‘கனா’ படத்தை ஹிந்திக்கு கொண்டு செல்லும் சிவகார்த்திகேயன்.?

‘கனா’ படத்தை ஹிந்திக்கு கொண்டு செல்லும் சிவகார்த்திகேயன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanaaசிவகார்த்திகேயன் தயாரிப்பில் பாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’.

இந்தப் படத்தை பெண்கள் கிரிக்கெட்டை & விவசாயத்தை மையமாக வைத்து எடுத்திருந்தார்.

சத்யராஜ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர்.

தமிழில் சூப்பர் ஹிட்டான இதை தெலுங்கில் ‘கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்தியிலும் ‘கனா’ படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘சோக்டு (Choked)’ வெப் சீரிஸ் படத்தை பார்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதில் ‘சோக்டு’ பார்த்தேன். வாழ்த்துகள் சையாமி கெர்.. உங்களை விரைவில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமொன்றில் பார்க்க ஆவலாக உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.

அதற்கு சையாமி கெர், “நன்றி சிவகார்த்திகேயன் சார். உங்கள் கிரிக்கெட் படத்துக்கு ஆவலாக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் ட்வீட்களை பார்த்தால் ‘கனா’ படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக எதிர்பார்க்கலாம்.

 

போலீஸ் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய முடியாது..; பால் முகவர்கள் சங்கம்

போலீஸ் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய முடியாது..; பால் முகவர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

milk associationபால் விநியோகம் செய்யும் முகவர்களை மிரட்டுவது, பால் கடைகளை அடைக்கச்சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தமிழகம் முழுவதும் போலீஸ் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்ய மாட்டோம் என பால் முகவர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளனர்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது..

“தமிழகம் முழுவதும் பால் விநியோகத்தில் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா காலத்திலும் மக்களுக்குப் பால் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பால் விநியோகத்தில் ஈடுபடும் பால் முகவர்களை வேலை செய்யவிடாமல் வாகனங்களைப் பறிமுதல் செய்வது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது எனப் பல இடையூறுகளைக் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாகத் தமிழக முதல்வர், பால்வளத் துறை அமைச்சர், காவல்துறை தலைவர், ஆணையாளர் ஆகியோரது கவனத்திற்குக் கொண்டு சென்று உள்ளோம்.

இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் இருக்கிறது.

எனவே நாளை ஜூன் 27 முதல் காவல்துறையினர் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போலீஸ் வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்யப் போவதில்லை” என்றார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் இறந்ததைக் கண்டித்து, அனைத்து வணிகர்கள் சங்க சார்பில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Displaying DSC_1233_801x1200.JPG.

ஜெயராஜ் & பெனிக்ஸ் கொலை; போலீசை தண்டிக்க வேண்டும் என கோலிவுட் ஸ்டார்ஸ் வாய்ஸ்

ஜெயராஜ் & பெனிக்ஸ் கொலை; போலீசை தண்டிக்க வேண்டும் என கோலிவுட் ஸ்டார்ஸ் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jeyaraj fenixதூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது மொபைல் போன் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் தந்தை, மகனை அழைத்துச் சென்று போலீஸ் தாக்கினர்.

அங்கு சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டதை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளனர்.

காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய கோரிக்கையும் வைத்துள்ளனர்.

சினிமா பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

ட்விட்டரில் #JusticeForJayarajAndFenix என்ற ஹேஷ்டேக்கில் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

சினிமா பிரபலங்கள் வெளியிட்டுள்ள ட்வீட்கள் இதோ…

குஷ்பு: ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில், மேற்கொண்டு எந்த தாமதமும் இன்றி, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு சட்டம் தன் கடமையைச் செய்வதை நாம் பார்ப்போமா? குற்றம் செய்தவர்கள் தப்பித்துவிடக் கூடாது.

தங்களின் அன்பார்ந்தவர்களை ஒரு குடும்பம் இழந்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி. #JusticeForJeyarajAndFenix

ஐஸ்வர்யா ராஜேஷ்: சாத்தான்குளம் சம்பவம் கொடூரமானது. முற்றிலும் மிருகத்தனமான செயல். கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி.

ஜெயம் ரவி: #JusticeForJeyarajAndFenix சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை, இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

வரலட்சுமி: ஒரு விஷயம் தவறென்றால், தவறு தான். அதை யார் செய்திருந்தாலும் சரி. சாத்தான்குளம் காவல்துறை நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியைத் தருகிறது. அந்த குடும்பத்துக்கு ஆறுதலே தர முடியாது. ஒட்டுமொத்த காவல்துறையையும் இதை வைத்துக் குற்றம்சாட்ட முடியாது. அந்த வெறி பிடித்த இரண்டு பேரும் தண்டிக்கப்பட வேண்டும்.

கார்த்திக் சுப்புராஜ்: சாத்தான்குளத்தில் நடந்த விஷயம் கொடூரமானது. மனிதத்தன்மைக்கு ஒரு அவமானம். குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த பாவப்பட்ட ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சில மனிதர்கள், வைரஸ் கிருமிகளை விட ஆபத்தானவர்கள்.

ஹன்சிகா: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்டுள்ள குரூரத்தைக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன். காவல்துறைக்கும், நமது தேசத்துக்கும் இந்த வெறி பிடித்தவர்கள் அவமானத்தைத் தேடித் தந்துள்ளனர். குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

கெளதம் கார்த்தி: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். நீதியை, சட்ட ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய, நல்ல, நேர்மையான காவல்துறை அதிகாரியின் செயல் அல்ல இது. சீருடையில் இருக்கும் சில காட்டுமிராண்டித்தனமான குற்றவாளிகளின் செயல்..

இமான்: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட வன்முறை முற்றிலும் மிருகத்தனமானது. அவர்கள் அனுபவித்த சித்திரவதையை ஜீரணிக்க முடியவில்லை. இந்தியாவில் நடந்த இந்த இரக்கமற்ற செயலுக்கு நாம் குரல் கொடுப்போம். ஜெயராஜும், பென்னிக்ஸும், இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்.

ஜி.வி.பிரகாஷ்: பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை.

நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுக்கொள்ளும் என்பதே வரலாறு. இருவர் மரணத்தை மனிதக் குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கதிர்: மக்களைப் பாதுகாக்கிறது என்பதால் தான் சட்டம் ஒழுங்கு மதிக்கப்படுகிறது. அது அப்பாவி மக்களுக்கு அச்சுறுத்துலாக மாறக்கூடாது. சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் நீதியும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். நீதிக்காக அனைவரும் ஒன்றாக நிற்போம் என்று நம்புகிறேன்.

அதுல்யா ரவி: முற்றிலும் மனிதத்தன்மையற்ற செயல். சாத்தான்குளத்தில் வாழும் ஒரு கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராஜும், பென்னிக்ஸும் காவல்துறை அதிகாரியால் மிருகத்தனமாக நடத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களின் உயிர் மீது யாருக்கும் இவ்வளவு அதிகாரம் இருக்கக் கூடாது. இந்த குற்றவாளிகளுக்கு நமது எதிர்ப்பைக் காட்ட வேண்டிய நேரமிது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ராஷி கண்ணா: சீருடையில், காட்டுமிராண்டித்தனமான, குரூரமான செயல்களை செய்துள்ள இவர்களை நினைத்தால் முதுகுத்தண்டு சில்லிடுகிறது. யாரும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல. நீதி தரப்பட வேண்டும். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

சாந்தனு: போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும். அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இது விசாரணை அல்ல. இது ஒரு கொலை. அனைவரையும் விட சட்டமே மேலானது என்றால், இதுதான் அதன் சக்தியைக் காட்ட சரியான நேரம்.

இயக்குநர் ரத்னகுமார்: இது முற்றிலும் ஒரு அநீதி. விசாரணை என்ற பெயரில் அப்பாவிகள் கொல்லப்படுவது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று.

இப்போது நீதி ஒழுங்காக வழங்கப்படவில்லை என்றால், நீதி அமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். தயவுசெய்து இந்த விவகாரத்தை மாற்றிப்பேசி, மற்ற பிரச்சினைகளை வைத்துத் திசைதிருப்பாமல் இருங்கள்.

இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு “நேக்டு நங்கா நக்னம்”

இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு “நேக்டு நங்கா நக்னம்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naked Nanga Nagnamகரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார்.

எளிதில் துவண்டுவிடாத மனம் கொண்ட ராம்கோபால் வர்மா, இந்த கரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஏடிடி தளம், வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாணடமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது.

க்ளைமாக்ஸ் படத்தின் பெரும்வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான நேக்டு நங்கா நக்னம் படத்தை இதே தளத்தில வரும் ஜூன் 27 அன்று வெளியிடவுள்ளார்.

நேக்டு நங்கா நக்னம், ஏடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது ராம்கோபால் வர்மா திரைப்படமாகும்

இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக்கிடைக்கும். இந்த தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் முதல் படமும் இதுவே.

சினிமா ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய பாராட்டுகளை கிளைமாக்ஸ் திரைப்படம் பெற்றுள்ளது. சினிமா உலகில் ஆன்லைன் தியேட்டர் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஷ்ரேயாஸ் ஈடியின் புதிய வெர்ஷன் ஏராளமான வெற்றிப்படங்களை வரும் 2021 மார்ச் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.

ராம்கோபால் வர்மா படங்கள் தவிர்த்து, 302, சிவன் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களின் நேரடி வெளியீட்டை மற்ற 10 மல்டிப்ளெக்ஸ்களும் காணவுள்ளன. நயன்தாரா நடிக்கும் தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பும் நேரடியாக ஷ்ரேயாஸ் இடியின் மூலம் வெளியாகவுள்ளது. இது ஷ்ரேயாஸ் ஈடிக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே இருக்கப்போகும் நீண்ட பந்தத்தின் ஆரம்பமாக இருக்கும்.

4 மொழிகளில் விஷாலின் ‘சக்ரா’.. ட்ரைலரை வெளியிடும் 4 மொழி நட்சத்திரங்கள்

4 மொழிகளில் விஷாலின் ‘சக்ரா’.. ட்ரைலரை வெளியிடும் 4 மொழி நட்சத்திரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakra trailerமுதன்றையாக நான்கு மொழிகளில் விஷால் நடிக்கும் ‘சக்ரா’ . நான்கு மொழி நட்சத்திரங்கள் வெளியிடும் படத்தின் ட்ரெய்லர் !

விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை தென்னகத்தின் நான்கு மாவட்டங்களில் நான்கு பிரபல நடிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.தமிழில் கார்த்தி, ஆர்யா, தெலுங்கில் ராணா, மலையாளத்தில் மோகன்லால்,கன்னடத்தில் யஷ் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாக இருக்கிறது.இதற்கு முன் வெளியான ‘சக்ரா’வின் க்ளிம்ப்ஸ் என்கிற குறு முன்னோட்டம் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.இந்த குறு முன்னோட்டத்தை பார்த்தவர்கள் இது இரும்புத்திரை படம் போல் இருக்குமா? இது ‘இரும்புத்திரை 2ஆம் பாகமா? என்று இயக்குநரிடம் கேட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறும்போது ‘
“சைபர் க்ரைம் பற்றிய படம்தான் “சக்ரா”வும் என்றாலும் இரும்புத்திரைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தம் இருக்காது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் ஒரு காட்சி கூட வேறெந்த படத்திலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. அப்படிப் புதிய தளத்தில் காட்சிகள் இருக்கும். இதில் கதாநாயகன் விஷால் தான் என்றாலும் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் உங்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கும்படி கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கும். ஆனால் அவை வழக்கம் போல் இருக்காது. ஒரு வினாடி கூட பார்வையாளர்கள் கவனம் தவற விட முடியாத அளவுக்கு அவர்களை இருக்கையின் நுனியில் கட்டிப் போடும் படமாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் .” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர்.

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்கும் எம்.எஸ். ஆனந்தன் ,
இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.

ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பின்னணியுள்ள கதையாக “சக்ரா” உருவாகி வருகிறது. வங்கிக் கொள்ளையர்களை விட சைபர் ஹேக்கர்ஸ் என்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை விளங்க வைக்கும் கதை.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.
இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, PRO ஜான்சன்.

ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது.!

முதன்முறையாக பெட்ரோல் விலையை ஓவர் டேக் செய்த டீசல்.!; என்ன சார் நடக்குது நாட்டுல..?!

முதன்முறையாக பெட்ரோல் விலையை ஓவர் டேக் செய்த டீசல்.!; என்ன சார் நடக்குது நாட்டுல..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

diesel priceஇந்தியாவின் தலைநகர் டெல்லி.

இங்கு பல அரசியல் அதிரடி நிகழ்வுகளுக்கு பஞ்சமிருக்காது. அது பழகி போன ஒன்று.

ஆனால் தற்போது டில்லியில் முதல் முறையாக, டீசல் விலை பெட்ரோலை விட அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 18வது நாளாக டெல்லியில் டீசல் விலை 48 காசுகள் உயர்த்தப்பட்டதால், லிட்டர் 79.88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்படாததால், லிட்டர் 79.76 ரூபாயாக இருந்தது.

இதன் மூலம் இந்திய வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்பனையானது.

பெட்ரோல் இன்ஜின் கார்களை விட டீசல் இன்ஜின் கார்கள் அதிக மைலேஜ் தரும்.. பராமரிப்பு செலவும் குறைவு..
ஆயுட் காலமும் அதிகமாக இருக்கும்.

அத்துடன் பெட்ரோல் விலையை காட்டிலும் டீசல் விலை எப்போதும் மிக குறைவாக இருக்கும்.

ஆனால் இந்த அதிரடி டீசல் விலை உயர்வால் டீசல் கார் ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

More Articles
Follows