தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.
இதனையடுத்து விஜய், தனுஷ் ஆகியோருடன் ஜோடி போட்டார்.
தற்போது சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் விக்ரம் உடன் சாமி2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் அண்மையில் அளித்த பேட்டியில் இவர் கூறியதாவது…
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் இப்படியொரு இடம் கிடைக்கும் என நினைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் டாப் ஹீரோக்கள் என்னை அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தந்தார்கள்.
அந்த வகையில் நான் ஒரு லக்கியான நடிகை என்றே சொல்லலாம்.
அப்போது அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்? என்று கேட்டதற்கு…
தெரியவில்லை. நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.
Keerthy Suresh talks about Acting with Ajith