தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
“ஜவான்” ப்ரிவ்யூ வெளியானதிலிருந்தே, ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது ப்ரிவ்யூவில் இடம்பெற்ற முக்கிய அம்சம் நடிகர் ஷாருக்கானின் பலவிதமான தோற்றங்கள் தான்.
‘ஜவான்’ படத்திலிருந்து, நடிகர் SRK-ன் அனைத்து அவதாரங்களையும் ஒரே சட்டகத்தில் கொண்டு வந்து, ஒரு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த போஸ்டர் படத்தில் ஷாருக்கின் ஐந்து வெவ்வேறு தோற்றங்களையும் அற்புதமாக காட்டுகிறது.
இந்த மாறுபட்ட அவதாரங்களுக்கு, SRK சிரமமின்றி மாறுவது அவரது குறிப்பிடத்தக்க பன்முகத் திறனுக்கு ஒரு பெரும் சான்றாகும்.
“ஜவான்” சந்தேகத்திற்கு இடமின்றி நாம் பார்த்திராத SRK ன் பல வித்தியாசமான அவதாரங்களை, பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தவுள்ளது.
“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.
கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Shah Rukh Khan unveils a multi faceted poster of Jawan