தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று செப்டம்பர் 7ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தயாரித்து நடித்த ‘ஜவான்’ படம் வெளியானது.
இந்த படத்தை தமிழக இயக்குனர் அட்லி இயக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அனிருத் இசையமைக்க ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு இருந்தார்.
எனவே ஜவான் படத்தின் வெற்றிக்காக ஹிந்தி ரசிகர்களைப் போல தமிழக ரசிகர்களும் காத்திருந்தனர்.
இந்த படம் ஹிந்தி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே அட்லீ இயக்கிய அனைத்து படங்களிலும் அவர் பல படங்களை காப்பி அடித்து எடுப்பதாக குற்றச்சாட்டு எழுவது வழக்கம். எனவே ‘ஜவான்’ படத்திற்கும் பல விமர்சனங்கள் எழுந்தன.
பத்திரிகையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது ‘ஜவான்’.
இந்த நிலையில் இந்த படம் உலக அளவில் நேற்று 129.6 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. ஹிந்தி சினிமா வரலாற்றில் இது மிகப்பெரிய ரெக்கார்டு எனவும் கூறப்படுகிறது.
Jawan movie crossed Rs 130cr collection in box office