தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உதயநிதி பகத் பாசில் வடிவேலு கீர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தின் இசை விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் கமல் மிஷ்கின் வெற்றிமாறன் எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயன் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேடை ஏறிய சிவகார்த்திகேயன் பேசும்போது கலகலப்பாக பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
அவர் பேசும்போது…
ஃபர்ஸ்ட் லுக் வரும் வரை உங்க கெட் அப் லுக்கை காட்டவேணாம்னு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொல்லிட்டார்.
கமல் சார் முன்னாடி இருக்கும்போது இதை கெட்டப்னுலாம் சொல்லாதீங்க ப்ளீஸ்.
சினிமாவில் விளையாட்டா நடிக்கத் தொடங்கி இப்போ விளையாட்டு துறை அமைச்சராகிட்டிங்க என உதயநிதியை கலாய்த்து பேசினார் சிவகார்த்திகேயன்.
மேலும் நானும் மாரி செல்வராஜ் பிரதரும் ஒண்ணா கிரிக்கெட் லாம் விளையாடி இருக்கோம். அப்போ அவர் ஒழுங்காக கிரிக்கெட் ஆடல ..ஆனா எடுத்த படம் எல்லாமே சிக்சர் தான்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.
sivakarthikeyan speech about Udhayanidhi in maamannan audio launch





