தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேலைக்காரன் படத்தை தொடர்ந்து பொன்ராம் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவற்றில் சில இதோ உங்களுக்காக…
- விகடன் விருது விழாவில் ரஜினி சாருக்கு அருகில் நின்றேன். தயக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என் வாழ்வில் மறக்கமுடியாத நாள் அது.
- விவேகம் படத்தில் அஜித் லுக் டிரெப்பிக். நிறைய ஆச்சரியங்கள் படத்தில் இருப்பதாக கேள்விபட்டேன். அந்த படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க நினைத்திருக்கிறேன்.
- நான் டிவியில் பண்புரிந்த போதே என்னை உற்சாகப்படுத்தியவர் விக்ரம். நான் சினிமாவில் ஹீரோவாக வருவேன் என அப்போதே அவர் நம்பினார்.
- விஜய் இந்திய சினிமாவில் சிறந்த எண்டர்டெயினர்
- சிம்பு திறமையானவர்
- தனுஷ் ஒரு சிறந்த நடிகர்
- ஹன்சிகா சிறந்த தோழி
- சதீஷ் கூட இருந்தா சிரிக்காமல் இருக்க முடியாது. அவருக்கு நகைக்சுவை உணர்வு அதிகம்.
- அருண்ராஜா காமராஜ் என் நெருங்கிய நண்பர். அவர் விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
- என் வெற்றிக்கு காரணம் அம்மா மற்றும் என் மனைவியின் அன்பே காரணம்.
- அப்பா இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அவரையும் அவரது அன்பையும் இழந்து நிற்கிறேன்.
- என்னுடன் படித்த நண்பர்களே என் பலம். இன்றும் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.
என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Sivakarthikeyan talks about Rajini Vijay Ajith Dhanush Simbu