‘நீங்க ஜீனியஸ்…’ யாரை இப்படி பாராட்டினார் சௌந்தர்யா ரஜினி.?

‘நீங்க ஜீனியஸ்…’ யாரை இப்படி பாராட்டினார் சௌந்தர்யா ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soundarya Rajini Sean Roldan and Dhanushதனுஷ் தயாரித்து முதன்முறையாக இயக்கியுள்ள படம் பவர் பாண்டி.

ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங், ரேவதி நடித்துள்ள இப்படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியானது.

இப்படத்தின் பாடல்களை தனுஷ், செல்வராகவன், ராஜீமுருகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்த பாடல்களை கேட்ட சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினியும் இசையமைப்பாளர் சீன் ரோல்டானை நீங்க ஜீனியஸ் என்று பாராட்டியுள்ளார்.

சௌந்தர்யா ரஜினி இயக்கும் தனுஷின் விஐபி 2 படத்திற்கும் சீன ரோல்டானே இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Soundharya Rajini congratulated Sean Roldan for Power Pandi Songs

soundarya rajnikanth‏ @soundaryaarajni 21m21 minutes ago
soundarya rajnikanth Retweeted Sean Roldan
You are a genius Sean

தடைகளை உடைத்து வருகிறார் மொட்டை சிவா கெட்ட சிவா

தடைகளை உடைத்து வருகிறார் மொட்டை சிவா கெட்ட சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Motta Shiva Ketta Shiva posterஅரசு பிலிம்ஸ் நிறுவனத்திற்கு படத்தை விற்றுவிட்டு அதன் பிறகு சிவபாலன் பிச்சர்ஸ்க்கும் மதன் விற்றதால் இன்று லாரன்ஸ் நடித்த மொட்டை சிவா கெட்ட சிவா படம் ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல் நிலவியது.

நீதிமன்றத்தை அணுகிய அரசு பிலிம்ஸ் நிறுவனம் படத்தை நாங்கள் தான் வெளியிடுவோம். படத்திற்கு நாங்கள் பேசிய தொகை 13 கோடியில் 2 கோடியை முன்பணமாக கொடுத்து விட்டோம்.

மீதி 11 கோடியை நீதிமன்றத்திலேயே உடனடியாக செலுத்துகிறோம் ஆனால் படத்தை நாங்கள்தான் வெளியிடுவோம் என்று அவர்கள் கூறியதை அடுத்து நீதிமன்றம் அந்த படம் வெளிவருவதற்கு தடை விதித்து இருந்தது.

இந்நிலையில் நேற்று அரசு பிலிம்ஸ் நிறுவனத்தினரை அழைத்த திரையுலக முக்கிய புள்ளிகள் சமரசம் பேசி மதன் செய்த தவறுக்கு பாதி பணத்தை இந்த படத்தில் கொடுத்து விடுவதாகவும் மீதி பணத்தை மதன் லாரன்ஸை வைத்தது அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார்.

அந்த படத்தின் போது தருவதாகவும் உத்திரவாதம் கொடுத்ததை அடுத்து பாதி பணத்தை பெற்று கொண்டு அரசு பிலிம்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட நேற்று இரவு அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து இன்று படம் வெளியாகிறது.

மீதி பணத்தை மதன் வெளியில் வந்தவுடன் ராகவா லாரன்ஸ் அவருக்காக ஒரு படம் நடித்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறார்.

அந்த பட வெளியீட்டின் போது வழங்கப்படும் என்று திரையுலக புள்ளிகள் தெரிவித்தனர்.

Motta Shiva Ketta Shiva issuces solved and release today

சிம்புவை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த பிரபலம்

சிம்புவை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pandirajபாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படம் பல பிரச்சினைகளை சந்தித்து கடந்த 2016 ஆண்டு வெளியானது.

ஆனால் இதனையடுத்து தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் பாண்டிராஜ்.

தற்போதுதான் அதற்கான நேரம் அமைந்துள்ளது போலும்.

தற்போது ஜி.வி. பிரகாஷுடன் ஒரு தயாரிப்பாளராக இணைகிறார் பாண்டிராஜ்.

தன்னுடைய பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அவரின் நண்பர் P.ரவிச்சந்திரனின் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிப்பதுடன் வசனமும் எழுதியிருக்கிறார்.

செம என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்து இசையமைக்கிறார்.

இவருடன் நாயகியாக அர்த்தனா நடிக்க, யோகிபாபு,கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வில்லனாக ”ஜனா” என்பவர் அறிமுகமாகிறார்.

பாண்டிராஜின் உதவி இயக்குனர் வள்ளிகாந்த் இயக்குகிறார்.

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார், பிரதீப் E ராகவ் எடிட்டிங், J.K..அருள்குமார் கலை இயக்குனர், யுகபாரதி, ஏகாதசி பாடல்கள் எழுதுகின்றனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு கோர்ட் தடை !

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு கோர்ட் தடை !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singara velanமொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் தமிழக உரிமையை சிவபாலன் பிக்சர்ஸ் டாக்டர் சிவபாலன் வாங்கியிருப்பதாகவும் தடைகளையெல்லாம் தாண்டி நாளை வெளியிடப்போவதாகவும் விளம்பரங்கள் தந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை தன்னிடம் விற்றதாகவும் தனக்கு நீதி கிடைக்கும் வரை படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று அரசு பிலிம்ஸ் கோபி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெளியிட தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து அரசு பிலிம்ஸ் சார்பாக இன்று பிரஸ் மீட்டில் பேசிய சிங்காரவேலன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை வேந்தர் மூவிஸ் மதன் தயாரித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு சற்று பண நெருக்கடி ஏற்பட்டது.

நான் அவருக்கு நெருக்கமாக இருந்ததால் என்னிடம் வந்து கடனாக பணம் கேட்டார் மதன். படத்தின் மீது ஏற்கனவே நிறைய கடன்கள் இருந்ததால் நான் பணமாக தர முடியாது.

பதிலாக தமிழக உரிமையைத் தந்தால் தருகிறேன்’ என்று சொல்ல அதற்கு ஒப்புக்கொண்டார் மதன்.

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் தமிழக உரிமையை 13 கோடி ரூபாய்க்கு விலை பேசி அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டோம்.

ஒன்றரை கோடியை ரொக்கமாகவும் 50 லட்சத்தை ஆன்லைன் மூலமாகவும் அட்வான்ஸாக மதனிடம் வழங்கினேன். அதற்கான ஒப்பந்தம் என்னிடம் உள்ளது.

திடீரென்று 2016 தமிழ் புத்தாண்டு அன்று சிவபாலன் பிக்சர்ஸ் வெளியீடு என்று விளம்பரம் வந்தது. உடனடியாக மதனிடம் முறையிட்டேன்.

அவரோ என்னை சமாதானப்படுத்தி எனக்கு தான் தமிழக உரிமை என்று உறுதியளித்தார். சிவபாலன் மதனின் பினாமியாக செயல்படுபவர் என்பதால் நம்பினேன்.

திடீரென்று மதன் மாயமானதால் குழம்பிப்போனேன். காவல்துறை விசாரணையில் கூட இதை முறையிட்டேன். படத்தை வெளியிட முயற்சித்தார்கள். பிப்ரவரி 24 வெளியீடு என்று விளம்பரம் வந்தது. அதில் சிவபாலன் பிக்சர்ஸ் என்றே விளம்பரம் வந்ததால் நான் நீதிமன்றத்தை அணுகினேன்.

பிப்ரவரி 22 அன்றே நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கிவிட்டோம். மதனோ, இல்லை வேறு யாராரக இருந்தாலும் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. போத்ரா படத்தின் மீது தொடர்ந்த வழக்கு போய்க்கொண்டிருந்ததால் நான் பொறுமையாக இருந்தேன். இப்போது இந்த தகவல்களை வெளியிடுகிறேன்’ என்றார்.

பிப்ரவரி 22 அன்று விதித்த தடையை மார்ச் 8 அன்று மதன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தனர்.. ஆனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி அவர்கள் விடுமுறையில் சென்று இருப்பதால் இந்த விசாரணை வேறு ஒரு நாளிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எனவே படத்தை வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்று படத்தை வெளியிடும் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நயன்தாரா மாதிரி இருப்பது ரொம்ப கஷ்டம்.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

நயன்தாரா மாதிரி இருப்பது ரொம்ப கஷ்டம்.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vignesh shivan and nayantharaதென்னிந்திய ரசிகர்களை தன் அழகான நடிப்பால் கவர்ந்து வைத்திருப்பவர் நயன்தாரா.

இவரது நடிப்பில் கொலையுதிர்காலம், டோரா ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இவரின் நெருங்கிய ஆண் நண்பரான இயக்குனர் விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில்…

நயன்தாரா தைரியமான பெண். யாராவது தவறாக பேசினால் கூட சிரித்துவிட்டு செல்வார்.

அவரை போல் இருப்பது ரொம்ப கஷ்டம்.” என்று தெரிவித்துள்ளார்.

#HappyWomensDay #Nayanthara ❤️ pic.twitter.com/IZGXeovQHl

— Vignesh ShivN (@VigneshShivN) March 8, 2017

ரசிகர்கள் மோதலை ஒன்றாக பார்க்க போகும் ரஜினி-கமல்

ரசிகர்கள் மோதலை ஒன்றாக பார்க்க போகும் ரஜினி-கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Kamal haasanநட்ராஜ், ராஜாஜி, பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் எங்கிட்ட மோதாதே.

ராமு செல்லப்பா இயக்கியுள்ள இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

மார்ச் 10ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதைக்களமே ரஜினி-கமல் ரசிகர்களின் மோதல்தான். 1980களில் நடந்த கட்அவுட் கலாச்சாரம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல்தான்.

இந்நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ரஜினி மற்றும் கமலை படக்குழு அழைக்கவிருக்கிறதாம்.

ஒருவேளை அவர்கள் ஒப்புக் கொண்டால், திரையில் தங்கள் ரசிகர்கள் மோதவுள்ளதை ரஜினி-கமல் இணைந்து பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows