மாதா-பிதா-குரு-தெய்வம் எல்லாம் ரஜினிதான்… வைரல் ஆகும் வீடியோ.!

மாதா-பிதா-குரு-தெய்வம் எல்லாம் ரஜினிதான்… வைரல் ஆகும் வீடியோ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரத், சந்தியா நடித்த காதல் படம், அப்படத்தில் நடித்த பலருக்கும் முகவரியாய் மாறியது.

இப்படத்தில் நடித்த காதல் சுகுமார் தற்போது இயக்குனராகிவிட்டார்.

திருட்டு விசிடி படத்தை தொடர்ந்து ‘சும்மாவே ஆடுவோம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் இவர்.

தற்போது கபாலி சீசன் என்பதால், ரஜினிக்காக உருவாக்கிய பாட்டு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்பாடலை முருகன் மந்திரம் எழுதியுள்ளார். வேல் முருகன் மற்றும் ஜெகதீஷ் பாடியுள்ளனர்.

அப்பாடல் வரிகள் இதோ உங்களுக்காக…

மகிழ்ச்சி என்ற வரிகளோடு அப்பாடல் வீடியோ தொடங்குகிறது.

song 1

தலைவா…தலைவா…தல..தல..தலைவா..
என் தலைவன் நீ தான்என் உயிரும் நீ தான்
மாதா பிதா குரு தெய்வம் எல்லாம் எனக்கு நீயே தான்..

உன் ரசிகன் நான்தான்உன்னைப்போல் நான்தான்
ஒரு வார்த்தை நீ சொன்னா உயிரை உனக்கு தருவேன் நான்..
அட உன்னைப் போல் நடிகன் யாரு..நீ நடந்தாலே ஆஸ்கார் பாரு…
அட உன்னைப் போல்மனிதன் யாரு..நீ அன்பாலே இறைவன் பாரு…

என் தலைவன் நீதான்என் உயிரும் நீதான்
மாதா பிதா குரு தெய்வம் எல்லாம் எனக்கு நீயே தான்
உன் ரசிகன் நான் தான் ஒன்னைப்போல நான் தான்
ஒரு வார்த்தை நீ சொன்னாஉயிரை உனக்கு தருவேன் நான்…
அட உன்னைப்போல் நடிகன் யாரு
நீ நடந்தாலே ஆஸ்கார் பாருஅட
உன்னைப்போல் மனிதன் யாருநீ அன்பாலே இறைவன் பாரு

சரணம் -1

என்னைப்போல ரசிகன் எத்தனையோ கோடி
அன்பால தான் சேர்ந்தான் உன்னை தினம் தேடி
எத்தனையோ நடிகன் நித்த நித்தம் வருவான்
என் தலைவன் இடத்தை யாரு இங்கே பிடிப்பான்
பதினாறு மாச பச்சப்புள்ள ரசிக்கும் பதினெட்டு வயசு குமரிப்புள்ள ரசிக்கும் உழைக்கின்ற மனசு
உண்மையாக ரசிக்கும்உயர்படிப்பு படிக்கும் கூட்டம் உன்னை ரசிக்கும்
பல கோட்டைகளும் உனக்கு காத்திருக்குமேநீ கொடியை ஏத்தும் நாளை பாத்திருக்குமே
அட ஆனா…. உன் மனசு…அந்த ஆண்டவனைத் தேடும்….


சரணம் 2

என் ரசிகன் தானே என்னை வாழ வைக்கும் தெய்வம்…
அவனுக்காக வாழும் வாழ்க்கைய நான் கேட்பேன்
இது அன்னைத் தமிழ் நாடு… எங்க அம்மாவோட வீடு…
என் தாயின்மொழிய காக்க… என் உயிரையும் நான் தருவேன்
அட ஆஸ்காரு எல்லாம் தேவையில்ல நமக்குஎன் அன்பான ரசிகன் நீ போதும் எனக்குநீ அம்மாவை நேசி…. அப்பாவை நேசிநீ நன்றாகப் படிச்சி முன்னேறி வா நீ
அந்த ஆண்டவனே சொன்னா, நான் அப்ப வருவேன்..அட நாற்காலியே வேண்டாம் நான் நன்மை செய்யுவேன்…
என் வழி தான்….தனி வழி தான்….அந்த ஆண்டவனின் வழி தான்…

பாடல் வீடியோ இதோ….

 

‘நான் ரொம்ப பிஸி… அதான் ராஜினாமா செய்யப் போறேன்..’ – கருணாஸ்..!

‘நான் ரொம்ப பிஸி… அதான் ராஜினாமா செய்யப் போறேன்..’ – கருணாஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor karunasகாமெடி நடிகராகவும் தனி நாயகனாகவும் நடித்து வருபவர் கருணாஸ்.

மேலும் நடிகர் சங்கத்தில் துணைத் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார்.

இவையில்லாமல், திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக சட்டசபையிலும் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் இவரின் சமீபத்தில் பேட்டியில் இவர் கூறியதாவது..

“சினிமா, எம்எல்ஏ பதவி, நடிகர் சங்க துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளால் எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே விரைவில் நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து விலக இருக்கிறேன்.

எனது தொகுதி பிரச்சினைகளை தீர்க்கும்மாறு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்திருக்கிறேன்.

அவர் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்.

சமுதாயத்தில் மக்களுக்காக உழைப்பவர்கள் அரசியலுக்கு வரலாம்.

ஆனால் ஒரு சிலர் நான்கைந்து படங்களில் நடித்து விட்டு முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது சரியல்ல.

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் ஊட்டியில் இணையும் கார்த்தி – அதிதி ராவ்..!

விரைவில் ஊட்டியில் இணையும் கார்த்தி – அதிதி ராவ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi and aditi raoகோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘காஷ்மோரா’.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து, தன் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் கார்த்தி.

மணிரத்னம் இயக்கவுள்ள இப்படத்தில் பைலட்டாக நடிக்கிறார் கார்த்தி. நாயகியாக அதிதி ராவ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

விரைவில் இதன் படப்பிடிப்பை ஊட்டியில் ஒரு பாடலுடன் தொடங்கவிருக்கின்றனர்.

இதன் வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘உன்ன போல ஒருத்தர பார்த்ததே இல்லை…’ நயனை புகழும் விக்னேஷ் சிவன்..!

‘உன்ன போல ஒருத்தர பார்த்ததே இல்லை…’ நயனை புகழும் விக்னேஷ் சிவன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara and Vignesh Shivan2015ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் சைமா விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டது.

இதில் ‘நானும் ரௌடிதான்’ படம் 5 விருதுகளை கைப்பற்றியது.

சிறந்த நடிகைக்கான விருதை, இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் இருந்து பெற ஆசைப்படுவதாக நயன்தாரா தெரிவித்தார் என்பதை முன்பே பார்த்தோம்.

சிறந்த இயக்குனர் விருதை விக்னேஷ் சிவன் பெற்றபோது… ”நயன்தாரா போல ஒரு சிறந்த நபரை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்று நயன்தாராவைப் புகழ்ந்தார்.

அதுபோல் சிறந்த நடிகை விருதை பெற்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து பேசினார்.

இந்த விழாவிற்கு சிங்கப்பூர் ஏர்போர்ட்டுக்கு வந்து இறங்கிய முதல் விழாவிலும் இருவரும் இணைந்தே காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி ப்ரோமோஷன் ; கைகோர்த்த கார்ப்ரேட் நிறுவனங்கள்..!

கபாலி ப்ரோமோஷன் ; கைகோர்த்த கார்ப்ரேட் நிறுவனங்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali movie stillsரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் எப்படியாவது இந்த ஜுலை மாதத்திற்குள் ரிலீஸ் ஆகிவிடும் எனத் தெரிகிறது.

எனவே இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது தயாரிப்பு குழு.

ஒரு பக்கம் ஏர் ஏசியா நிறுவனம் இப்படத்தின் விளம்பரங்களை உலக திரையுலகமே ஆச்சரியப்படும் வகையில் செய்து வருகிறது.

இந்நிலையில் மற்ற விளம்பர பார்ட்னர்ஸ் யார்? யார்? என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஏர்ஏசியா நிறுவனத்துடன் அமேசான், கேட்பரி 5 ஸ்டார், ஏர்டெல், விஎஸ் ஹாஸ்பிட்டல் (Air Asia, Amazon, Cadbury 5 Star, AirTel, VSHospitals) ஆகியவையும் இணைந்துள்ளது.

‘ரசிகர்களுக்கு நன்றி மட்டும் சொல்வது போதாது…’ சூர்யா நெகிழ்ச்சி..!

‘ரசிகர்களுக்கு நன்றி மட்டும் சொல்வது போதாது…’ சூர்யா நெகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriyaதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூர்யா.

இந்தாண்டு வெளியான இவரின் 24 படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இதற்குமுன் வெளியான அஞ்சான் மற்றும் மாசு என்கிற மாசிலாமணி படங்கள் ஆகியவை வெற்றிப் பெறவில்லை.

இருந்தபோதிலும் சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது…

“என்னுடைய நல்ல நேரத்திலும் கெட்ட நேரத்திலும் என் மீது அளவு கடந்த அன்பை காண்பித்தீர்கள்.

நன்றி மட்டும் சொல்வது போதாது. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows