ஒரே மேடையில் *பேட்ட-சர்கார்* இரண்டையும் இணைக்க சன் டிவி திட்டம்

ஒரே மேடையில் *பேட்ட-சர்கார்* இரண்டையும் இணைக்க சன் டிவி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun Pictures plans to conduct Petta and Sarkar function on single stageகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட பட மோசன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது.

ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட மற்றும் விஜய் நடித்து வரும் சர்கார் ஆகிய இரு மெகா படங்களை ஒரே நேரத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அக்டோபர் 2-ஆம் தேதி நடத்தவுள்ளனர்.

அதே நாளில் ரஜினியின் பேட்ட படத்தின் டீசரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றாக நடத்த தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளதாம்.

இது நடைபெறும் பட்சத்தில் தென்னிந்தியாவின் அனைத்து சினிமா பிரபலங்களும் இதில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Sun Pictures plans to conduct Petta and Sarkar function on single stage

Big Breaking : ரஜினி 165 படத்தலைப்பை அறிவித்தது சன் பிக்சர்ஸ்

Big Breaking : ரஜினி 165 படத்தலைப்பை அறிவித்தது சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Stars Rajinikanths 165 movie titled Pettaகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இதுவரை தற்காலிகமாக தலைவர் 165 என பெயரிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பை மோசன் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

பேட்ட என பெயரிட்டுள்ளனர்.

Petta official motion poster

இப்படத்திற்கு அனிருத் இசையைமக்க, ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

Super Stars Rajinikanths 165 movie titled Petta

#BIGNEWS விநாயகர் சதுர்த்தியன்று ரஜினியின் 2.0 டீசர் ரிலீஸ்

#BIGNEWS விநாயகர் சதுர்த்தியன்று ரஜினியின் 2.0 டீசர் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 teaserகடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை செய்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 தயாராகி உள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இப்படம் 3டி யில் உருவாகி வருவதால் கிராபிக்ஸ் வேலைகள் தாமதமானது.

•சஞ்சு• பட வசூலை ரஜினி முறியடிப்பார் என ராஜு மகாலிங்கம் சவால்

எனவே ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.

சமீபத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக ஷங்கர் அறிவித்திருக்கிறார்.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இணையும் ராஜ்கிரண்-ரக்ஷன்

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இணையும் ராஜ்கிரண்-ரக்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raj-kkiran-rakshan‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கியவர் ராம்பிரகாஷ் ராயப்பா.

இதனையடுத்து சிபிராஜ், ஜீவா நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தை இயக்கினார். இந்தப்படம் படு தோல்வியடைந்தது.

இப்போது ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம்பிரகாஷ் ராயப்பா.

இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராம்பிரகாஷ் ராயப்பா அடுத்து சயின்ஸ் பிக்ஷன் கதை ஒன்றை இயக்க இருக்கிறார்.

இதில், ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். சின்னத்திரை நடிகரான ரக்ஷனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவரை சந்தித்து ஆறுதல் கூறி பதவி கொடுத்த ரஜினி

2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவரை சந்தித்து ஆறுதல் கூறி பதவி கொடுத்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini vijayஅண்மைக்காலமாக தமிழகத்தை அதிர்ச்சியடையும் செய்திகள் தினம் தினம் அரங்கேறி வருகிறது.

ஓரிரு தினங்களுக்கு முன் தன் கள்ளக்காதலுக்காக தான் பெற்ற 2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் சம்பவமும் தமிழக மக்களை அதிர்ச்சியுள்ளாக்கியது.

தற்போது அபிராமி மற்றும் பிரியாணி கள்ளக்காதலன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகளை இழந்து தவித்து வரும் அபிராமியின் கணவரும், குழந்தைகளின் தந்தையுமான விஜய்யை நடிகர் ரஜினிகாந்த், போயஸ் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்திற்கு நேரில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

ரஜினியை பார்த்ததும் கதறி அழுதார் விஜய். அவரை ரஜினி ஆசுவாசப்படுத்தினார்.

இதனையடுத்து ரஜினி ரசிகரான விஜய்க்கு குன்றத்தூர் ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரு முக்கிய பதவி ஒன்றையும் அளித்துள்ளார்.

நான்கு ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்

நான்கு ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதிரையுலகில் பன்முக திறமைக் கொண்ட தனுஷ், தனது இயக்கத்தில் உருவான பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராகவும் ஜொலித்தார்.

அதன்பின்னர் தயாரிப்பு மற்றும் நடிப்பில் பிஸியானார் தனுஷ்.

இதனிடையில் சில நாட்களாக தனுஷ், நெல்லை பகுதியில் முகாமிட்டு தனது அடுத்த பட இயக்கத்துக்கான லொகேஷன்களை பார்த்து வந்தார்.

இந்நிலையில், தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இவரின் புதிய படத்தில் நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சான் ரோல்டன் இசையமைக்க மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

More Articles
Follows