ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படம் ‘கனா’ பட காப்பியா.? நெல்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படம் ‘கனா’ பட காப்பியா.? நெல்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

ஜெயிலர்

இந்த படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஓரிரு தினங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது.

ஜெயிலர்

இந்த படத்தின் போஸ்டரும் சிவகார்த்திகேயன் நடித்த ‘கனா’ பட போஸ்டரும் ஒரே போல உள்ளது என நெட்டிசன்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதன் விவரத்தை இப்போது இந்த வீடியோவில் பார்க்கலாம்…

Fans comparing Rajinis Jailer and Sivakarthikeyans Kanaa movie

*1 NEWS 1 MIN*: JAILER KANAA போஸ்டர் மட்டும்தான் காப்பியா? நெல்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Rajini filmistreet

https://youtube.com/shorts/XQzTqTZq9YE?feature=share

மதுரைக்காரங்கே பாலா அமீர் என் ஃப்ரெண்ட்ஸ்.; மதுரைன்னாலே மீசை முறுக்குது – விக்ரம்

மதுரைக்காரங்கே பாலா அமீர் என் ஃப்ரெண்ட்ஸ்.; மதுரைன்னாலே மீசை முறுக்குது – விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம்‘ நடிப்பில் Seven Screen Studio சார்பில் S லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’.

சயின்ஸ்பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர். கோலகலமாக ரசிக்ரகளின் ஆராவராத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது.

கோப்ரா

இவ்விழாவினில்…

நடிகை மீனாட்சி பேசியதாவது…

இப்படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப்படத்தின் புரமோசனை இன்று தான் துவங்கினோம். மதுரையில் உங்களுடன் அதை துவங்கியது மிகுந்த மகிழ்ச்சி.

ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. விக்ரம் சாருக்காக எல்லோரும் படம் பார்ப்பீர்கள் என நம்புகிறேன் எல்லோருக்கும் நன்றி.

நடிகை மிருணாளினி பேசியதாவது…

மதுரைக்கு வந்தது மிகுந்த சந்தோசம் அளிக்கிறது. நீங்கள் தரும் அன்பு பிரமிக்க வைக்கிறது. ‘கோப்ரா’ படத்தில் எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம்.

இந்தப்படம் நன்றாக வந்துள்ளது எல்லோரும் தியேட்டரில் போய் படம் பாருங்கள் நன்றி.

நடிகை ஶ்ரீனிதி ஷெட்டி பேசியதாவது…

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் எனது அறிமுகம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. ‘கோப்ரா’ படத்தை எல்லோரும் திரையரங்கில் பார்த்து ரசியுங்கள் நன்றி.

கோப்ரா

நடிகர் விக்ரம் பேசியதாவது…

மதுரை வந்தாலே மீசை தானாகவே முறுக்குகிறது உங்கள் அன்பு தான் காரணம். இங்கு நீங்கள் தரும் பிரமிப்பு தருகிறது. அஜய் ஞானமுத்து உங்கள் ஊர்க்காரர் அவர் இயக்கியுள்ள படம் அவரால் படவேலைகளால் வர முடியவில்லை.

‘கோப்ரா’ விக்ரமை பார்த்து சீறிய ரசிகர்கள்.. போலீஸ் தடியடி.; வைரலாகும் வீடியோ

இந்த கல்லூரியில் தான் என் தந்தை படித்தார். மதுரையில் தான் நான் ஹாலிடே கொண்டாடுவேன். என் நண்பர்கள் பாலா அமீர் எல்லாம் இங்கு தான் இருந்துள்ளார்கள். அமீர் மதுரையில் இருந்து ஸ்பெஷலாக உணவுகள் கொண்டு வருவார்.

இன்று மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன். கோப்ராவிற்கு வருவோம்.

கோப்ரா படம் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். எனக்கு படம் மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் பிடிக்கும். படத்தை எல்லோரும் தியேட்டரில் பாருங்கள் நன்றி.

கோப்ரா

இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

Cobra promotion in full swing Vikram Speech at Madurai

நடிகர் தனுஷை பெருமையாக உணர்ந்தேன்.; பாமக தலைவர் அன்புமணி் பாராட்டு

நடிகர் தனுஷை பெருமையாக உணர்ந்தேன்.; பாமக தலைவர் அன்புமணி் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அவெஞ்சர்ஸ்’ பட புகழ் ஜோ ருஸ்ஸோ, அந்தோனி ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கிய திரைப்படம் ‘தி கிரே மேன்‘.

கடந்த ஜூலையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இப்படத்தில் நம்ம தமிழ் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இவருடன் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

தனுஷின் நடிப்பை ரசிகர்களும் ரூஸ்ஸோ சகோதாரர்களும் பாராட்டி இருந்தனர்.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி இது குறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்…

மகனுக்காக ஒன்றிணைந்த தனுஷ் & ஐஸ்வர்யா ரஜினி.; இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

“நேற்று ‘தி க்ரேமேன்’ படம் பார்த்து மகிழ்ந்தேன். ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் நடித்ததை பற்றி பெருமையாக உணர்ந்தேன்.

அவரின் அனைத்து முயற்சிகளும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு பல விருதுகளை கொண்டு வரவேண்டும். எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார் அன்புமணி.

Anbumani Ramadoss appreciates Actor Dhanush

Enjoyed watching the movie #TheGrayMan yesterday. Felt proud about Actor @dhanushkraja, acting in a Hollywood movie. My best wishes to Actor Dhanush in all his future endeavours & to bring more laurels to TN & India. @Russo_Brothers

‘கோப்ரா’ விக்ரமை பார்த்து சீறிய ரசிகர்கள்.. போலீஸ் தடியடி.; வைரலாகும் வீடியோ

‘கோப்ரா’ விக்ரமை பார்த்து சீறிய ரசிகர்கள்.. போலீஸ் தடியடி.; வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் , ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘கோப்ரா’.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கியுள்ள பட குழு இன்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Vikram fans gathered to welcome Cobra team at Trichy

‘சினிமா பண்டி’ புகழ் விகாஸ் உடன் இணைந்து ஹீரோவானார் ஜானி மாஸ்டர்

‘சினிமா பண்டி’ புகழ் விகாஸ் உடன் இணைந்து ஹீரோவானார் ஜானி மாஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் அவர்களுடைய புதிய திரைப்படம் “யதா ராஜா ததா ப்ரஜா” இன்று பூஜையுடன் இனிதே ஆரம்பமானது

‘சினிமா பண்டி’ புகழ் விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார்.

Om Movie Creations & Sri Krishna Movie Creations பேனர்களின் கீழ் ஸ்ரீனிவாஸ் விட்டலா மற்றும் ஹரேஷ் படேல் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

ஹீரோ ஷர்வானந்த் கிளாப் அடிக்க, சல்மான் கானின் மருமகன் ஆயுஷ் ஷர்மா ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் கருணாகுமார் முதல் காட்சியை இயக்கினார்.

இந்த விழாவில் இயக்குநர் – தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் விட்டலா பேசுகையில்….

“கதை, திரைக்கதை, வசனம் எழுதுவது மட்டுமின்றி, ஹரேஷ் படேலுடன் இணைந்து இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன். கதையை முடித்த பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தைத் தேடும் முயற்சியில் இருந்தோம், அந்த நேரத்தில் ஜானி மாஸ்டருடன் பழகினேன்.

மாஸ்டர் அவருக்கென ஸ்கிரிப்ட்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். 20 நிமிடங்களில் நான் சொன்ன கதையின் மையப் புள்ளி மிகவும் பிடித்து போக, எங்கள் ஸ்கிரிப்டை அவர் ஓகே செய்தார். முன்பு அரசியல் செய்திகள் எந்தச் சேனலிலும் 10 நிமிடங்களுக்கு மேல் இருந்தது இல்லை, ஆனால் இப்போது அவை 24/7 இடம்பெறுகின்றன.

அனைவரும் அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்கள். எங்கள் படம் வணிக பொழுதுபோக்கு & சமூக செய்திகள் நிறைந்த அரசியல் டிராமாவாக இருக்கும்.

இப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் 15ல் துவங்கி மூன்று கட்ட படப்பிடிப்பில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெறவுள்ளன.

ஜானி மாஸ்டர் கூறுகையில்…

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளில் எங்கள் படத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஸ்ரீனிவாஸ் விட்டலா சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடனம் மற்றும் விளம்பரங்களுக்கு மேலாக எனது அடையாளத்தை வளர்க்க, இதுபோன்ற ஒரு நல்ல கதையுடன் அடுத்த கட்டத்திற்கு வர முடிவு செய்துள்ளேன்.

நான் ‘சினிமா பண்டி’யைப் பார்த்தேன், அதில் விகாஸின் நடிப்புப் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தின் தலைப்பு ‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்பது எழுத்தாளர் நரேஷ் காரின் யோசனை, இந்த நல்ல தலைப்பை வழங்கிய அவருக்கு நன்றி. நாங்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தைக் கொண்டு வருகிறோம்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை ஆசிர்வதித்த ஹீரோ ஷர்வானந்த், ஆயுஷ் ஷர்மா ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றி. நேற்று ஆயுஷ் ஜியுடன் ஒரு பாடலை இப்படத்துக்காக முடித்துள்ளேன்.

சினிமா பண்டி புகழ் விகாஸ் கூறுகையில்…

ஜானி மாஸ்டருடன் இணைந்து பணிபுரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது போதுமான கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய நல்ல அரசியல் டிராமாவாக இருக்கும். இது நகைச்சுவை, நையாண்டிகள், சமூக செய்திகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒரு முழு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என்றார்.

நடன இயக்குனர் கணேஷ் மாஸ்டர் பேசுகையில்…

“யதா ராஜா ததா ப்ரஜா” படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். படம் பிளாக்பஸ்டராக மாற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த சிறந்த வாய்ப்பை எங்கள் அண்ணன் ஜானிக்கு வழங்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தின் இசை பாடல்கள் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமையும்.

இசையமைப்பாளர் ரதன் கூறுகையில்…

“பாடல்களை ஒரு நல்ல டான்ஸ் மாஸ்டர் சிறந்த அனுபவமாக மாற்றிவிடுவார். ஆச்சர்யமாக எங்கள் படத்தில் ஜானி மாஸ்டர் நாயகனாக நடிக்கிறார். எனது குழுவினர் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்து வருகின்றனர், ஆல்பம் மிகச் சிறப்பாக, வந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் மனோஜ் வேலாயுதன் கூறுகையில்…

நான் கேரளாவைச் சேர்ந்தவன். சில மாதங்களுக்கு முன்பு ஜானி மாஸ்டரை சந்தித்தேன். இந்தப் படத்தைப் பற்றி அவர் என்னிடம் கூறினார். நான் ஹைதராபாத் வந்தவுடன், ஸ்ரீனிவாஸ் விட்டலா காரு எனக்கு முழுக் கதையையும் விவரித்தார், மிகவும் பிடித்திருந்தது. ஒரு குழுவாக சிறப்பான படைப்பை தருவோம் என நம்புகிறேன்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்:

பேனர்: Om Movie Creations & Sri Krishna Movie Creations
தயாரிப்பாளர்கள்: ஸ்ரீனிவாஸ் விட்டலா, ஹரேஷ் படேல்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீனிவாஸ் விட்டலா
ஒளிப்பதிவாளர்: மனோஜ் வேலாயுதன்
இசையமைப்பாளர்: ரதன்
கலை இயக்குனர்: பாபா
போஸ்டர் வடிவமைப்பாளர்: தானி ஏலே
நிர்வாக மேலாளர்: S.ரங்க பாபு
மக்கள் தொடர்பு: புலகம் சின்னராயா

Jani Master

Johnny Master turns hero along with Vikas

LIVE FROM TRICHY : விக்ரம் – ஸ்ரீநிதி பங்கேற்ற ‘கோப்ரா’ புரோமோசன் ஹைலைட்ஸ்

LIVE FROM TRICHY : விக்ரம் – ஸ்ரீநிதி பங்கேற்ற ‘கோப்ரா’ புரோமோசன் ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் , ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘கோப்ரா‘.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கியுள்ள பட குழு இன்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு படக்குழுவினர் பதில் அளித்தனர்.

நடிகை மீனாட்சி பேசும்போது…

விக்ரம் 60 படங்களை கடந்து விட்ட போதும் ஒவ்வொரு படத்தையும் தன்னுடைய முதல் படமாக நினைத்து முழு உழைப்பையும் கொடுத்து வருகிறார். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்” என்றார்.

நடிகை மிர்ணாளினி பேசும் போது…

விக்ரம் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் ‘சாமி’. அவரை முதல்முறையில் கோப்ரா செட்டில் பார்த்தபோது எனக்கு பேச்சே வரவில்லை் இது கனவா நினைவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது விக்ரம் வந்து தான் என்னிடம் பேசினார்.

நடிகை ஸ்ரீநிதி பேசும் போது…

‘கோப்ரா’ படத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும். இது வித்தியாசமான விருந்தாக இருக்கும்” என்றார்.

அதன் பின்னர் விக்ரம் பேசும் போது…

“திருச்சிக்கு பலமுறை வந்துள்ளேன். இளமை பருவத்தில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொள்ள இங்கு பலமுறை வந்துள்ளேன்.

‘மகான்’ தந்த வருத்தம்.; மீண்டும் கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்

சாமி படத்தின் ஷூட்டிங் இங்குதான் நடைபெற்றது் அது என்னால் மறக்க முடியாது.

‘இமைக்கா நொடிகள்’ , ‘டிமான்டி காலனி’ ஆகிய வித்தியாசமான படங்களை தந்தவர் அஜய் ஞானமுத்து. அவர் இயக்கிய ‘கோப்ரா’ படம் மிகவும் வித்தியாசமான படம் என்று சொல்ல முடியாது.

ஆனால் நிச்சயமாக ஒரு பிரஷ்ஷாக ரசிகர்களுக்கு இருக்கும்.

எந்திரன் ரோபோ படங்களைப் போல சயின்ஸ் பிஃக்ஷன் கலந்து இருக்கும்.

அதுபோல சென்டிமென்ட் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த ஒரு படைப்பாக இருக்கும்” என்று பேசினார் விக்ரம்.

கோப்ரா

Cobra team at Trichy for movie promotion

More Articles
Follows