விக்ரமன் பட பாணியில் கனா படத்தில் சூப்பர் மெசேஜ்.; இளவரசு பாராட்டு

Kanaa movie has social message like Vikraman movie says actor Ilavarasuசிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தின் வெற்றி விழாவில் நடிகர் இளவரசு பேசியதாவது…

படத்தின் ஆரம்பத்தில் இருந்து எல்லா கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையானவை மட்டுமே.

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது. இந்த படத்தில் நான் நடித்த காட்சிகளும், என் கதாப்பாத்திரமும் திரைப்படத்தில் வருமா என யோசித்தேன்.

ஆனால், நிறைய பேர் மனதில் போய் சேர்ந்தேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையரங்கில் என் மகளுடன் படத்தை பார்க்கும்போது இந்த படத்தின் எமோஷனை உணர முடிந்தது.

விக்ரமன் சார் புது வசந்தம் படத்தில் ஒரு புதுமையான விஷயத்தை செய்திருந்தார்.

நான்கு ஆண் நண்பர்களுடன் ஒரு பெண் தங்கியிருப்பார். அவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு மட்டுமே இருக்கும்.

அதே மாதிரி இந்த படத்திலும் இன்றைய சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு பெண் கிரிக்கெட் விளையாட போகும்போது ஆண்கள் அவளை அழைத்து விளையாட அனுமதியளித்து பயிற்சி கொடுப்பார்கள். இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்து இது” என்றார் நடிகர் இளவரசு.

Kanaa movie has social message like Vikraman movie says actor Ilavarasu

Overall Rating : Not available

Related News

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தின்…
...Read More
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ்…
...Read More
அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தின்…
...Read More

Latest Post