வாடிவாசல்… சூர்யாவுக்கு இரட்டை வேடம் கட்டும் வெற்றிமாறன்.!

suriya and vetrimaaranசூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

ஆனால் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் 1959 என்ற குறுநாவலை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கதை என்பதால் இப்படம் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு தந்தை – மகன் என இரட்டை வேடம் கட்ட உள்ளதாக வாடிவாசல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Overall Rating : Not available

Related News

Latest Post