தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் ரஜினியின் அறிமுக பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.
நயன்தாரா, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் 3 வில்லன்கள் நடிக்கிறார்களாம்.
இஷாக், பாஹி 2 ஆகிய ஹிந்தி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் இப்படத்தில் நடிக்கிறார்.
இவரின் தந்தை வேடத்தில் சுனில் ஷெட்ட நடிக்கிறார்.
இவர்களுடன் நவாப் ஷாவும் வில்லனாக நடித்து வருகிறாராம்.
டைகர் ஸ்ண்டாகை படத்தில் வில்லனாக நடித்தவர் நவாப் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.