உலகமெங்கும் 600 விருதுகளை வென்ற ‘சிதை’ குறும்படம் சினிமாவானது.; ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட பார்த்திபன் & ஆரி

உலகமெங்கும் 600 விருதுகளை வென்ற ‘சிதை’ குறும்படம் சினிமாவானது.; ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட பார்த்திபன் & ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகமெங்கும் 600 விருதுகளை வென்ற ‘சிதை’ குறும்படம் சினிமாவானது.; ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட பார்த்திபன் & ஆரி

‘சிதை’ படம் குறித்து இயக்குனர் கார்த்திக் ராம் கூறியதாவது…

600 விருதை வென்ற SITHAI குறும்படத்தை திரைப்படமாக்கியுள்ளோம்.
திரைப்படத்தின் முதல் தள போஸ்டரை வித்தியாசமாக சிந்தித்து மக்களை சிந்திக்க வைக்கிற இயக்குநர் பார்த்திபன் சாரும் சமுதாயத்துக்காக குரல் கொடுக்கும் நடிகர் ஆரி அர்ஜூனன் அங்கி நிறுவனர் தன்ராஜ் மற்றும் செல்ஃபி க்ரியேஷன்ஸ் சி. கணேஷ்குமார் இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த சிதை திரைப்படத்தின் முதல் தள போஸ்டரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

விரைவில் இத்திரைப்படம் வெள்ளித்திரையில் காண்போம்.

Cast
Naren balaji ( hero)
Aishwarya (heroine)
Kishore (2nd hero)
Mythily (2nd heroine)
Raja
Sakthi
Biju (villan)
Vallarasu

Dop – Naresh kumaraswamy
Editor – C.Ganesh Kumar
Music- Kevin
Still- Ganesh
Stunt- jesudas
Lyrics- Madhankumar
Costume- Kezia-Radhika prabakaran
Publicity design- Siva ramesh
Choreography – Hajith- Gowri
Makeup- Hajith
Title design – Phoenix studios
Song Mixing & Master- Ramji Soma
Sound design – Shanmugam
Di – Tharun Media
Final mixing- Vishnu
Ex producer – Kishore
Pro – Sundar bala
Production executive – Ravi
Produced by dhanraj

Sithai movie first look launched by Parthiban and Aari

ஜீவி நடித்த ‘பகலறியான்’ திரில்லர் லிஸ்டில் இடம்பெறும் என படக்குழு நம்பிக்கை

ஜீவி நடித்த ‘பகலறியான்’ திரில்லர் லிஸ்டில் இடம்பெறும் என படக்குழு நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவி நடித்த ‘பகலறியான்’ திரில்லர் லிஸ்டில் இடம்பெறும் என படக்குழு நம்பிக்கை

*பகலறியான் திரைப்படத்தின் டீசர்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டார். படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் த்ரில்லர் திரைப்படமான பகலறியானின் டீசர் வெளியானது. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தின் டீசர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முருகனின் இயக்கத்தில், லதா முருகனின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் பகலறியான், தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள வெற்றி, இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதாலும், படத்தில் பல சஸ்பன்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்பதாலும் பரவலான ரசிகர்களின் கவனத்தை இத்திரைப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக் சரோவின் இசையில், அபிலாஷ் PMYன் ஒளிப்பதிவில் வெளிவர இருக்கும் பகலறியான் தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கான மூலக்கதை கிஷோர்குமார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோபி கருணாநிதி கலை
வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

Pagalariyaan teaser launched by Vijaysethupathy

Vetri’s #Pagalariyaan Teaser out!

youtu.be/1vBeVgII9Qo

Get ready to be thrilled #Pagalariyaan explosive teaser

@act_vetri #akshaya
@actor_saideena #Murugan
@abilashpmy_ #VivekSaro
@pro_thiru
#RishikeshEntertainment
#PagalariyaanTeaser

மணிவர்மன் வாழ்க்கையை மாற்றிய ‘ஒரு நொடி’.; கார் பரிசளித்த தயாரிப்பாளர்கள்

மணிவர்மன் வாழ்க்கையை மாற்றிய ‘ஒரு நொடி’.; கார் பரிசளித்த தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிவர்மன் வாழ்க்கையை மாற்றிய ‘ஒரு நொடி’.; கார் பரிசளித்த தயாரிப்பாளர்கள்

*இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த ஒரு நொடி தயாரிப்பாளர்கள்*

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிப்பில், தமன்குமார் எம் எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி நடிப்பில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் வெளியிட்ட திரைப்படம் “ஒரு நொடி”.

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடித்த ‘ஒரு நொடி’ படம் சமீபத்தில் வெளியாகி விமர்சகளிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் மணிவர்மனுக்கு தயாரிப்பாளர்கள் மதுரை அழகர் மூவிஸ் அழகர், மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் கே.ஜி.ரத்திஷ் ஆகிய மூன்று பேரும் கார் பரிசளித்து அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர். தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களும் இயக்குனரை வாழ்த்தினார்.

Oru nodi producer gifted car to director manivarman

இன்டர்நெட் இல்லாத காலத்தில் வாழ்க்கை நிதானம்தான் ‘குரங்கு பெடல்’.; குஷியில் படக்குழு

இன்டர்நெட் இல்லாத காலத்தில் வாழ்க்கை நிதானம்தான் ‘குரங்கு பெடல்’.; குஷியில் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்டர்நெட் இல்லாத காலத்தில் வாழ்க்கை நிதானம்தான் ‘குரங்கு பெடல்’.; குஷியில் படக்குழு

மீசை முளைக்கும் முன்னே பெரியவனாகி விட்டோம் என சொல்வது சைக்கிளே..; ‘குரங்கு பெடல்’ குறித்து ஜிப்ரான்

*நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’. இது ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

படத்தின் எழுத்தாளர் ராசி அழகப்பன், “இந்தப் படத்தின் கதை ஆறு வயதில் எனக்கும் என் அப்பாவுக்கும் நடந்த ஒன்று. அதை படமாக்கிய இயக்குநர் கமலக்கண்ணனுக்கு நன்றி.

சைக்கிள் கிராமத்தின் அடிப்படை வாகனம். கிராமங்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் இதைப் பார்க்கலாம். எல்லோருமே சைக்கிள் ஓட்டியிருப்பீர்கள். அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்தப் படம் இருக்கும். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை” என்றார்.

வசனகர்த்தா பிரபாகரன், “சரியான நேரத்தில் சரியான நபர் இந்தப் படத்தை வெளியிடுகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். ‘அந்த காலத்துல…’ என கதை ஆரம்பிப்பவர்களை தேடிப்பிடித்தோம். ஏனெனில், அவர்களிடம் சொல்வதற்கு நிறைய கதைகளும் நினைவுகளும் இருக்கும்.

இந்தப் படத்தில் வேலை பார்த்தவர்களும் இது அவர்களுடைய படம் என்று நினைத்துதான் வேலை பார்த்தனர். நீங்களும் படம் பார்த்து ஆதரவு கொடுங்கள்”.

ஒளிப்பதிவாளர் சுனில் பாஸ்கரன், “படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் ப்ரோ, ‘உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். படத்தை பிரசண்ட் செய்ய சொன்னோம். அதை சரியாக செய்து கொடுத்தார். அவருக்கு நன்றி”.

இயக்குநர், பாடலாசிரியர் பிரம்மா..

“சமீபகாலங்களில் குழந்தைகளுக்கான படங்கள் எதுவும் வருவதில்லை. எல்லாம் வன்முறை படங்கள் தான். பல வருடங்கள் கழித்து குழந்தைகளுக்கான படமாக ‘குரங்கு பெடல்’ வந்துள்ளது. பெரிய நம்பிக்கையை இந்தப் படம் கொடுக்கும். எனக்குப் பிடித்த இந்தப் படம் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

எடிட்டர் சிவநந்தீஸ்வரன்..

“குழந்தைகளுக்கான படம் இல்லை என்பது உண்மைதான். இப்போது வரும் படங்கள் நம்முடைய குழந்தைகளை நெருக்குதலுக்கு ஆளாக்குகின்றன. நம்முடைய பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் அமைதியாக அமர்ந்து இந்தப் படம் பார்க்கலாம்.

டிஜிட்டல் உலகம் குழந்தைகளை எப்படி மாற்றுகிறது என்பது பயமாக இருக்கிறது. அதனால் குழந்தைகள் என்ன பார்க்க வேண்டும், என்ன கேட்க வேண்டும் என்பதை பெற்றோராக தீர்மானிக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. அதற்கான சிறு முயற்சி தான் இந்த படம். அதற்கான பிளாட்ஃபார்ம் அமைத்துக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி”.

நடிகர் ஜென்சன் திவாகர், “படத்தைப் போலவே படப்பிடிப்பும் ரிலாக்ஸாக இருந்தது. இயக்குநர் கமல் அண்ணா ரொம்ப பொறுமையாக எங்களை ஹேண்டில் செய்தார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

தயாரிப்பாளர் சவிதா, ” இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து படத்தை வெளியிட்டு கொடுக்கும் சிவகார்த்திகேயன் சார் வரைக்கும் அனைவருக்கும் நன்றி. ‘குரங்கு பெடல்’ கதை கேட்டதும் உடனே நான் கனெக்ட் ஆகிவிட்டேன். சைக்கிள் நம்முடைய முன்னேற்றத்தில் முக்கியமானது. குறிப்பாக, பெண்களுக்கு பல சுதந்திரம் கொடுத்தது”.

தயாரிப்பாளர் சஞ்சய், “எங்கள் எஸ்.ஆர்.ஜே. புரொடக்‌ஷன்ஸின் முதல் படம். படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி!”.

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலை, ” இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. இண்டர்நெட், மொபைல் இல்லாத காலக்கட்டத்தில் வாழ்க்கை எப்படி நிதானமாக இருந்தது என்பதை இதில் பார்க்கலாம்.

இந்தப் படத்தின் முக்கிய ஸ்ட்ரென்த் இயக்குநர் கமலக்கண்ணன், தயாரிப்பாளர் சவிதா. நிச்சயம் பலருக்கும் நினைவுகளைத் தூண்டி விடும்”.

நடிகர் காளி வெங்கட், “இந்தப் படம் எனக்கு மிக முக்கியமானது. என் வாழ்க்கையின் பல முக்கிய தருணங்களை இந்தப் படம் நினைவுப்படுத்தி இருக்கிறது. ‘குரங்கு பாடல்’ கோவா ஃபிலிம் பெஸ்டிவல் ஒன்றில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றது. எங்க அப்பா எனக்கு சைக்கிள் ரெடி பண்ணி கொடுத்த நியாபகங்கள் எல்லாம் எனக்கு இந்தப் படத்தில் வந்தது. உங்களுக்கும் பிடிக்கும்”.

இசையமைப்பாளர் ஜிப்ரான், ” இந்தப் படம் பார்த்ததும் எனக்கு கனெக்ட் ஆகிவிட்டது. நமக்கு மீசை முளைப்பதற்கு முன்னால், நாம் பெரிய பையனாகி விட்டோம் எனச் சொல்வது சைக்கிள்தான். ‘வாகை சூடவா’ படத்திற்குப் பிறகு கிராம சூழலில் இசை செய்ய இந்தப் படம் வாய்ப்புக் கொடுத்தது. படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.

இயக்குநர் கமலக்கண்ணன், “இந்தப் படம் மக்களிடம் போய் சேரக் காரணமாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை அவர்களுடைய சொந்த படமாக நினைத்து உருவாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. சென்சிபிளான படம் எடுத்துள்ளோம். பார்த்துவிட்டு செல்லுங்கள்”.

Kurangu Pedal movie got huge response from Press Show

ராதிகா வாடி போடி பிரண்ட்.; சினிமாவில் PROOF பண்ணிட்டே இருக்கனும்.. – மிஷ்கின்

ராதிகா வாடி போடி பிரண்ட்.; சினிமாவில் PROOF பண்ணிட்டே இருக்கனும்.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

தயாரிப்பாளர் கோமதி பேசியதாவது…
இந்த விழாவிற்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் நன்றிகள். இது என் முதல் படம். எனக்கு மட்டுமல்ல, ஹீரோ, மியூசிக் டைரக்டர் என எல்லோருக்கும் இது முதல் படம். அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.

நடிகர், இயக்குநர் யூகி சேது பேசியதாவது…
நான் ஒரு படம் செய்துள்ளேன் அப்படத்தின் எல்லா பாடலுக்கும் ராதிகா தான் டான்ஸ் மாஸ்டர். இந்தப்படத்திற்குச் சரியான தலைப்பு பிடித்திருக்கிறார்கள். எல்லா மொழிக்கும் பொருந்துகிற மாதிரியான தலைப்பு. ராதிகா மாஸ்டரிடம் ஒரு மறைமுக திறமை இருக்கிறது. எந்த நடிகரும் அவரை வணங்கித் தான் ஷாட்டுக்கு போகிறார்கள், இயக்குநருக்குக் கூட அந்த மரியாதை இல்லை. ஒரு தலைமைப்பண்பு இயல்பிலேயே அவருக்கு வந்துவிடுகிறது. அதிலும் இப்படத்தில் அவர் மகன் தீபக்கை இசை அமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். 2024 சினிமாவுக்கு மிகக் கடினமான காலம். போட்டிகள் மிகப் பெரிதாக உள்ளது. உலகளவில் எடுக்கப்படும் சினிமாக்களில் 10 சதவீதம் தான் வெற்றி பெறுகிறது. உலகத்தில் படமெடுக்க மிகவும் கடினமான நாடு இந்தியா அதிலும் தமிழ்நாடு இன்னும் கடினமானதாக இருக்கிறது. இன்டர்வெல் விடும் பழக்கம் உலகிலேயே இங்கு மட்டும் தான் இருக்கிறது. ராதிகா அதையெல்லாம் எதிர்கொண்டு சாதித்துள்ளார். சிறிய படங்கள் சின்ன நட்டம், பெரிய படங்கள் ஏதாவது ஒன்று செய்து சமாளித்து விடுவார்கள், ஆனால் மிடில்கிளாஸ் மாதிரி மீடியம் பட்ஜெட் படங்கள் மாட்டிக்கொள்கிறது. அதைத்தாண்டி படமெடுத்துள்ளார் ராதிகா. டான்ஸ் மாஸ்டர் சாந்தி, ராதிகா இருவரையும் 25 வருடங்களாக தெரியும். மிகத்திறமையானவர்கள் இவர்கள் கண்டிப்பாக இன்னும் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளர் கோமதி, என் அம்மா பெயர் அவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
வாழ்த்த வந்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். இது என் குடும்பத்துப் படம். ராதிகா என் உயிர் நண்பனின் மகள். அவரை குழந்தையாகப் பார்த்திருக்கிறேன். இவர் வளர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களை ஆட வைப்பார் என நினைக்கவில்லை. மிகப்பெரிய உழைப்பாளி. அந்த திறமையில் தான் எழுத்து இயக்கத்தையும் செய்துள்ளார். டிரெய்லர் பார்த்தேன், எந்த குறையும் இல்லாமல் மிக நன்றாக உள்ளது. வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. தன்ஷிகா நன்றாக நடித்துள்ளார். படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். இன்று சினிமா இருக்கும் நிலையில், ஒரு படத்தை வெளியீடு வரை இவர்கள் கொண்டு வந்ததே மிகப்பெரிய சாதனை. இந்தப்படம் வெற்றி பெற்றால், இன்னும் பல சிறு முதலீட்டுப் படங்கள் வரும். அதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இசையமைப்பாளர் தீபக் பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
படத்தில் எல்லாமே மிக நன்றாக உள்ளது. ஒரு கிளாஸ் இயக்குநர் உருவாக்கியது போல மிக நன்றாக வந்துள்ளது. ராதிகா மிகவும் சிம்பிள், நல்ல திறமைசாலி. இப்ப சினிமா டிரெண்ட் மாறியிருக்கு. இயக்குநர்கள் நடிக்கிறார்கள், டான்ஸ் மாஸ்டர், நடிகர்கள் இயக்குகிறார்கள், ஆனால் எல்லோரையும் வரவேற்பது தான் சினிமா. மேக்கிங் ஸ்டைல் தெரியாமலே இப்போது படம் எடுக்கிறார்கள் அது சில நேரம் ஹிட் ஆவதால் அதை சரி என நான் சொல்ல முடியாது. எந்த இடத்தில் எந்த ஷாட் வைக்க வேணும் எங்கு இண்டர்வெல் விட வேண்டும் என்பதை உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது போதைப்பொருள் தான் டிரெண்ட். அதை வைத்து நாம் சம்பாதிக்கிறோம். பெரிய ஹிரோக்கள் இப்போது கதையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை காம்பினேசன் சரியாக அமைந்தால் போதும் என நினைக்கிறார்கள். சிவாஜி சார் காலத்தில் இப்படியா இருந்தது ?. எல்லா புராணங்களையும் அவர் வழியில் தான் பார்த்திருக்கிறோம் அது தான் டிரெண்ட். ராதிகா உன்னை எல்லாரும் குழப்புவார்கள். அதைப் பற்றி நினைக்காதீர்கள் இன்றைய காலத்திற்குத் தேவையான கதையை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ருத்விக் மிகக் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருக்கிறார் அவரை நான் ஹீரோவாக்க நினைத்தேன் அதற்குள் ஹீரோவாகி விட்டார். வாழ்த்துக்கள். தன்ஷிகா நடிப்பு பிரமாதமாக உள்ளது. நல்ல ஆக்சன், கிளாமர் என எல்லாம் அவருக்குச் சிறப்பாக வருகிறது. ராதிகா மிகவும் திறமையாகப் படத்தை மேக்கிங் செய்துள்ளார். தயாரிப்பாளர் கோமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், தம்பி தீபக் பெரிய இசையமைப்பாளராக வாழ்த்துக்கள். அவர் அப்பா என் படங்களுக்கு வயலின் வாசித்துள்ளார். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…
இத்திரைப்படத்தில் என் பெண்ணுக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய, ராதிகா மாஸ்டருக்கு நன்றி. ராதிகா மாஸ்டரின் திறமைக்கு இனி ஃபுரூஃபாக இந்தப்படம் இருக்கும், வாழ்த்துக்கள். பெண்களை ஆண்கள் தடுக்கிறார்கள் எனச் சொன்னார்கள், பெண்களுக்கு வாய்ப்பு தந்து அழகு பார்ப்பது ஆண்கள் தான் என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..
இந்த மேடையை மிக உணர்வுப்பூர்வமான மேடையாகப் பார்க்கிறேன். பேசுபவர்கள் அனைவரும் முழு மனதோடு வாழ்த்திப் பேசுகிறார்கள் அதற்குக் காரணம் ராதிகா மாஸ்டர் தான். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அன்பை மட்டுமே பரப்பியிருக்கிறார். அந்த அன்பு தான் இங்கு பிரதிபலிக்கிறது. பெண்களின் ஆசை நிறைவேறத் துணையாய் நிற்பது தான் சிறந்த ஆணின் பண்பு ஆகும். அது போல் தான் ராதிகா மாஸ்டரின் கணவர் இருக்கிறார். ராதிகா மாண்டரின் போராட்டம் எனக்குத் தெரியும் அவரின் விடாமுயற்சி தான் அவரை இன்று இயக்குநராக்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு எனும் களத்தில் இந்தப்படம் அமைந்துள்ளது. ராதிகா மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் மைம் கோபி பேசியதாவது…
ராதிகாவை நான் என் தங்கையாக மட்டுமே பார்க்கிறேன். நிறையப்படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன் அவ்வளவு அன்பாக பழகுவார். என்னையும் ஆட வைத்துள்ளார் எனக்கே பிடிக்கவில்லை ஆனாலும் ஆட வைத்துள்ளார். எனக்குக் கதை தெரியாது எதுவுமே தெரியாது அவருக்காக மட்டுமே, அவர் சொன்னதை அப்படியே செய்தேன். அவர் இன்னும் எத்தனை படம் எடுத்தாலும் நடிப்பேன். ராதிகா வெற்றி பெற வாழ்த்துக்கள். தம்பி தீபக்கிற்கு என் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…
ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ராதிகா மாஸ்டரின் முதல் பைலட்டில் நான் தான் நடித்தேன். அப்போதிலிருந்து அவரைத் தெரியும். நிறையப் போராடி இப்படத்தைக் கொண்டு வந்துள்ளார். இங்குள்ள அனைவருடனும் நான் ஒரு வகையில் வேலை பார்த்துள்ளேன். மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது படத்தில் வேலை பார்த்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம். மிக பெருமையாக இருக்கிறது. கோமதி மேடத்திற்கு நன்றி. சினிமா இன்ட்ஸ்ட்ரி முதலில் வேறு மாதிரி இருந்தது. எல்லா மொழி படங்களும் இங்கு தான் தயாரானது. இப்போது அந்தந்த மொழி படங்கள் அங்கேயே தயாராகிறது, அதனால் இங்குள்ளவர்களுக்கு வேலை இல்லை. கோமதி மேடம் இன்னும் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். கணவர்கள் நினைத்தால் மட்டுமே ஒரு பெண் சாதிக்க முடியும். தங்கள் மனைவிகளின் கனவிற்குத் துணையாக இருக்கும் கணவர்களுக்கு நன்றி. தீபக் அவனைச் சிறு குழந்தையாகப் பார்த்துள்ளேன், கீபோர்ட் வைத்து விளையாடிக்கொண்டிருப்பான், இப்போது இசையமைப்பாளர், என் பிள்ளையாகத் தான் அவனை நினைக்கிறேன் பெருமையாக உள்ளது. ராதிகா அவள் எனக்கு தங்கை, தோழி, போட்டியாளர் எல்லாம் தான். நாங்கள் இணை பிரியா தோழிகள் அத்தனை அன்பானவள். அவளுக்காகத் தான் அனைவரும் வந்துள்ளார்கள். இப்படம் 100 நாள் ஓடி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவர் இன்னும் பெரிய வெற்றியைக் குவிக்க வாழ்த்துக்கள்.

நடிகை இந்திரஜா சங்கர் பேசியதாவது…
எல்லா பெரியவர்களுக்கும் என் நன்றிகள். ராதிகா மாஸ்டருக்கு என் நன்றிகள். கல்யாணத்திற்குப் பிறகு நான் பங்கு பெறும் முதல் நிகழ்ச்சி இது. ராதிகா மாஸ்டரின் முதல் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. தன்ஷிகா மேடத்திற்கு நன்றி, என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். படக்குழு அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை சாய் தன்ஷிகா பேசியதாவது…
இந்த மேடை மிக முக்கியமான மேடை. ராதிகா மாஸ்டர் அதற்கு மிக முக்கிய காரணம். எத்தனையோ மேடைகளில் பிரபலங்கள் பேசிவிட்டு உடனே கிளம்புவதைப் பார்த்துள்ளேன், இந்த மேடையில் அனைவரும் மனதார வாழ்த்திவிட்டுக் காத்திருக்கிறார்கள். ராதிகா மாஸ்டரின் மீதான அன்பு தான் காரணம். இந்தப்படம் அவரது ஃபிரண்ட்ஷிப்பிற்காக மட்டுமே செய்த படம். ராதிகா எங்கு பார்த்தாலும் என்னைப்பற்றிப் பேசுவார். ஊக்கம் தந்து கொண்டே இருப்பார். அவர் மனதிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். பெண்கள் முன்னேறத் தடையாக இருப்பது ஆண்கள் என சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் எனக்கு என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் உள்ளார். இனிமே சினிமா வாய்ப்பு வருமா என நினைத்த காலத்தில் வந்த வாய்ப்பு தான் இந்தப்படம். ராதிகா மாஸ்டர் எப்போதும் எனக்கு டார்லிங் தான். அவர் இயக்குநர் ஆவார் என்றே நினைக்கவில்லை. அவர் கதை சொன்ன போதே ரொம்ப பிடித்தது. அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். தீபக் ஐந்து வருடம் முன் சின்னப்பையானாக இருந்தார் இப்போது என் படத்திற்கே இசையமைக்கிறார். பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறது இந்தப்படம். ராதிகா மாஸ்டரின் உழைப்பிற்கு இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றிகள். எல்லோருக்கும் நன்றிகள்.

நாயகன் ருத்விக் பேசியதாவது…
சின்ன வயதிலிருந்து நடிகனாக வேண்டும் என்பது தான் ஆசை. தியேட்டருக்கு வரும் மக்கள் 2 மணி நேரம் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் அது தான் சினிமா மேஜிக். கிரியேட்டருக்கான மரியாதை அது தான். ராதிகா மேடம் இது தான் கதை, இது தான் பாத்திரம், நீ தியேட்டர் ஆர்டிஸ்ட் தானே, உனக்கு வருவதைச் செய் என்று ஊக்கம் தந்தார். மைம் கோபி சார், தன்ஷிகா மேடம் நடிப்பைப் பிரமித்துப் பார்த்தேன். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். ராதிகா மேடம் என்னை ஒரு மகன் போலவே பார்த்துக் கொண்டார்கள். அவர் தந்த ஊக்கம் தான் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…
ராதிகாவை நான் வாடி போடி என்றுதான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும் அவளும் சினிமாவில் அஸிஸ்டெண்டாக இருந்த காலத்தில் இருந்து தெரியும். நான் படம் செய்ய ஆரம்பித்த போது, அவளைத்தான் முதலில் கூப்பிட்டேன் ஆனால் வர மாட்டேன் என்றாள், முதல் மூணு படத்திற்கும் கூப்பிட்டேன் வரவில்லை ஆனால் அவளே ஒரு நாள் கூப்பிட்டு நான் ரெடி சார் எனச் சொன்னாள். அவளுக்கு நம்பிக்கை வந்த பிறகு என்னிடம் வந்து மாஸ்டராக பணியாற்றினாள். சினிமாவில் பல காலம் ஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக இருப்பார்கள், நான் 300 பேருக்கு மேல் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆனால் என் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக ராதிகா தான் போன் செய்வாள். அத்தனை சிறந்த நட்பு, அவள் படமெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது நம்பவில்லை, படத்தில் ஜெயிச்சிட்டியா என கேட்கும்போது, முயற்சிக்கொண்டிருப்பேன் என வசனம் வருகிறது. அது தான் முக்கியம் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் அது தான் சினிமா. அதே மாதிரி நீயும் சினிமாவில் இரு. நான் சினிமா பற்றி கருத்து சொல்ல மாட்டேன். படமெடுத்து விட்டாய் இனி பத்திரிக்கையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள் அதை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தீபக் இசையமைப்பாளர் சின்ன பையன், பாடல் சூப்பர் என்று சொல்ல மாட்டேன் நன்றாக வந்துள்ளது வாழ்த்துகள். சாய் தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவரை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், வருங்காலத்தில் அவருக்காகக் கதை எழுதுவேன். சினிமா என்பது என்னைப்பொறுத்தவரை கடவுள் மாதிரி அதை நாம் வணங்குவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இசையமைப்பாளர் தீபக் பேசியதாவது…
இது எனக்கு முதல் வாய்ப்பு, தயாரிப்பாளர் கோமதி மேடத்திற்கு நன்றி. மிஷ்கின் சார் உங்கள் அறிவுரையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவேன். தன்ஷிகா மேடத்திற்கு நன்றி. இப்படத்தில் என் உடன் பணிபுரிந்த குழுவினருக்கு நன்றி. இசை சொல்லித் தந்த என் அப்பாவிற்கு நன்றி.

இயக்குநர் ராதிகா பேசியதாவது…
என்னை இன்று வரை தோழியாக மதித்து, எனக்கு வாய்ப்பளித்த மிஷ்கின் சாருக்கு என் நன்றிகள். நான் இங்கு நிற்கக் காரணம் அவர் தான். எனக்கே என் திறமையைச் சுட்டிக்காட்டியவர் அவர் தான். அவருக்கு நன்றி. ராஜன் அப்பா என் அப்பாவின் தோழர் இன்று வரை என்னை மகளாகத்தான் பார்த்துக் கொள்கிறார். இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற ஜேசன் மற்றும் எடிட்டர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப்படத்தில் அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார் அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர். படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார், நாங்கள் தான் பதறினோம். அவரை வைத்து இன்னும் 100 படம் என்றாலும் செய்வேன். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. எங்களை வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

பப்ளிக் எலெக்ஷன் ஓவர்… இப்போ ‘எலெக்ஷன்’ மூவி ரிலீஸ் அறிவிச்சாச்சு .. பார்க்க ரெடியா?

பப்ளிக் எலெக்ஷன் ஓவர்… இப்போ ‘எலெக்ஷன்’ மூவி ரிலீஸ் அறிவிச்சாச்சு .. பார்க்க ரெடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பப்ளிக் எலெக்ஷன் ஓவர்… இப்போ ‘எலெக்ஷன்’ மூவி ரிலீஸ் அறிவிச்சாச்சு .. பார்க்க ரெடியா?

*விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு!*

*ரீல் குட் பிலிம்ஸின் ‘எலக்சன்’ மே 17 ஆம் தேதி வெளியாகிறது!*

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌

‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எலக்சன்’ தொடர்பான பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டது.

இந்தப் பாடல் மக்களவை தேர்தல் கால தருணத்தில் வெளியிடப்பட்டதாலும், இப்படத்தின் மையக்கருவை பிரதிபலிக்கும் வகையில் பாடல் இடம் பெற்றதாலும், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.

அத்துடன் இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌ அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 17ஆம் தேதியன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய்குமார்- தமிழ்- ரீல் குட் பிலிம்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்.. படத்தில் இடம்பெற்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ, படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பிக் ஆகியவை தொடர்ந்து வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Vijayakumar starring Election movie release date

More Articles
Follows