ரூ. 20 கோடி நஷ்டம்.. இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார்… ஞானவேல்ராஜா மனுத்தாக்கல்.. சிக்கலில் சிவகார்த்திகேயன்

ரூ. 20 கோடி நஷ்டம்.. இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார்… ஞானவேல்ராஜா மனுத்தாக்கல்.. சிக்கலில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கிய மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தில் தனக்கு சம்பளம் ரூ. 15 கோடி பேசப்பட்டதாகவும் ஆனால் இன்னும் 4 கோடி பாக்கி உள்ளதாகவும் அதனை பெற்றுத் தர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில்…

‘ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக 1 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அப்போது 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் 2013 ஆண்டில் செய்யப்பட்டது. அப்போது படம் எடுக்க முடியாத சூழ்நிலையால் மீண்டும் 2018-ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டது.

சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

ஆனால், ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அப்படத்தை இயக்குநர் ராஜேஷ்தான் இயக்க வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தினார்.

இதனால்தான் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தால் எனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி எனக்கு அழுத்தம் கொடுத்தார்.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்க வைத்து விட வேண்டாம் என அப்போது சிவகார்த்திகேயனை தெரிவித்தார்.

ஆனால் தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர், உண்மைத் தகவல்களை மறைத்துள்ளார்.

எனவே அந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இந்த பதில் மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Producer Gnanavelraja accuses Sivakarthikeyan of suppressing facts

என் காதலே… உன்னை அறிந்து கொள்ள…; காதலரை வாழ்த்திய ஸ்ருதிஹாசன்

என் காதலே… உன்னை அறிந்து கொள்ள…; காதலரை வாழ்த்திய ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன்.

இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை என்பதால் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது பிரபாஸ் உடன் சலார், சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவின் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தன் காதலன் சாந்தனுவுக்கு பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தி பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.,

அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,….

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனது காதலே, உன்னை அறிந்து கொள்வதற்கு நான் தினமும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்.

ஏனெனில் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… என்று பதிவிட்டுள்ளார்.

இத்துடன் அவருடன் எடுத்த போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி.

Shruti Haasan’s Birthday Wish For Boyfriend Santanu Hazarika

‘மன்மதலீலை’ பட ரிலீஸில் சிக்கல்..; வெங்கட் பிரபுவால் வந்த வேதனை..?

‘மன்மதலீலை’ பட ரிலீஸில் சிக்கல்..; வெங்கட் பிரபுவால் வந்த வேதனை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று வெள்ளிக்கிழமை ஏப்ரல் மாதம் 1ம் தேதி “செல்ஃபி, மன்மத லீலை, இடியட், பூ சாண்டி வரான்” ஆகிய 4 படங்கள் தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் செல்ஃபி, ‘மன்மத லீலை, இடியட்’ ஆகிய படங்களுக்கு காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

அதன்படி 8 மணி மற்றும் 8.30 ஆகிய காட்சிகளுக்கான முன்பதிவும் நடைபெற்றது.

இந்த நிலையில் மன்மதலீலை பட காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது.

‘மன்மத லீலை’ பட தயாரிப்பாளருக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இடையில் ஏற்பட்ட சிக்கல்தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்தப்படத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெங்கட் பிரபு முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துள்ளார்.

ஆனால் அவரின் தொகையை படத்தின் தயாரிப்பாளர் தரவில்லை என்பதால் பணத்தைக் கொடுத்த பின்னரே படத்தை ரிலீஸ் செய்ய வெங்கட் பிரவு சொன்னதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இவர்களின் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் மதியக் காட்சிகள் முதல் படம் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

Venkat Prabhu’s Manmatha leelai faces new issue

Hats-off மகனே.. ‘மகான்’ ஒரு ‘sweet’ கனவாய்..; சிலிர்க்கும் ‘சீயான்’ விக்ரம்

Hats-off மகனே.. ‘மகான்’ ஒரு ‘sweet’ கனவாய்..; சிலிர்க்கும் ‘சீயான்’ விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நம்ம வாழ்க்கை.. சும்மா ஏதோ ஒரு பணக்காரனா வாழ்ந்திட்டு செத்துடணுங்கிற வாழ்க்கையா இருக்கக்கூடாது.
ஒரு வாழ்க்கை. வரலாறா வாழ்ந்திடனும்’.

– காந்தி மகான்.

வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியை தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு ‘sweet’ கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரமாண்ட வெற்றி படம் என்று நினைக்கும்போது.. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

Social mediaவில் ரீல்ஸ், மீம்ஸ், டிவீட்ஸ் & மெஸெஜெஸ் வாயிலாக மகானை கொண்டாடிய அனைவரின் அன்பையும், ஆதரவையும் உணர்ந்தேன். இந்த அன்புதான் என்னை மென்மேலும் பாடுபட ஊக்குவிக்கிறது. இதை என்றும் அன்புடனும், பணிவுடனும் நன்றி மறவாமல் நினைவில் கொள்வேன்.

அப்படியே ஒரு வியக்கத்தக்க கேன்வாசில் மகானை கொண்டு போய் நிறுத்திய கார்த்திக் சுப்புராஜின் கைவண்ணம், எனக்கு அன்பாய் வழங்கிய சுதந்திரம், சின்ன சின்ன விஷயங்களை ரசித்து வழி நடத்திய விதம்.. அழகு. நன்றிகள் பல்லாயிரம்.

பாபிக்கு thanx. நீ இல்லாமல் என் சத்யா சாத்தியமே இல்லை. சிறப்பாக நடிப்பது தனக்கொரு இயல்பான talentனு மீண்டும் சுட்டி காட்டிய சிம்ரனுக்கு thank you.

த்ருவ். தனக்குள் இருக்கும் திறமையையும், தனித்துவத்தையும் வெளியே கொண்டுவந்து சவாலாக இமேஜ் தாண்டியதிற்கு.. hats-off மகனே.

வியர்வை, ரத்தம், (நிஜமான) கண்ணீர் சிந்தி மகானின் வெற்றிக்கு உழைத்த மகான் gangற்கு ஒரு பெரிய salute. எங்களுடன் ‘நீயா, நானா’ என்று வெறியோடு போட்டி போட்டு கலக்கிய சனா, ஷ்ரேயெஸ், தினேஷ்.. Rock On!

மகானை நிஜமாக்கிய தயாரிப்பாளருக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இல்லங்களிலும், உள்ளங்களிலும் கொண்டு சேர்த்த அமேசான் பிரைம் வீடியோவுக்கும் a big thank you..

இவ்வாறு மகான் வெற்றி குறித்து சிலிர்க்கிறார் சீயான் விக்ரம்.

Hats off Son.. Mahaan is unforgettable experience says Vikram

3 ஹீரோஸ்… 3 மூவிஸ்… ஆனா ஒரே டைட்டில்..; கதையாச்சும் மாறுமா.? கன்ப்யூசனில் ரசிகர்கள்

3 ஹீரோஸ்… 3 மூவிஸ்… ஆனா ஒரே டைட்டில்..; கதையாச்சும் மாறுமா.? கன்ப்யூசனில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பில்லா, தீ, பொல்லாதவன், மாப்பிள்ளை, காக்கி சட்டை, படிக்காதவன், தங்கமகன் இப்படி ஒரே பெயரில் 2 படங்கள் வந்துள்ளதை பார்த்து இருக்கிறோம்.

ஒரு படம் வந்தால் பல வருடங்கள் கழித்து அதே பெயரில் மற்றொரு படம் வந்திருக்கும்.. சில நேரம் ரீமேக்.. சில நேரம் புதுக்கதையுடன் வந்திருக்கும்.

ஆனால் இப்போது ஒரே பெயரில் சில நாட்கள் இடைவெளியில் வெவ்வேறு மொழிகளில் 3 படங்கள் தயாராகி வருகிறது.

அந்த பெயர்… நம் தேசிய கீதத்தை குறிக்கும் ‘ஜன கண மன’….

தமிழில் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்சி நடிக்கும் படத்தின் பெயர் ‘ஜன கண மன’. தான்.

மலையாளத்தில் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘ஜன கன மன’.

டிஜோ ஜோஸ் ஆன்டனி இயக்கத்தில் உர்ருவாகியுள்ள இந்தப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

பான் இந்தியா படமாக தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அறிவிக்கப்பட்ட படமும் ‘ஜன கண மன’. சுருக்கமாக JGM.

ரசிகர்கள் கன்ப்யூஸ் ஆகாமல் படத்தை பார்த்து ரசித்தால் ஓகே தான்.

டைட்டில் மட்டும்தானே ஒன்னு.. கதை வேற தானே..

Vijay Devarakonda new film title gets new problem

‘ஹரா’வில் அல்டிமேட் கூட்டணி..; யோகிபாபுவை யோக பாபுவாக மாற்றிய விஜய்ஸ்ரீ

‘ஹரா’வில் அல்டிமேட் கூட்டணி..; யோகிபாபுவை யோக பாபுவாக மாற்றிய விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி – கமலுக்கு நிகரான ஹீரோவாக பேசப்பட்டவர் நடிகர் மோகன்.

‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ என பல படங்கள் இவரது பெயரை இன்றவும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

இவரது பல படங்கள் 175 நாட்கள் தியேட்டர்களில் ஓடி வெள்ளி விழா கண்டதால் இவரை வெள்ளி விழா நாயகன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியதால் பின்னர் நடிக்கவில்லை.

ஆனாலும் ஹீரோ வாய்ப்புக்காக மட்டுமே காத்திருந்தார் மோகன்.

இவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகனை நாயகனாக்குகிறார் ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீ.

இந்நிலையில் இந்த படத்துக்கு ‘ஹரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் குஷ்பு மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2வது வாரத்தில் கோவை பகுதிகளில் தொடங்கவுள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘ஹரா’ படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படம் தந்தை மகள் சென்டிமென்ட் கதையில் உருவாகிறது.

2022 தீபாவளிக்கு ‘ஹரா’ படம் ரிலீஸ் எனவும் விஜய்ஸ்ரீ அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் யோகி பாபு நடிக்க சம்மதித்திருப்பதை உறுதி செய்து டிவீட் செய்துள்ளார் டைரக்டர் விஜய்ஸ்ரீ.

அந்த டிவீட்டில் ‘ஹரா படத்தில் யோகிபாபு நடிக்க சம்மதித்ததில் மோகன் தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்

அதேபோல் நடிகர் யோகி பாபுவும் மோகன் சார் மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் இருப்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்’ எனப் பதிவிட்டுள்ளார் விஜய்ஸ்ரீ.

Yogi Babu is on board for Mohan’s Haraa

More Articles
Follows