நினைத்து நினைத்து பெருமை பட்டிருக்கிறேன்.

ஐயாவில், பெரிதாக கவர்ச்சி காட்டியிருக்காத நீங்கள், சிம்புவின் மீதான உங்களின் காதலுக்காக மட்டும்தானே, “வல்லவா வல்லவா” பாடலில், அதுவரை சினிமாவில் இருந்த கவர்ச்சிக்கான எல்லைக் கோடுகளை உடைக்குமளவிற்கு நடனடமாடி இருப்பீர்கள்.

அப்போதும், காதலுக்கான உங்களின் தியாகம்தான் அந்த நடிப்பம், என்று நான் எனக்குள்ளாகவே சிலாகித்திருக்கிறேன்.

நிற்க.

“We are not strippers Mr Suraj” என்ற உங்களின் ஆத்திரத்தை உள்வாங்கிக் கொண்ட ஒரு பெண்ணாக, வில்லு பட காமடியை பார்த்தபோது நிஜமாகவே அருவருப்பாக இருந்தது நயன்தாரா.

சமூக பொறுப்பு இல்லாத (அப்படி ஒன்று தேவையே கிடையாதுதான். ஆனால், தீவிர பெண்ணிய சிந்தனை உள்ள ஒருத்தராக நீங்கள் இருப்பதால்தான் இந்த கேள்வி), அவிழ்த்து காட்டக்கூடிய அவசியம், திரைக்கதைக்கு இல்லாத இடங்களில் கூட, என்னுடைய க்ளிவேஜ்களை காட்ட வேண்டிய அவசியம் வந்தது என்ன ? என்கிற கேள்வியை இயக்குனரிடம் முன் வைக்கிற துணிவும் இல்லாத ஒரு Fake பெண்ணாக மட்டுமே பார்க்க முடிந்தது.

“பில்லா” நீங்கள் எப்படி விளம்பரப்படுத்தப்பட்டீர்கள் என்று நினைவிருக்கிறதா நயன் ????

“ஸ்விம் சூட்டில் நயன்தாரா” இப்படியாகத்தான் நீங்கள் அந்த படத்தில் விளம்பரபடுத்தப்பட்டீர்கள்.

அதிகாரபூர்வமாக இல்லை என்றாலும், அதற்காகத்தான் நீங்கள் பயன்படுத்தப்பட்டீர்கள்.

பில்லா என்கிற படத்தின் கதையில் எந்த இடத்தில், இந்த ஸ்விம் சூட் தேவைப்பட்டது என்று சொல்ல முடியுமா ??? அதில் நடித்திருந்த நமீதாவை நீங்கள் கவர்ச்சியில் தோற்கடித்து விட்டீர்கள் என்பதுதான் பெரும்பாலான பத்திரிக்கைகளின் விமர்சனம்

அந்தப் படத்தின் நீங்கள் ஒரு Stripper போலதான்உபயோகப்படுத்தப்பட்டீர்கள் என்பது என் போன்ற உங்களின் தீவிர ரசிகைகளின்திண்ணமான எண்ணம்.

“ஆரம்பம்” படத்தில் நீங்கள் நடிக்க வந்த தருணம் உங்களுக்கு நினைவிருக்கும். காதலில் தோல்வியடைந்தாலும், ஒரு பீனிக்ஸ் பறவையை போல் அதிலிருந்து விடுபட்டு, மிகப்பெரும் நடிகருடன் ஜோடி சேர்ந்து உங்களின் திரை பயணத்தை மீண்டும் துவக்கினீர்கள்.

ஆனால், அந்தப்படத்தில் ஒரு நீச்சல் காட்சி உண்டு. வெள்ளை சட்டை ஒன்றுடன் தண்ணீரில் நனைந்து எழுந்து, வரும்படியான காட்சி அது.

படத்திற்கு தேவையற்ற அந்த நீச்சல் காட்சியை கூட நீங்கள் கேள்வி கேட்க வேண்டாம். ஆனால், இது போன்ற தண்ணீரில் நனையும் காட்சிகளில் ஏன் வெள்ளை ஆடையை எங்களுக்குத் தருகிறீர்கள் ? என்றாவது எந்த இயக்குனரிடமாவது கேள்வி எழுப்பி இருக்கிறீர்களா ???

இதை எல்லாவற்றையும், நீங்கள் செய்ததில், நடித்ததில் மிகஇழிவானது ஒன்று உண்டென்றால், அது “திருநாள்” படத்தில் ஒரு சிறுவன்உங்களுக்கு LipLock அளிப்பது போன்ற அந்த காட்சியில் நடிக்க நீங்கள் ஒப்புக்கொண்டது மட்டுமே.

இதே வயதுள்ள ஒரு பெண் குழந்தையிடம் ஒரு கதாநாயகன் இப்படி Liplock செய்தால், அது ஹாராஸ் ஆக பார்க்கப்படும் என்றால், அதே செயலைத்தான், வளரும் ஒரு சிறு ஆண் குழந்தையிடம் நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றும்கருதிக்கொள்ள வேண்டும். கலாச்சாரம் கண்றாவி எல்லாம் விடுங்கள். நடிப்பதற்காக மட்டுமே ஒரு சிறு குழந்தையை பாலியல் ரீதியாகஉபயோகப்படுத்துவதாகத்தானே அர்த்தம் ?

ஒரு நடிகராக, அந்த காட்சியை ஒப்புக்கொள்வதற்கு முன், as a HumanBeing-ஆக, அதை ஒப்புக்கொள்ளலாமா ? வேண்டாமா ? என்று யோசித்திருக்க வேண்டிய அந்த சிறு பொறுப்பு இருந்திருக்கிறதா ?? யோசித்திருக்கிறீர்களா ?

என் வீட்டுக் குழந்தையாக நினைத்து நான் அதை செய்தேன் என்று கூட நீங்கள் விளக்கம் கொடுக்கலாம். நம் வீட்டு குழந்தைகள் அதிகளவு Sexual Harras ஆகுவதும் கூட, நம் வீட்டு ஆட்களிடம் இருந்து மட்டும்தான் என்பதும் உங்களுக்குத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

இப்போதும் கூட நீங்கள், அந்த இணையத்தளத்திற்கு மட்டுமே அளித்திருக்கும் அந்த எக்ஸ்க்ளூசிவ் கட்டுரையில் “A heroine wears skimpy clothes in commercial cinema only if she is comfortable and the script requires it” என்று சொல்லி இருப்பதை படித்தபோது அத்தனை அயர்ச்சி.

கவர்ச்சி நடனம் ஆடும் நடிகையில் இருந்து நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடிக்கும் நடிகை வரை, சாரி நடுத்தரக் குடும்பத்து “க்ளிவெஜ் காண்பிக்கும்” பெண்ணாக நடிக்கும் நடிகை வரை இதே “script requires” விளக்கம் சொல்லக் கேட்டு அத்தனை அயர்ச்சி + எரிச்சலாக வருகிறது.

வேறு ஏதாவது புது விளக்கம் கொடுக்க முற்படலாம்.

“எனக்கு இளமை இருக்கிறது. Show off செய்வதில் என்ன தவறு” என்கிற ரீதியிலாவது தைரியமாக கேட்கலாம் அல்லவா ?.

“I too have done my share of glamour in commercial films not because my director wanted to please that particular ‘low class’ of audience, but because it was my CHOICE” நீங்கள் கூறி இருக்கும் இந்த my Choice-ல் தான், எந்தப்படத்தில் ஆடைக்குறைவாக நடிக்க வேண்டும், எந்தப்படத்தில் நடிக்கக் கூடாது என்பதும் வருகிறது இல்லையா ??? அந்த அளவுகோலை நீங்கள் எவ்வாறு வகுத்துக்கொள்கிறீர்கள் ??? கோடிகள் அதிகமாக கொட்டப்படும் படத்திற்கு, கொட்டப்படாத படத்திற்கு என்றா ???இந்த my Choice-ல்தான் ஒரு சிறு குழந்தை உங்களுக்கு LipLock அளிப்பதற்கு நீங்கள் ஒத்துக்கொள்வதும் வருகிறது இல்லையா ????

உடல் அரசியலை பேச சொல்லி பெண்களுக்கு அறிவுரை கூறும் பெண்ணியவாதிகள், தாங்கள் மட்டும் கண்ணகிக்கு சகோதரிகள் என்கிற ரீதியில் கற்பை தூக்கி பிடிப்பது போல் இருக்கிறது இந்த “script requires” / my Choice விளக்கம். நீங்கள் அடைய வேண்டிய உயரங்களை எல்லாம் உங்கள் கவர்ச்சியின் மூலம் அடைந்து, இன்று நல்ல நடிகையாக பரிணமிக்கத் தொடங்கி இருக்கும் இந்த நாளிலாவது, உண்மையான ஒரு குரலை எழுப்பலாம் நயன் நீங்கள்.

ஆணாதிக்கத்துக்கு எதிராக குரல் எழுப்பும் அத்தனை உரிமையும் உங்களுக்கு இருக்கிறது நயன். ஆனால், அதே நேரத்தில் பெண்ணியவாதியாக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்கிற சிறு கேள்வியையும் நீங்களே உங்களுக்கு கேட்டுகொள்ளுங்கள்.

இறுதியாக “We are not strippers Mr Suraj” என்ற உங்களின் கோபாவேசத்திற்கு, ஒரே ஒரு பதில் கேள்வி கேட்க விரும்புகிறேன்.

Stripper-களை விட நீங்கள் எந்த வகையில் பொறுப்புள்ளவர் நயன் ? அவர்களாவது நாங்கள் இதைதான் செய்கிறோம் என்று கூறிவிட்டு Strip செய்கிறார்கள். ஆனால், நீங்கள் “My Choice” என்று சொல்லிவிட்டு அதேயே பட்டும்படாமலும் செய்கிறீர்கள். சொல்லிவிட்டு செய்யும் Stripper-களை விட நீங்கள் எந்த விதத்தில் பொறுப்புள்ளவர் ???? யோசித்துப் பாருங்கள் நயன்.

இப்போதும் உங்களின் மீதும், காதலுக்காக நீங்கள் செய்யும் / செய்த தியாகங்களுடன் சேர்த்து உங்களை அதி காதலுடன் நேசிக்கும் ஒருத்தியின் கடிதமாக இதை நீங்கள் கருதிக் கொள்ள வேண்டும்.

என்று அந்த கடிதம் முடிவடைகிறது.

அரை டஜன் படங்கள்… கோடிகளில் புரளும் விஜய்சேதுபதி

அரை டஜன் படங்கள்… கோடிகளில் புரளும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi movies in 2016இந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் விஜய் சேதுபதி நடிப்பில் அரை டஜன் படங்கள் வெளியானது.

சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க ஆகிய 6 படங்கள் ரிலீஸ் ஆனது.

ஒரு சில படங்கள் சற்று சரிவை சந்தித்தாலும், மற்றவை நன்றாகவே கல்லா கட்டியது.

இந்த படங்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் கிட்டதட்ட ரூ 16 கோடி வரை வசூல் செய்து கொடுத்துள்ளாம்.

இதில் அதிகபட்சமாக சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படம் ரூ. 3 கோடி வசூல் செய்து டாப்பில் உள்ளது.

சிறிய பட்ஜெட் அதிக லாபம் என்ற விஜய் சேதுபதியின் பார்முலா இந்த வருடமும் தொடர வாழ்த்துக்கள்.

More Articles
Follows