தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இதில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், திவ்யா துரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தைத் மார்ச் 10ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தற்போது தெலுங்கு டப்பிங் பணிகள் நடந்து வருகிற நிலையில் தமிழைப் போலவே தெலுங்கிலும் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார் சூர்யா.
தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ள நடிகர்களில் சூர்யா முக்கியமானவர்.
இதுநாள் வரை சூர்யா படத்திற்கு பிரபலமான ஒருவர்தான் தெலுங்கு டப்பிங் பேசி வந்தார்.
தற்போது சூர்யாவே சொந்தக் குரலில் தெலுங்கு டப்பிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
Suriya dubbed his telugu portions for Etharkkum Thunindhavan








