•சஞ்சு• பட வசூலை ரஜினி முறியடிப்பார் என ராஜு மகாலிங்கம் சவால்

•சஞ்சு• பட வசூலை ரஜினி முறியடிப்பார் என ராஜு மகாலிங்கம் சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis 2point0 movie will break Sanju record says Raju Mahalingamஇந்திய சினிமாவே வியக்கும் அளவுக்கு வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி 2.

இப்படத்தின் முதல் நாள் வசூலை அண்மையில் வெளியான சஞ்சு என்ற ஹிந்தி திரைப்படம் ஒரு நாள் வசூல் சாதனையை செய்துள்ளது.

ஆம், சஞ்சு கடந்த ஞாயிறு அன்று மட்டும் ரூ 46.7 கோடி வசூல் செய்துள்ளது.

இதை ட்விட்டரில் ஒருவர் பகிர, அதை டேக் செய்து அதற்கு பதில் அளித்துள்ளார் ராஜு மகாலிங்கம்.

ரஜினி நடித்துள்ள 2.0 படத்திற்கு காத்திருங்கள். அது முறியடிக்கும் என பதிவிட்டுள்ளார்.

ராஜு மகாலிங்கம் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinis 2point0 movie will break Sanju record says Raju Mahalingam

அஜித்-விஷாலை அடுத்து சூர்யா உடன் இணையும் ஆர்யா

அஜித்-விஷாலை அடுத்து சூர்யா உடன் இணையும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya suriyaஅஜித்துடன் ஆரம்பம், விஷாலுடன் அவன் இவன் ஆகிய படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தார் ஆர்யா.

தற்போது சூர்யா உடன் நடிக்கிறார். அதுபற்றிய விவரம் வருமாறு…

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட சூட்டிங் அண்மையில் லண்டனில் தொடங்கியது.

சூர்யாவின் 37-வது இப்படத்தில் சாயிஷா, மோகன்லால், அல்லு சிரிஷ், பாலிவுட் நடிகர் பொம்மி இரானி முதலானோருடன் ஆர்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டிருந்தோம்.

இப்போது, ‘சூர்யா-37’ல் ஆர்யா நடிக்க இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.

பாலா இயக்கத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் மேகா சௌத்ரி

பாலா இயக்கத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் மேகா சௌத்ரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meghaபாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படம் ‘வர்மா’.

தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீ-மேக் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த
கதாநாயகி நடிகையின் தேர்வு நடந்து வந்தது.

தற்போது ‘வர்மா’ படத்தின் கதாநாயகியாக மும்பையை சேர்ந்த மேகா சௌத்ரி என்பவர் தேர்வாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

‘E4 ENTERTAINMENT’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

நயன்தாரா படத்தில் முக்கிய கேரக்டரில் கலையரசன்

நயன்தாரா படத்தில் முக்கிய கேரக்டரில் கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalaiyarasan and nayantharaசர்ஜுன் இயக்கத்தில், நாயகியை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்தில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ‘கபாலி’ கலையரசன் நடிக்கிறாராம்.

இப்படத்தின் 2-ம் கட்டப் படப்பிடிப்புக்காக பேய் பங்களா செட் ஒன்றை சென்னையில் படக்குழுவினர் அமைத்து வருகின்றனர்.

Exclusive *அதிரடி* படத்திற்காக சிம்புவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

Exclusive *அதிரடி* படத்திற்காக சிம்புவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and keerthy sureshதமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் ராசியான ஜோடி ஆகிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது விக்ரம் ஜோடியாக ‘சாமி ஸ்கொயர்’, விஷால் ஜோடியாக ‘சண்டக்கோழி 2’, விஜய் ஜோடியாக ‘சர்கார்’ ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன.

இந்நிலையில், சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

‘பார்ட்டி’ படத்தைத் தொடர்ந்து இப் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு.

இந்தப் படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற பி.சி.ஸ்ரீராமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கார்த்திக்கை நடிக்க வைத்த கெளதமுக்கு *Mr சந்திரமௌலி* படக்குழுவின் நன்றிக்கடன்

கார்த்திக்கை நடிக்க வைத்த கெளதமுக்கு *Mr சந்திரமௌலி* படக்குழுவின் நன்றிக்கடன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthik and gauthma karthikஒரு குழந்தையை பெற்றெடுத்த தாயின் மகிழ்ச்சிக்கு இணையாக, தயாரிப்பாளரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இருக்காது.

வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 6) வெளியாகும் மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவிக்கும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் அவர்களிடம் இருந்து வெளியாகும் வார்த்தைகள் இவை.

இயக்குனர் திரு பற்றி அவர் பாராட்டி கூறுகையில், “அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. அவரது உற்சாகமான பொறுப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, புதுமையான சிந்தனை, அணியின் புத்துணர்ச்சியை மேம்படுத்துபவர் என முழு அணியும் நேசிக்கும் ஒரு நல்ல தலைவராக இருக்கிறார்.

தொழில்நுட்பக் குழுவை பற்றி பேசும்போது, “ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் அவரது முழுமையான அர்ப்பணிப்பை இந்தத் திரைப்படத்துக்கு அளித்திருக்கிறார். மேலும் அவருடைய காட்சியமைப்புகள் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும். நிச்சயமாக, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்தின் மிகப்பெரிய சொத்து. படத்தை முடித்து வீட்டுக்கு செல்லும் ரசிகர்கள் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தங்களோடு எடுத்து செல்வார்கள். எடிட்டர் சுரேஷ் டிஎஸ் குழுவுடன் இணைந்து பணிபுரியும் ஒரு அற்புதமான கலைஞர். அவரது திறமையான எடிட்டிங், திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும். மிஸ்டர் சந்திரமௌலி திட்டமிட்ட பட்ஜெட்டில் முடிக்க முக்கியமான ஒரு காரணம் கலை இயக்குநர் ஜாக்கி. குறிப்பிட்ட பட்ஜெட்டில், சிக்கலான சூழல்களின் கீழ் பணிபுரிந்தாலும் கூட சிறந்த அவுட்புட் கொடுக்க அவர் தயங்கவில்லை.

பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் முக்கியமான ஒரு அம்சம் சவுண்ட். படத்தின் ரிலீஸுக்கு பிறகு விஜய் ரத்னத்துடைய வேலை சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பேசப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜெயலட்சுமியின் ஆடைகள் மற்றும் ஆடை வடிவமைப்பு படத்தை இன்னமும் அலங்கரித்து, வண்ணமயமாக்கி உள்ளன. இந்த படத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அதிரடி சண்டைக்காட்சிகள். ‘ஸ்டண்ட்’ சில்வா இல்லையென்றால், இந்த மாதிரி ஒரு அற்புதமான அவுட்புட் நாங்கள் பெற்றிருக்க மாட்டோம்”.

மேலும், நவரச நாயகன் கார்த்திக் தான் இந்த படத்தின் உச்சகட்ட மகிழ்ச்சி என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் கூறும்போது, “கார்த்திக் சார் இல்லாவிட்டால், இந்த படம் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது. இது தந்தை-மகன் என்ற தனித்துவமான விற்பனை புள்ளியை தழுவி நிற்கிறது. கௌதம் கார்த்திக் பற்றி கூறும்போது, “அவர் ஒரு தொழில்முறை நடிகர், அவர் நடித்துள்ள பாத்திரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்படி கூடுதல் முயற்சிகள் எடுத்தார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது நடிப்பை வெளிப்படுத்த, அர்ப்பணிப்புடன் நிறைய விஷயங்களை செய்தார். அது படத்தின் மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியது. மேலும் கார்த்திக் சார் படத்தில் நடிக்க முக்கிய காரணம் கௌதம் கார்த்திக் தான். ஒட்டுமொத்த குழுவும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்கள் இருந்தாலும், ரெஜினா கஸாண்ட்ரா இந்த படத்திற்கு தேதிகள் ஒதுக்கி முழு ஆதரவு கொடுத்தார். அவர் பணிபுரியும் எல்லோரையும் மதித்து, இயல்பாக்கி வைத்திருந்தார். எந்தவிதமான அழுத்தங்களையும் அல்லது தொந்தரவுகளையும் உருவாக்கவில்லை, இது ஒரு வகையான அரிய இயல்பு. திரைப்படத்தை விளம்பரப்படுத்தவும், எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்” என்றார் தனஞ்செயன்.

“பல படங்களில் பிஸியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் போன்ற ஒரு நடிகை, எங்கள் படத்தில் இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹைலைட்டான விஷயம் அது. நடிகர் சதீஷ், வெறும் நடிகராக மட்டுமல்லாமல், படம் சிறப்பாக வருவதற்கு எல்லா வகைகளிலும் தன் பங்களிப்பை தருபவர். மகேந்திரன் சார் போன்ற ஒரு லெஜண்ட் உடன் பணிபுரிவது ஒரு தயாரிப்பாளராக எனக்கு மறக்க முடியாத தருணம். ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். அகத்தியன் சாரின் வருகையும் இந்த திரைப்படத்திற்கான கூடுதல் மரியாதை. சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள கதாபாத்திரம் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மைம் கோபியின் அர்ப்பணிப்பு அசாதாரணமானது மற்றும் அவரது கதாபாத்திரம் மேலும் சவால்களை உள்ளடக்கியது, மிகவும் நன்றாக வந்திருக்கிறது. விஜி சந்திரசேகர் மற்றும் வெங்கட் சுபா ஆகியோரின் நடிப்பு மிகவும் பாராட்டக்கூடியது” என்றார்.
“இவர்களின் சீரிய முயற்சி மற்றும் கடின உழைப்பு தந்த பலன் தான், இன்று இந்த படத்துக்கு 300 காட்சிகள் என்ற செய்தி. ரசிகர்கள் உத்திரவாதமாக ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தை கண்டு களிக்கலாம்” என்று தனக்கே உரிய தன்னம்பிக்கையோடு கூறினார்.

More Articles
Follows