சிவகார்த்திகேயனின் நியூ லுக்கால் ஒரு படம் பண்ண அனிருத் அழைப்பு

Sivakarthikeyan new look photo shoot Anirudh ready with Theme musicபொன்ராம் இயக்கி வரும் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு வேடம் ஏற்பதால் ஒரு கெட் அப்புக்காக நீண்ட தாடி, அதிகமான தலை முடியை வைத்து பொது நிகழ்ச்சிகளில் காணப்பட்டார்.

இந்நிலையில் அதே கெட் அப்புடன் தற்போது ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதை ட்விட்டரில் பதிவிட ரசிகர்கள் புதிய படத்துக்கான தோற்றமா என்று பலரும் கேட்டனர். ஆனால் திடீர் என்று நடத்திய போட்டோஷூட்’ என்று மட்டும் பதில் அளித்தார்.

இதற்கு இசையமைப்பாளரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அனிருத், இந்த கெட்-அப்பில் ஒரு படம் பண்ணுவோமா? தீம் மியூசிக் ரெடி என்று ரிப்ளை செய்துள்ளார்.

உடனே சிவகார்த்திகேயன், ‘சார் என்ன சார் கேட்கிறீங்க… நம்ம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்க போகுது நான் ரெடி சார்…’ என பதிவு செய்துள்ளார்.

‘சீமராஜா’ படத்தில் சமந்தா உடன் கீர்த்தி சுரேஷ் அவர்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan new look photo shoot Anirudh ready with Theme music

Overall Rating : Not available

Latest Post