‘மாமன்னன்’ & ‘வாழை’ படங்களை தொடர்ந்து துருவ் படத்தை தொடங்கும் மாரி

‘மாமன்னன்’ & ‘வாழை’ படங்களை தொடர்ந்து துருவ் படத்தை தொடங்கும் மாரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

இந்த படம் பாராட்டுகளை பெற்ற நிலையில் அடுத்த படத்தையும் இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ்.

கலையரசன் மற்றும் நிகிலா விமல் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வாழை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இது சிறுவர்களை மையப்படுத்தி உருவான படமாகும். இந்த படங்களை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் மாரி செல்வராஜ்.

இதில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பரில் தொடங்க மாரி செல்வராஜ் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

தூத்துக்குடியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து பின்னர் கபடி போட்டியில் பல விருதுகளை வென்று இந்திய அரசின் அர்ஜுனா விருதையும் வென்றவர் மனத்தி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Mari Selvaraj next movie after Maamannan and Vaazhai

ஆழ்ந்த இரங்கல்… அண்ணாமலை சர்ச்சை..; பேரரசு உருக்கமான வேண்டுகோள்

ஆழ்ந்த இரங்கல்… அண்ணாமலை சர்ச்சை..; பேரரசு உருக்கமான வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இது அரசியல் பதிவல்ல
******************************
ஒரு கட்சியினர் அரசியல் எதிர்ப்பை காட்டுவதற்கு கருப்பு கொடி காட்டுவது, GO BACK என்று சொல்லுவது, ஒழிக ஒழிக என்று கோஷம் எழுப்புவது இதெல்லாம் சகஜம்.

இதே எதிர்ப்புமுறை அந்தக் கட்சியினருக்கு திரும்புவதும் சகஜம்.

ஆனால் இந்த *ஆழ்ந்த இரங்கல்* என்ற எதிர்ப்பு பதிவு அப்படி பார்த்து விட முடியாது. இன்று இது திரு. அண்ணாமலை அவர்களின் நடை பயணத்திற்கு எதிரானதாக இருக்கலாம்.

இதே போல் நாளை வேறு ஒரு தலைவரின் நடை பயணத்திற்கு இதே வாசகம் திரும்பினால் பரவாயில்லை. ஆனால் நாளை ஒரு தலைவரின் பிறந்தநாளுக்கோ அல்லது ஒரு கட்சிப்பிரமுகரின் திருமண விழாவிற்கோ வேறு குடும்ப விழாவிற்கோ இதே ஆழ்ந்த இரங்கல் என்ற துக்ககரமான வார்த்தை எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து பொதுத்தலங்களில் பரவி வந்தால் ஒருவேளை அந்த அரசியல் தலைவரோ, பிரமுகரோ தாங்கிக் கொள்ளலாம்.

ஆனால் அந்த வீட்டில் மனைவிமாரோ, தாயோ அல்லது மற்றவர்களோ ஒரு பிறந்த நாளின் போது, ஒரு நல்ல நாளின்போது இந்த மாதிரி லச்சக்கணக்கான ஆழ்ந்த இரங்கல் என்ற அபசகுண வார்த்தையை அவர்கள் பார்க்க நேர்கையில், அவர்களின் மனநிலையை எண்ணிப்பாருங்கள்!

அதே சமயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெய்வ பக்தி இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி விஷயங்கள் அவர்கள் மனநிலையை மிகவும் பாதிக்கும்!
தற்பொழுது பதிவிடுபவர்களுக்கு நாளை எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை.

கட்சி தலைமைக்குத் தான் நாளை மிகப் பெரிய பாதிப்பாக உருவாகும். கடவுள் நம்பிக்கை இருக்கோ, இல்லையோ, அறச்சொல் நாளை நமக்கே எதிர்ச் சொல்லாக மாறிவிடும் என்பது உண்மை! எதிர்ப்பை காட்ட எத்தனையோ வழி இருக்கிறது.

தயவு செய்து இந்த அறச்சொல்லை தவிர்ப்போம்!
அரசியல்வாதிக்காக அல்ல அவர்களின் குடும்பத்திற்காக!
நன்றி! வாழ்வோம்! வாழ வைப்போம்!

—இயக்குனர் பேரரசு

Director Perarasu emotional note about BJP Annamalai RIP

பிரபல நடிகரின் மகளும் நடிகையுமான கீர்த்தியை மணக்கும் அசோக் செல்வன்.!?

பிரபல நடிகரின் மகளும் நடிகையுமான கீர்த்தியை மணக்கும் அசோக் செல்வன்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஆகஸ்ட் 1ம் தேதி பிரபல நடிகர் கவின் திருமண செய்தி சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

மோனிகா என்ற தன் காதலியை ஆகஸ்ட் 20ஆம் தேதி மனக்கவிருக்கிறார் நடிகர் கவின்.

தற்போது மற்றொரு இளம் நடிகரின் திருமணம் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன.

அவர் வேறு யாரும் அல்ல.. சமீபத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அசோக் செல்வன் தான்

சூது கவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் ‘போர் தொழில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தையும் கொடுத்தார்.

கீர்த்தி பாண்டியன்

இந்த நிலையில் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் மணக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர்களின் திருமணம் இதே ஆண்டு 2023 செப்டம்பர் மாதத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இவர்களின் திருமண அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

நடிகர் அசோக் செல்வனுக்கு தற்போது 33 வயது ஆகிறது. கீர்த்தி பாண்டியனுக்கு 29 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தும்பா’ மற்றும் ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களில் நடித்தவர் கீர்த்தி பாண்டியன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கீர்த்தி பாண்டியன்

Ashok Selvan and Keerthy Pandian wedding news

D50 UPDATE : தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் அஜித்தின் ரீல் மகள்

D50 UPDATE : தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் அஜித்தின் ரீல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது தனுஷ் தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி அதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

D- 50வது படமாக உருவாகும் இந்த படத்தை தனுஷ் இயக்கி அவரே நடித்து வருகிறார்.

இவருடன் சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படம் வட சென்னையில் வாழும் சகோதரர்கள் பற்றிய படம் என கூறப்படுகிறது.

இதில் தனுஷின் சகோதரியாக துஷாரா விஜயன் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மற்றொரு முக்கிய வேடத்தில் அனிகா சுரேந்தர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விசுவாசம்’ ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக அனிகா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அனிகா சுரேந்தர்

Dhanush’s 50th film joins Anikha Surendran

பகத்பாசிலை தங்கள் சாதியினராக சித்தரிக்கும் நெட்டிசன்ஸ்.; ‘மாமன்னன்’ உதய் – மாரிக்கு வந்த தலைவலி

பகத்பாசிலை தங்கள் சாதியினராக சித்தரிக்கும் நெட்டிசன்ஸ்.; ‘மாமன்னன்’ உதய் – மாரிக்கு வந்த தலைவலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதியில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரித்து நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியானது.

இந்த படத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ‘மாமன்னன்’ என்ற கேரக்டரில் வடிவேல் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இதற்கான வெற்றிவிழாவும் கொண்டாடப்பட்டது. தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகிவிட்டது.

இந்த படத்தில் அனைவராலும் பாராட்டும்படியான நடிப்பை கொடுத்திருந்தார் வில்லன் ரத்தினவேலு கேரக்டரில் நடித்த பகத்பாசில்.

ஆனால் இவர் எந்த ஜாதியை சேர்ந்த கேரக்டர் என்பதை படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் காட்டவில்லை.

ஆனால் கடந்த சில தினங்களாக ரத்தினவேலு தங்களுடைய ஜாதி என ஒவ்வொரு அமைப்பினரும் புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு மீம்சுகளை போட்டு இணையதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

முக்கியமாக வன்னியர், கவுண்டர், படையாட்சி, தேவர், வேளாளர் உள்ளிட்ட பல ஜாதி பிரிவினர் தங்கள் ஜாதியை சேர்ந்தவராக சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

இது தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பகத்பாசில் கேரளாவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியர் ஆனாலும் அவர் தங்கள் ஜாதியை சேர்ந்தவராக சித்தரித்து போஸ்டர் ஒட்டி வருவதால் சாதி மோதல் உருவாகுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

‘மாமன்னன்’ என்ற படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கி அதில் பட்டியல் இனத்தவரின் முன்னேற்றத்தைப் பற்றி பேசினால் வில்லனாக நடித்த ஒருவர் கேரக்டரை தங்கள் சாதியினராக நெட்டிசன்கள் உருவாக்கி வருவது ‘மாமன்னன்’ படக்குழுவினருக்கு மாபெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது எனலாம்.

இனி மாரி செல்வராஜ், ரஞ்சித் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து ஜாதி படங்களை எடுத்தால் நாங்கள் இதுபோன்ற ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்குவோம் எனவும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Caste clash due to Maamannan Mari Selvaraj

‘ஜெயிலர்’ ட்ரைலர் அப்டேட்.; ப்ரோமோஷன் இல்லாத மல்டி ஸ்டார் படம் ஒர்க் அவுட் ஆகுமா.?

‘ஜெயிலர்’ ட்ரைலர் அப்டேட்.; ப்ரோமோஷன் இல்லாத மல்டி ஸ்டார் படம் ஒர்க் அவுட் ஆகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.

இந்தப் படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற காவலா… தலைவர் அலப்பறை… உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த இசை விழாவில் ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் டீசர் / ட்ரெய்லர் குறித்த எந்த அறிவிப்பு வெளியாகாதால் ரஜினி ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

மேலும் இது ஒரு மல்டி ஸ்டார் படம் என்பதால் போதுமான பிரமோஷன் இருந்தால் மட்டுமே நல்ல வசூலும் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களில் வெளியான பொன்னியின் செல்வன், விக்ரம், ஆர் ஆர் ஆர், புஷ்பா, கேஜிஎஃப் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

இந்த படங்களின் வெற்றிக்கு அந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரமோஷன் செய்தனர் என்பதே மிகப்பெரிய காரணம்.

தற்போது ‘ஜெயிலர்’ படத்திலும் ரஜினி மோகன்லால் சிவராஜ்குமார் சுனில் ஜாக்கிசரஃப் உள்ளிட்ட இந்திய பிரபல நட்சத்திரங்களர நடித்துள்ளனர்.

இவர்கள் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டால் மட்டுமே இந்த படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிக அளவில் அதிகரிக்க கூடும். ஆனால் இதுவரை எந்த ஒரு ப்ரோமோஷனிலும் அக்கறை காட்டாததால் சன் டிவி நிறுவனத்தின் மீது ரஜினி ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாம் இன்றோ அல்லது நாளையோ எதிர்பார்க்கலாம்.

No Trailer and No promotion for Jailer Rajini fans upset

More Articles
Follows