தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரசிகர்களை போற்றும் வகையில் நடிகர்கள் அவ்வப்போது தங்கள் படங்களில் காட்சிகளை வைப்பது உண்டு.அதுபோல் நடிகர்களை போற்றும் வகையில் நடிகரின் பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ரசிகர்கள்.
ரஜினி, கமல் பெயரில் தொடங்கும் நிறைய ரசிகர்களின் பெயர்களை நாம் பார்த்திருக்கிறோம்.இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கும் இப்படி ஒரு ரசிகர் கிடைத்துள்ளாராம்.
இவரது ரசிகரான ரஜினிவேல்முருகன் என்பவர் தேனியில் ரஜினிமுருகன் என்ற பெயரில் ஒரு டீக்கடையை திறந்துள்ளார்.அந்த கடையில் போர்டில் ரஜினிமுருகன் பெயரும் ரஜினி படமும் இடம்பெற்றுள்ளது.
இக்கடையின் அருகே சிவகார்த்திகேயனின் பேனர் ஒன்றையும் பெரிய அளவில் வைத்துள்ளாராம்.இதனையறிந்த சிவகார்த்திகேயனின் சிலிர்த்து போய் விட்டாராம்.
எனவே, அந்த சின்சியர் ரசிகருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.