தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
தற்போது ஷாருக்கான் உடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘ஜவான்’ பட ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது.
இதில் ஷாருக், அட்லி, விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத் உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்கேற்றனர். ஆனால் இதில் நாயகியாக நடித்திருந்த நயன்தாரா பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி ஷாருக்கான் மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர் .
அவர்கள் திருப்பதி கோயிலில் சென்று வந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Sharukh Nayanthara Vickky thirupathi temple visit