காலா பட டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினிகாந்த்

காலா பட டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth started his dubbing for Kaala movieசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ,ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான டப்பிங்கை நாக் ஸ்டூடியோவில் பதிவு செய்து வருகிறார்.

காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth started his dubbing for Kaala movie

நடிகர்கள்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா.

தொழில் நுட்பக்குழு:

இயக்குனர் – பா. ரஞ்சித்
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – முரளி . ஜி
கலை இயக்கம் – டி.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
சவுண்ட் டிசைன்ஸ் – ஆண்டனி பி ஜெயரூபன்
கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா
காஸ்ட்யூம்ஸ் – செல்வம்
ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்
நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்
தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது

kaala shooting

வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கின் 33வது கிளையை ஸ்நேகா திறந்துவைத்தார்

வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கின் 33வது கிளையை ஸ்நேகா திறந்துவைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

v care clinic snehaசென்னையில் இன்று வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி (V Care Multi speciality) கிளினிக்கின் 33வது கிளை அம்பத்தூர் பிரின்ஸ் இன்ஃபோ பார்க்கில் நடிகை சினேகா திறந்து வைத்தார்.

கடந்த 18 வருடங்களாக அழகு கலைத்துறையில் கோலோச்சிவரும் வீ கேர் நிறுவனத்தார் 33வது கிளினிக்கை அம்பத்தூரில் துவங்கியுள்ளார்கள் .

தலைமுடி மற்றும் தோல் சரும பாதுகாப்பு (Hair and Skin care) துறையில் பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் வீ கேர் நிறுவனம் அதி நவீன உபகரணங்களோடு புதிய கிளையை திறந்திருக்கிறது..

சருமம் மற்றும் முடி பாதுகாப்பு துறையில் தனித்துவமிக்கதாக வீ கேர் நிறுவனம் வளர்ந்து வருவதற்கு காரணம் முழுமையான அர்ப்பணிப்பும், வாடிக்கையாளர்களின் முழு திருப்தியுமே காரணம் என்கிறார் வீ கேர் தலைமை நிர்வாகி திருமதி பிரபா ரெட்டி.

Sneha inaugurated V Care Multi Specialty Clinic at Ambattur

sneha v care clinic

என் பட ஹீரோக்களில் ரஜினி-கமலை பார்க்கிறேன்..: பூபதி பாண்டியன்

என் பட ஹீரோக்களில் ரஜினி-கமலை பார்க்கிறேன்..: பூபதி பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Boopathy Pandian shares his experience about Mannar Vagaiyaraகமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன்.

இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன.

அதேபோல இவர் இயக்கிய தேவதையையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன – 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன்.

“மன்னர் வகையறா படம் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் இவற்றை முன்னிலைப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.

சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அதேசமயம் அனைத்தையும் பாசிடிவாகவே இதில் அணுகியிருக்கிறோம்.

இந்தக்கதையின் ஒன்லைனை உருவாக்கியதுமே இதில் விமல் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். முதலில் இதை தயாரிப்பாளர் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்காக உருவாக்கினாலும் விமலுக்கு இந்த கதை பிடித்துப்போனதால் தானே தயாரிப்பதாக முழு மனதுடன் முன் வந்தார்.

அதனாலேயே இந்தப்படம் முடியும் வரை வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் இதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்.
இது எனக்கும் தெரிந்தே நடந்ததால், அவரது இந்த முடிவு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது.

என் பொறுப்பு இன்னும் அதிகமானது. நம் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமே என இரட்டிப்பு உத்வேகத்தை தந்தது. அவரும் என் எதிர்பார்ப்பை முழுதாக நிறைவேற்றியுளார்.

தனுஷ், விஷால் என முன்னணி ஹீரோக்களை இயக்கியதற்கும் விமல் படத்தை இயக்கியதற்கும் என்ன வித்தியாசம் என பலர் கேட்கின்றனர். எந்த வித்தியாசமும் இல்லை.

தனுஷை வைத்து நான் ‘தேவதையை கண்டேன்’ படம் இயக்கும்போது, அதற்குமுன் அவர் பயணித்து வந்த விதம் வேறாக இருந்தது. அப்போது அவர் ஒரு கமர்ஷியல் வட்டத்திற்குள்ளேயே இல்லை..

‘ஆடுகளம்’ படம் வெளியாகி அவருக்கு தேசிய விருது கிடைத்திருந்த நேரத்தில் கூட, அவரே ஒரு பேட்டியின்போது, தான் நடித்த படங்களில் சிரமப்பட்டு நடித்தது என்றால் அது ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் என்றுதான் கூறியுள்ளார்.

என்னை பொறுத்தவரை எனக்கு யார் ஹீரோவாக கிடைக்கிறார்களோ அவர்கள் தான் எனக்கு ரஜினி, கமல் என சொல்லுவேன்.

அவர்களை எனக்கு, என் கதைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வேன். அந்த வகையில் தனுஷ், விஷால், போல இந்த ‘மன்னர் வகையறா’வுக்கு விமல் பொருத்தமாக இருந்தார்.

படம் பார்க்கும்போது ‘அட விமலை வேறு மாதிரி பயன்படுத்தியுள்ளாரே என நீங்களே சொல்வீர்கள். குறிப்பாக நீங்கள் இதுவரை பார்க்காத, விமலின் இன்னொரு பக்கத்தை இதில் பார்க்கலாம்.

இப்படி ஒரு குடும்ப படத்தை எடுப்பதற்கு முக்கிய காரணமும் உள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உட்பட முன்னணி நடிகர்கள் அனைவருமே தவறாமல் அவ்வபோது குடும்பக்கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறார்கள்.
அதனால் தான் அங்கே குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து என்ஜாய் பண்ணி படம் பார்க்கிறார்கள். அந்த சந்தோஷ மனநிலை தான் அவர்களை இன்னும் நான்கு படங்களை கூடுதலாக பார்க்க வைக்கும்.

குடும்ப உறவின் முக்கியத்துவத்தை ஒரு சின்ன நடிகர் சொல்வதைவிட ஒரு பெரிய நடிகர் சொல்லும்போது அதன் வீச்சு இன்னும் அதிகமாக இருக்கும். அதுபோல இங்கே தமிழிலும் முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு குடும்ப படம் நடித்தால், நம் தமிழ்சினிமாவை அசைத்துக்கொள்ள முடியாது.

இந்தப்படத்தின் நாயகி ஆனந்தி, இதற்குமுன் பார்த்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்துள்ளார். குறிப்பாக காமெடி காட்சிகளில் நீங்கள் புதிய ஆனந்தியை பார்க்கலாம்.

இந்த கதையுடன் அவர் ஒன்றிப்போனதால் தான் சார் உங்களது அடுத்த படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை பார்க்க விரும்புகிறேன் என்றார்..

இந்தப்படம் வெளியானதுமே நீ பிசியாகிடுவேம்மா.. அப்புறம் இதுக்கெல்லாம் உனக்கு நேரம் இருக்காதும்மா என அவரிடம் சொன்னேன்.

சும்மா விளையாட்டாகத்தான் சொல்கிறார் என நினைத்தால் படத்தின் இசைவெளியீட்டு விழா மேடையிலேயே அதை ஓப்பனாக சொன்னார்.

ஆனந்தி பற்றி சொல்லும்போது இன்னொரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. படத்தில் ஆனந்தி உணர்ச்சிகரமாக பேசி அழுதுகொண்டே நடிக்கவேண்டிய காட்சி.

அந்தக்காட்சியை படமாக்கும்போது இணை இயக்குனர் ஒருவர் வசனத்தை சொல்லிக்கொடுத்தபடி ஆனந்தியும் நடித்துக்கொண்டிருந்தார். காட்சியை படமாக்கி முடிக்கும்போது பார்த்தால் அந்த உதவி இயக்குனரும் அழுதுகொண்டே இருப்பதை பார்த்தேன்.

அப்புறம் தான் தெரிந்தது அவர் அந்த காட்சியை யதார்த்தமாக சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தானும் கிளிசரின் போட்டுக்கொண்டார் என்பது.

இந்தப்படத்தில் ஜாக்ஸ் பிஜாய் என்கிற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். எனது படங்களில் யுவன் சங்கர் ராஜா, இமான், மணிசர்மா என பல இசையமைப்பாளர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகிவிடும்.

ஆனால் அது என்னவோ தெரியவில்லை அடுத்தடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாமலேயே போய்விட்டது. இத்தனைக்கும் யாருடனும் எந்த மனஸ்தாபமும் இல்லை.. எல்லோருடனும் இப்போதும் நட்பாகவே இருக்கிறேன். ஆனாலும் இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்து விடுகிறது.

இந்தப்படத்தில் ஏன் இவ்வளவு நட்சத்திரங்கள்.. ஸ்டார் வேல்யூவை ஏற்றுவதற்காகவா என பலரும் கேட்கிறார்கள். இந்த கதையை பொறுத்தவரை ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பின்புலம் இருக்கும். அதை தாங்கி நடிக்கவேண்டும் என்றால் அது குறிப்பிட்ட ஒரு சிலரால் தான் முடியும்.

பிரபு சார் இதுவரை உருவாக்கி வைத்துள்ள இமேஜ் தான் அவரது கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறது. அப்படித்தான் இதற்குள் அனைத்து நட்சத்திரங்களும் வந்தார்கள்.

இதில் சரண்யாவுக்கு மட்டும் தான் அவரது காட்சிகளை டெவலப் செய்து எழுதினேன். அதற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படத்தில் குடும்பத்து நபர்களுக்குள் நடக்கும் காமெடி காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும்.

அதில் சரண்யாவின் கேரக்டர் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அவரிடம் அவரது கேரக்டர் பற்றி சொல்லி, நீங்கள் நடிப்பதாக ஒப்புக்கொண்டால் மட்டும் தான், இன்னும் இதை டெவலப் செய்து மாற்ற முடியும் என கூறினேன்.. அவரும் சூப்பர்..சூப்பர் என சம்மதம் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையில் நிறைய படங்கள் வெளியாக இருக்கின்றன என்றாலும், இதுவரை என்னுடைய படங்கள் ஜனரஞ்சகமாக, கமர்ஷியலாக, காமெடியாக இருக்கும் என ரசிகர்கள் நம்பி வருவதே எனக்கு மிகப்பெரிய கொடுப்பினை.

எனது முந்தைய படங்கள் போல இந்தப்படத்தின் காமெடி காட்சிகளும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்.” என்றார் பூபதி பாண்டியன்.

தயாரிப்பு – A3V சினிமாஸ்
இயக்குனர் – பூபதி பாண்டியன்
ஒளிபதிவு – பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி
இசை – ஜாக்ஸ் பிஜாய்
படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா
கலை – கே. சம்பத் திலக்
சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர்
நடனம் – தினேஷ் , எம். செரீப், தீனா
பாடல்கள் – மணி அமுதன், சாரதி
மக்கள் தொடர்பு – KSK செல்வா
நடிகர்கள் – விமல், ஆனந்தி, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி

Director Boopathy Pandian shares his experience about Mannar Vagaiyara

MV 1600 x 800 -2a

நான் ஆல்ரெடி அரசியல்வாதிதான்…; இரும்புத்திரை இசை விழாவில் விஷால்

நான் ஆல்ரெடி அரசியல்வாதிதான்…; இரும்புத்திரை இசை விழாவில் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Those who do service to public is politician says Vishal at Irumbu Thirai audio launchவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்புதிரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால், விஷாலின் தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே. ரெட்டி, இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, கில்ட் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன், நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், FEFSI R.k. செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழா துவங்கியதும் கிட்னி பைலியர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகளான N. மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி அவர்களுக்கு நன்கொடையை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை குட்டி பத்மினியும் இருந்தார்.

விஷால் பேசியதாவது…

சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன். இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம் அதற்கு மனிப்பு கேட்டு கொள்கிறேன்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படம். இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார்.

என்னுடைய தந்தை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இந்த படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன்.

மக்களுக்கு சேவை செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான். அப்படி பார்த்தால் நானும் அரசியல்வாதிதான்.
இரும்புத்திரை என்னுடைய 24வது திரைப்படம். என்னுடைய அனைத்து படங்களுக்கும் ஆதரவு அளித்ததற்கு நன்றி என்றார் விஷால்.

R.K. செல்வமணி பேசியது :- அதிரடி பாடலில் விஷாலை பார்த்தபோது அமிதாப் பச்சனை பார்த்தது போல் இருந்தது. விஷால் ஒரு சிறந்த நடிகர். நான் பேசுவதற்கு மேடை 2௦ வருடம் கழித்து தான் எனக்கு கிடைத்தது.

இயக்குநர் மித்ரன் பேசுவதை பார்க்கும் போது நன்றாக இருந்தது. இளம் இயக்குநர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் R.K.செல்வமணி.

Those who do service to public is politician says Vishal at Irumbu Thirai audio launch

Irumbu Thirai Audio Launch Photos

மலையாளியிடம் உள்ள சகிப்புத்தன்மை தமிழனிடம் இல்லை..: பார்த்திபன்

மலையாளியிடம் உள்ள சகிப்புத்தன்மை தமிழனிடம் இல்லை..: பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthibanஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்.

இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஜெயப்ரதா, பார்த்திபன், ரேவதி, ரேகா, அனுஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சுஹாசினி மணிரத்னம் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்த்திபன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி நடைபெரும் இடம் க்ரீன் பார்க், பசுமைப் பூங்கா. இந்த இடம் மட்டுமே பசுமைப் பூங்காவாக இல்லாமல், இந்த நாடே பசுமைப் பூங்காவாக மாற வேண்டுமெனில் முக்கியமாக தண்ணீர் தேவை. ஆன்மீக அரசியலைப் பற்றி சமீபத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள், இது நீர்மீக அரசியல் பேசும் படம்.

இந்த நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமெனில் நதிகளை இணைக்க வேண்டுமென எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு மனித மனங்களை இணைக்க வேண்டும். அப்படி இதயங்களை இணைக்கும் ஒரு படமாக நிச்சயமாக “கேணி” இருக்கும். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு கேரள எல்லைக்குள் பிரிக்கப்படுகிற தமிழகத்தைச் சேர்ந்த கிணற்றுக்காக கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சேர்ந்து தமிழர் ஒருவர் போராடுவதே “கேணி” படத்தின் கதை.

இந்தப் படத்தை எடுத்திருப்பதும் ஒரு மலையாளி. பொதுவாக நீர் பிரச்சனை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. தண்ணீரை வைத்துக் கொண்டு கேரளாவோ தமிழ்நாடோ அரசியல் செய்யலாம், ஆனால் கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். ஏனென்றால் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலையில்லை, பிரச்சனைகளைப் பேசிக்கொண்டே தான் இருப்போம்.

தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது, அது பாராட்டிற்குரியது.

அங்கே திருவனந்தபுரம் ராஜாவைக் கூட விமர்சனம் செய்யலாம், இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால் தான் நல்ல விசயத்தை சொல்லும் இந்த “கேணி” படத்திற்குள் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

எனக்கு பெரியார் விருது கொடுத்த போது சில விஷயங்கள் பேசினேன். அதற்கு கூட சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தளவிற்கு சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது.

அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது. இந்தப் படம் நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது பாராட்டிற்குரியது” என்று பேசினார்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்காக ஜீரோ டிகிரி பதிப்பகம் துவக்கம்

மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்காக ஜீரோ டிகிரி பதிப்பகம் துவக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Translating Tamil books into English Zero degree publishing launch event‘மொழிபெயர்ப்பு இலக்கியங்களை அதிகம் பதிப்பிக்க வேண்டும் என்ற நோக்கில், ‘ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’ என்ற பதிப்பகத்தை துவக்கி இருக்கிறோம்’ என, அதன் நிறுவனர்கள் கூறினர்.

சென்னை, எழும்பூர், மியூசியம் தியேட்டரில், ‘ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’ என்ற பதிப்பகம் துவக்கவிழா, நேற்று நடந்தது.

அதில், அதன் நிறுவனர்களான, ராம்ஜி, காயத்ரி ராமசுப்ரமணியன் ஆகியோர் பேசியதாவது:

தமிழ் எழுத்தாளர்களின் நுால்களை, இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்திற்கும்; மற்ற மொழிகளில் உள்ள இலக்கியங்களை தமிழுக்கும் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த பதிப்பகத்தை துவக்கி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

விழாவில், சாருநிவேதிதா எழுதிய, ‘ஜீரோ டிகிரி, அன்பெயித்புல் யுவர்ஸ், மார்ஜினல் மேன்,பைசாந்தியம்’ ஆகிய நுால்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நுால்கள் வெளியிடப்பட்டன.

மேலும், பட்டுக்கோட்டை பிரபாகரின், ‘மிட் ஏர் மிஷாப்ஸ், த வெர்டிக்ட் வில் சீக் யூ’ ஆகிய ஆங்கில மொழிபெயர்ப்புகள்; இந்திரா சவுந்தரராஜன் எழுதிய, ‘அவுட் ஆப் த புளூ’ என்னும் ஆங்கில மொழிபெயர்ப்பு, அராத்து எழுதிய, ‘நள்ளிரவின் நடனங்கள்’ ஆகிய, 10 நுால்கள் வெளியீடும் நடந்தது.

Translating Tamil books into English Zero degree publishing launch event

zero degree publishing launch event

More Articles
Follows