ரஜினிக்காக பாடியது சந்தோஷம்..; பேட்ட பாடல் குறித்து பாடகர் எஸ்பிபி

Rajini and SPBகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் என்ற சிங்கிள் டிராக் பாடலை சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர்.

பாடலாசிரியர் விவேக் எழுதிய அந்த பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து அனிருத்தும் பாடியிருந்தார்.

சில வருடங்களுக்கு பிறகு ரஜினி பட பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பதால் அனைவரும் இதை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் அந்த பாடலில் சில நொடிகள் மட்டுமே எஸ்.பி.பி. பாடியிருந்தார்.

இதனால் இசை பிரியர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில், அந்த பாடல் குறித்து எஸ்.பி.பி., விடுத்துள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளதாவது…

பேட்ட படத்தில் நான் பாடிய மரண மாஸ் பாடலில் எனக்கான போர்ஷன் கம்மிதான் என்பது எனக்கு தெரியும். என்றாலும் நான் பாடியது ரஜினிகாந்துக்காக என்பதால் வருத்தப்படவில்லை. மாறாக, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்தை 2019 பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது

Overall Rating : Not available

Related News

‘பேட்ட’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை…
...Read More
சீயோன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பொது…
...Read More
சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீபிரியங்கா, சீமான்,…
...Read More

Latest Post