‘கருவறை’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஸ்ரீகாந்த் தேவா

‘கருவறை’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஸ்ரீகாந்த் தேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று ஆகஸ்ட் 24 அறிவிக்கப்பட்டது.

இவி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் ‘கருவறை’ குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது*

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ரித்விகா, மிதுன், வடிவுக்கரசி,அஞ்சனாதமிழ்ச்செல்வி,ரோகிணி ஆகியோர் நடிப்பில் NK.இராஜராஜன் ஒளிப்பதிவில்,ஸ்ரீகாந்த்தேவா இசையில், சுராஜ்கவி படத்தொகுப்பில், UKlஐயப்பன் (சவுண்ட்) ஒலிப்பதிவில், மனோ கலை இயக்கத்தில், இள.வாசுதேவன் ராஜன்கோவிந்தராஜன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பில், PRO சதீஷ் (AIM) மக்கள் தொடர்பில் உருவாகி இருக்கிறது கருவறை

*குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், வறுமையினால் பல லட்சம் உயிர்கள் கருவிலேயே கலைக்கப்படுகிறது.

இந்த அவலம் பற்றி *கருவறை* பேசுகிறது என்கிறார், இயக்குனர்
இவி.கணேஷ்பாபு.

Music composer Srikanth won National award for Karvarai

Karuvarai

BREAKING கடைசி விவசாயி அல்லு அர்ஜூன் RRR…. 69th National Awards Full list

BREAKING கடைசி விவசாயி அல்லு அர்ஜூன் RRR…. 69th National Awards Full list

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழா.

2021ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு…

2021-ஆம் ஆண்டுக்கான சிறப்பு திரைப்பட விருது பெறுகிறது கடைசி விவசாயி தமிழ்த் திரைப்படம்

விஜய் சேதுபதி தயாரித்து நடித்திருந்த கடைசி விவசாயி திரைப்படத்தை எம். மணிகண்டன் இயக்கி இருந்தார்

2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெறுகிறது கடைசி விவசாயி

சிறந்த சண்டைப் பயிற்சிக்கான தேசிய விருது பெறுகிறது ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்

சிறந்த நடனப் பயிற்சிக்கான தேசிய விருது பெறுகிறது ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்சுக்கான தேசிய விருது பெறுகிறது ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்

சிறந்த இசையமைப்பாளர் விருதை 2 பேர் பகிர்ந்து கொள்கின்றனர்

புஷ்பா படத்துக்காக தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்துக்காக எம்.எம். கீரவாணி பெறுகின்றனர்.

பிரபல ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கங்குபாய் காத்தியாவாடி படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருது

ஆலியா பட் நடித்த கங்குபாய் காத்தியாவாடி படத்துக்கு சிறந்த திரைக்கதை விருது

சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதைப் பெறுகிறார் ஷ்ரேயா கோஷல்

தமிழ்ப் படமான இரவின் நிழல் படத்தில் வரும் மாயாவா சாயாவா பாடலுக்காக ஷ்ரேயா கோஷலுக்கு விருது.

சிறந்த அனிமேஷன் திரைப்படமாக மலையாளத் திரைப்படமான ‘கண்டிதுண்டு’ தேர்வு

சிற்பங்களின் சிற்பங்கள் தமிழ்த் திரைப்படத்துக்கு சிறந்த கல்வியியல் திரைப்பட விருது

பிரபல படத்தொகுப்பாளர் பி. லெனின் இயக்கியுள்ள படம் சிற்பங்களின் சிற்பங்கள்.

ஏக்காகவுன் திரைப்படத்திற்காக பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு தேசிய விருது அறிவிப்பு.

ALLU ARJUN wins best actor award for #PushpaTheRise #PUSHPA.

King Solomon WINS Best Stunt Choreographer Film Award for #RRRMovie.

BEST popular film providing wholesome entertainment. – RRR movie

Best music direction – #PUSHPA & #RRRMovie. (Devi Sri Prasad & Keeravaani)

Komuram Bheemude – Singler Kaala Bhairava
Best Male Playback singer – RRR

Shreya Ghoshal WINS Best female play back singer award for Iravin Nizhal.

Awards for #RRR.
Best Choreography
Best Special Effects
Best Action Direction

ROCKETERY: The Nambi Effect wins BEST feature film award

Uppena WINS Best Telugu Feature Film Award

Kadaisi Vivasayi WINS Best Tamil Feature Film Award

HOME WINS Best Malayalam Feature Film Award

777 Charlie WINS Best Kannada Feature Film Award

Sardar Udham WINS Best Hindi Feature Film Award

Best Male Playback Singer – RRR – Kalabhairava

Best Actress – Aliya Bhat

அதிகபட்சமாக 7 தேசிய விருதுகளை ஆர்ஆர்ஆர் படம் அள்ளியது.

RRR Pushpa Kadaisi Vivasayi movies won national awards

‘லியோ’ ஆடியோ ரிலீஸ் அப்டேட் : ரசிகர்களே விஜய்யின் குட்டி ஸ்டோரி கேட்க ரெடியா.?

‘லியோ’ ஆடியோ ரிலீஸ் அப்டேட் : ரசிகர்களே விஜய்யின் குட்டி ஸ்டோரி கேட்க ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 23-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பிரபலங்கள், ரசிகர்கள் என 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

do you know when is the audio launch of vijay’s leo movie

ஆதிக்கு ஆளுநர் ரவி கொடுத்த பட்டம்.; மியூசிக் கற்றுக் கொடுக்க நடிகர் திட்டம்

ஆதிக்கு ஆளுநர் ரவி கொடுத்த பட்டம்.; மியூசிக் கற்றுக் கொடுக்க நடிகர் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி.

இவர் ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே ‘ஆம்பள’, ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை-2’, ‘கதகளி’, ‘கத்தி சண்டை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோமாளி’, ‘ஆக்ஷன்’ உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் ஆதி மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து பி.எச்.டி. ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் ஹிப்ஹாப் ஆதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி முனைவர் பட்டத்தை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஹிப்ஹாப் ஆதி, “சென்னையை மையமாக வைத்து இளைஞர்கள், மாணவர்களுக்கு என மியூசிக்கல் அகாடமி திறக்க உள்ளேன். இதற்காக தான் ஆராய்ச்சி படித்து பட்டம் பெற்றேன்.

மேலும், தற்போது ‘பி.டி சார்’ என்ற திரைப்படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்று பேசினார்.

ஹிப்ஹாப் ஆதி

hiphop adhi received his doctorate degree in bharathiar university

I LOVE YOU DI மார்க் ஆண்டனி வலையில் மாட்டிக் கொண்ட காதலர்கள்

I LOVE YOU DI மார்க் ஆண்டனி வலையில் மாட்டிக் கொண்ட காதலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் அபிநயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது.

‘மார்க் ஆண்டனி’ படத்தின் இரண்டாவது பாடல், “ஐ லவ் யு டி” வெளியிடப்பட்டது.

இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும், இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க் ஆண்டனி

vishal’s ‘mark antony’ movie second single ‘i love di’ song out

இணையத்தை கலக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் 2ஆம் பாடல் ‘மோருணியே..’

இணையத்தை கலக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் 2ஆம் பாடல் ‘மோருணியே..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘மோருணியே’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இந்த பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

சந்திரமுகி 2

‘Chandramukhi 2’ movie ‘Moruniye’ song Crosses 4 Million Views in youtube

More Articles
Follows