வைரலாகும் சிவகார்த்திகேயனின் இவன் ‘வேலைக்காரன்’டா பாடல்

வைரலாகும் சிவகார்த்திகேயனின் இவன் ‘வேலைக்காரன்’டா பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan in Ivan Velaikkaran da song goes viralசிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜீன் 5ஆம் தேதி வெளியானது.

இப்படத்தை ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் மாத இறுதியில் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் நண்பரும் பாடல் ஆசிரியருமான விவேக் அவர்கள் எழுதிய ‘இவன் வேலைக்காரன் டா’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது சிவகார்த்திகேயனின் புகழைப் பாடும் வகையில் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் இதை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த பாடலின் ஆரம்ப வரிகள் இதோ…

இவன் வேலைக்காரன் டா
ரொம்ப மூளைக்காரன் டா
திருச்சிக் காரன் டா
பேரு சிவகார்த்திகேயன் டா… என்ற வரிகளோடு பாடல் தொடங்குகிறது.

இதோ அந்த வரிகள் அடங்கிய வீடியோ…

கௌதம் கார்த்திக்கை சிம்பு உடன் ஒப்பிட்ட பாண்டிராஜ்

கௌதம் கார்த்திக்கை சிம்பு உடன் ஒப்பிட்ட பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pandirajஆர். கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த இவன் தந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாண்டிராஜ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

“கௌதம் கார்த்திக் நடித்துள்ள ரங்கூன் படத்தை எல்லாரும் பாராட்டி வருகிறார்கள்.

அவரிடம் நல்ல லுக் இருக்கிறது. டான்ஸ், பைட், என எல்லா திறமையும் இருக்கிறது.

சிம்புவிடம் இதுபோன்று நிறைய திறமைகள் இருக்கிறது. அவர் உயர்ந்த இடத்திற்கு வந்திருக்க வேண்டும்.

அவர் சின்ன வயசிலிருந்து நடித்துவருவதால் டயர்ட் ஆகிவிட்டார் என்று சொல்வார்.

இன்னும் நல்லா பன்னுங்க ப்ரோ என்று சொன்னால் சரி சரி என்பார்.

அவரிடம் சொன்னதைதான் உங்களிடமும் சொல்கிறேன். திறமை இருக்கிற நீங்க எல்லாம் நல்ல இடத்துக்கு வரனும்.” என்று பேசினார் பாண்டிராஜ்.

Director Pandiraj advice to Simbu and Gautham Karthik

ரம்ஜான் தினத்தில் கமலின் ‘விஸ்வரூப’ விருந்து

ரம்ஜான் தினத்தில் கமலின் ‘விஸ்வரூப’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Vishwaroopam2வருகிற ஜீன் 23ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

எனவே அந்த விடுமுறை தினத்தை முன்னிட்டு, சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் ஜெயம் ரவி நடித்துள்ள வனமகன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

இதே நாளில் கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம்2 படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

2017 தீபாவளி அன்று விஸ்வரூபம்2 படத்தை வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

Vishwaroopam2 teaser release on Ramzan 2017

துல்கர் சல்மானின் 3வது தமிழ் படத்தில் நான்கு நாயகிகள்

துல்கர் சல்மானின் 3வது தமிழ் படத்தில் நான்கு நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ra Karthikமலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்.

இவர் வாயை மூடி பேசவும் மற்றும் ஓகே கண்மணி ஆகிய நேரடி தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது 3வது தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் சார்பாக செல்வகுமார் தயாரிக்க, புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்குகிறார்.

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படத்தில் இவருடன் நான்கு நாயகிகளாக நடிக்கவிருக்கிறார்களாம்.

தற்போது முன்னனி நாயகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Dulquer Salmaans 3rd tamil project with four heroines

Exclusive : அட்லி பட அப்டேட்ஸ்: விஜய்யை அரெஸ்ட் செய்த சத்யராஜ்

Exclusive : அட்லி பட அப்டேட்ஸ்: விஜய்யை அரெஸ்ட் செய்த சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sathyarajஅட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய் 3 விதமாக கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு கேரக்டர் தந்தை என்றும் மற்ற இரண்டு கேரக்டர்கள் அவரது மகன்களாக நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தந்தை கேரக்டருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, மகன்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சமந்தா நடிக்கின்றனர்.

விஜய்யும் காஜலும் டாக்டர்களாக நடிக்க, அதன் சூட்டிங்கை ஐரோப்பா நாட்டில் படமாக்கினார் அட்லி.

தற்போது விஜய், சமந்தா காட்சிகளை சென்னையருகே படமாக்கி வருகிறார்.

இந்த விஜய் கேரக்டர்தான் மாறா என்று அழைக்கப்படுவதை பார்த்தோம்.

இந்நிலையில் ஒரு சூழ்நிலையில் இந்த மாறா கேரக்டரை போலீஸ் சத்யராஜ் அரெஸ்ட் செய்வது போல காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

அப்போது மக்கள் திரண்டு வந்து, மாறாவை விடுதலை செய் என கோஷமிட்டு போராடுவதாக காட்சிகளையும் படமாக்கியுள்ளார் அட்லி.

Sathyaraj arrested Vijay Atlee 3 movie updates

தனுஷ் படத்தில் 3 வேடங்களில் கலக்கும் சமுத்திரக்கனி

தனுஷ் படத்தில் 3 வேடங்களில் கலக்கும் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vada-Chennaiதனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முழுக்க ஒரு சிறைச்சாலை செட்டுக்குள்ளேயே படமாக்கியிருக்கிறார்களாம்.

3 பாகங்களாக உருவாகி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இதில் தனுஷ் உடன் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் சமுத்திரக்கனி 3 வேடங்களில் நடித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.

துனுஷ் கேரக்டர் அளவுக்கு சமுத்திரக்கனி கேரக்டரும் பெரிதாக பேசப்படும் என சொல்லப்படுகிறது.

In Dhanush’s Vadachennai movie Samuthirakani plays 3 characters

More Articles
Follows